Home /News /technology /

டிவிட்டர் என்றாலே சர்ச்சை தானா.? இனி தலைப்புச் செய்திகளுக்கு குறைவிருக்காது - பராக் அகர்வால்.!

டிவிட்டர் என்றாலே சர்ச்சை தானா.? இனி தலைப்புச் செய்திகளுக்கு குறைவிருக்காது - பராக் அகர்வால்.!

 ட்விட்டர்

ட்விட்டர்

Twitter | யூசர்களின் டேட்டாவை பாதுகாப்பதற்காகவும், சென்சிட்டிவான விஷயங்கள் பத்திரமாக இருப்பதற்காக, டிவிட்டர் ஊழியர்களின் உழைப்பை மறுக்கவே முடியாது என்றும், அதில் தொடர்ந்து ஊழியர்கள் ஈடுபடுவர்கள் என்றும் அகர்வால் உறுதியளித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
சமூக ஊடகங்களில், மைக்ரோ பிளாக்கிங் தளமாக முன்னணியில் இருக்கும் ட்விட்டர் பற்றி தலைப்பு செய்தி வராத நாட்கள் மிகக் குறைவு. அதிலும் கடந்த சில மாதங்களாக ட்விட்டர் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. ஒரு பக்கம் எலான் மாஸ்க் ட்விட்டரை வாங்க போகிறேன் என்று கூறி, அதைப் பற்றிய செய்திகள் வைரலாக பகிரப்பட்டு வந்தன. அது மட்டும் தான் பிரச்சனையா என்று பார்த்தால், பாட்ஸ் பயன்படுத்துவது, யூசர்கள் டேட்டாவை விற்பனை செய்தது என்று டிவிட்டர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கும் குறைவில்லை.

சமீபத்தில் டிவிட்டரின் முன்னாள் செக்யூரிட்டி தலைமை பாட்ஸ் பற்றிய செய்தியை கூறி பரபரப்பாக்கினார். இதை உறுதி செய்யும் விதமாக, டிவிட்டர் தற்போதைய CEO வான பராக் அகர்வாலும், ‘டிவிட்டர் பற்றிய தலைப்புச் செய்திகளுக்குக் இனி குறையே இருக்காது. நீங்கள் தொடர்ந்து நிறைய விஷயங்களை பார்ப்பீர்கள்’ என்று தெரிவித்திருந்தார். அப்படி என்ன தான் நடக்கிறது?

டிவிட்டர் நிறுவனத்தின், செக்யூரிட்டி தலைமையாக பீட்டர் மட்ஜ் ஜாட்கோ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருடைய பர்ஃபாமன்ஸ் சரியில்லை என்ற காரணத்தினால் ஜனவரி மாதமே இவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார். செக்யூரிட்டி தலைமையாக பணியாற்றி வந்த ஜாட்கோ டிவிட்டரின் பாட்ஸ் பத்தி பலவித தகவல்களை வெளியிட்டிருந்தார்.



ஆனால் டிவிட்டர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரியான பராக் அகர்வால் அவருடைய கூற்றுகளை உடனடியாக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஜாட்கோ கூறிய தகவல்கள் அனைத்துமே தவறாக வழிநடத்துவதாகவும், முரணாகவும், துல்லியமானதாகவும் இல்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். டிவிட்டர் பாட்ஸ் பயன்படுத்துகிறது என்பது பற்றி நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இப்போதுதான் முதல் முறையாக அகர்வால் அதைப் பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார். பாட்ஸ் எண்ணிக்கை பற்றி ஜாட்கோ கூறியது தவறான தகவல் என்றும் இது டிவிட்டரின் யூசர் டேட்டா பாதுகாப்பு குறித்து ஒழுங்குமுறை அதிகாரிகளை தவறாக வழிநடத்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

Also Read : உங்களிடம் இருக்கும் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி சேவைகள் பயன்படுத்த முடியுமா?

டிவிட்டர் யூஸர்களுக்கு மட்டுமல்லாமல் நிறுவனத்தின் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பின்வரும் செய்தியை அனுப்பியிருந்தார் அகர்வால்- “டிவிட்டரின் பிரைவசி, பாதுகாப்பு மற்றும் டேட்டா ப்ரொடக்ஷன் ஆகியவை பற்றி மட்ஜ் ஜாட்கோ என்ற முன்னாள் ஊழியர் பகிர்ந்ததாக, செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் 2022 ஜனவரி மாதம், தலைமைத்துவம் குறைபாடு மற்றும் சரியாக வேலைசெய்யவில்லை என்ற காரங்களுக்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.”



டிவிட்டர் நிறுவனத்தில் என்ன நடக்கின்றது என்பது பற்றி ஜாட்கோ வெளியிட்டது ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தினாலும், மற்றொருபுறம் நேற்று ஜாட்கோ மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளார். அதில் இந்திய அரசாங்கம் டிவிட்டரிடம் ஒரு அரசாங்க ஏஜென்டை பணியில் நியமிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், அந்த ஏஜென்ட்டுக்கு டிவிட்டர் யூசர்களின் அனைத்து பிரைவசி டேட்டாவிற்கான அக்சஸ் வழங்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த செய்தி வெளியான உடனேயே டிவிட்டர் நிறுவனம் இந்த செய்தி முழுவதும் தவறானது என்று மறுப்பு அறிக்கையையும் வெளியிட்டு இருந்தது.

Also Read : பாதுகாப்பை பலப்படுத்திய வாட்ஸ்அப்... இனி இதை செய்ய முடியாது.!

ஜாட்கோ மிகப்பெரிய பொறுப்பில் இருந்தார் என்றும், பல முக்கியமான இடங்களில் அவருக்கு பெரிய கடமைகளும் பொறுப்பும் இருந்தன என்றும், அவரை பணி நீக்கம் செய்ததில் இருந்து இந்த ஆறு மாத காலம், நிறுவனத்தை மிகவும் தவறாக வெளிக்காட்டுகிறார் என்பதை வருத்தத்தோடு அகர்வால் தெரிவித்தார்.



ஆனால் யூசர்களின் டேட்டாவை பாதுகாப்பதற்காகவும், சென்சிட்டிவான விஷயங்கள் பத்திரமாக இருப்பதற்காக, டிவிட்டர் ஊழியர்களின் உழைப்பை மறுக்கவே முடியாது என்றும், அதில் தொடர்ந்து ஊழியர்கள் ஈடுபடுவர்கள் என்றும் அகர்வால் உறுதியளித்தார்.

இந்தப் பிரச்சனைகள் தீரும் வரை, டிவிட்டர் பற்றிய செய்திகள் தலைப்புச்செய்தியாக வருவதை தடுக்க முடியாது!
Published by:Selvi M
First published:

Tags: Technology, Twitter

அடுத்த செய்தி