Home /News /technology /

உங்கள் ஃபோன் அதிக டேட்டாவைப் பயன்படுத்துகிறதா.? டேட்டாவை சேமிப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் ஃபோன் அதிக டேட்டாவைப் பயன்படுத்துகிறதா.? டேட்டாவை சேமிப்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

Mobile Data Limit | ஒரு மாதத்திற்கு நீங்கள் 50 ஜிபி டேட்டா தான் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களுடைய டேட்டா லிமிட்டை நெருங்கும் பொழுது உங்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும்.

தற்பொழுது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத ஆட்கள் மிக மிகக் குறைவு என்று கூறும் அளவுக்கு அனைவரின் வாழ்விலும் ஆண்ட்ராய்டு போன்கள் ஒரு அங்கமாக மாறிவிட்டன. அதேபோல இன்டர்நெட் பயன்பாடும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஒரு மாதத்திற்கு 100MB, 300MB, ஒரு நாளைக்கு 10MB டேட்டா தான் லிமிட் என்ற ரீதியில் மிக மிக குறைந்த அளவில் டேட்டா பயன்பாடு இருந்தது.

தற்போது எல்லார் கையிலும் ஆண்டிராய்டு ஃபோன்கள் மற்றும் ஏகப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. பெரும்பாலான நெட்வர்க்குகள் அன்லிமிடெட் டேட்டா அல்லது ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 2GB டேட்டா என்று வழங்குவதன் மூலம் எந்த அளவுக்கு அல்லது எவ்வளவு டேட்டா பயன்படுத்துகிறோம் என்ற வரைமுறையே தெரியாமல் போய்விட்டது.

இணைய பயன்பாட்டை தேவையான அளவு மட்டும் பயன்படுத்தினாலும் தங்கள் பயன்படுத்துவதை விட அதிகமாக டேட்டா செலவாகிறது என்ற புகாரும் ஒரு சிலரிடம் இருக்கின்றன. உங்களுடைய ஆண்ட்ராய்டு ஃபோனில் அதிகமாக டேட்டா செலவாகி கொண்டிருப்பதாக நீங்கள் கருதினால், டேட்டாவை எப்படி சேமிப்பது மற்றும் டேட்டா லிமிட் எப்படி அமைப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.



 

 

ஒவ்வொரு புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனிலும் ஏற்கனவே உள்ள அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டு, வேறு சில புதிய அம்சங்களும் சேர்க்கப்படுகின்றன. எனவே டேட்டா கட்டுப்பாடு மற்றும் டேட்டா சேமிப்பு இரண்டுமே ஆண்ட்ராய்டு 12 வெர்ஷனில் மிகவும் எளிதாக அமைக்க முடியும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டேட்டா பயன்படுத்துகிறீர்கள் என்ற ரீதியில், நீங்கள் டேட்டா லிமிட்டை செட் செய்ய முடியும்.

Also Read : எச்சரிக்கை! இந்த ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் நீங்கள் உடனடியாக நீக்கவும்

உதாரணமாக ஒரு மாதத்திற்கு நீங்கள் 50 ஜிபி டேட்டா தான் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களுடைய டேட்டா லிமிட்டை நெருங்கும் பொழுது உங்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும். அது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டாவிற்கு மேல் உங்கள் போன் டேட்டாவை பயன்படுத்தக்கூடாது என்ற ரீதியிலும் நீங்கள் லிமிட் செய்ய முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

Also Read : Play Store-ல் இருந்து சுமார் 9 லட்சம் ஆப்ஸ்களை நீக்கும் கூகுள்!

* உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் Settings (செட்டிங்க்ஸ்) என்பதற்கு செல்லுங்கள்
* அடுத்ததாக Network and Internet> Internet. (நெட்வொர்க் மற்றும் இன்டர்நெட் > இன்டர்நெட்) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யுங்கள்
* அடுத்ததாக, உங்கள் நெட்வொர்க் கேரியரின் பெயரில் இருக்கும் கியர் ஐக்கானைக் கிளிக் செய்யவும்
* உங்களுக்கு காண்பிக்கப்படும் திரையில், நீங்கள் தற்போதைய மாதத்தில் எவ்வளவு டேட்டா செலவு செய்துள்ளீர்கள் என்பது தெரியும். கீழே ஸ்க்ரோல் செய்து, “Data and Warning Limit” (டேட்டா மற்றும் வார்னிங் லிமிட்) என்பதைத் தேர்வு செய்யவும்
* Mobile data usage cycle (மொபைல் டேட்டா பயன்பாட்டு சைக்கிள்) என்பதைத் தட்டவும், பின்னர் உங்கள் மாதாந்திர சைக்கிளை அமைக்கவும். இந்த தேர்வு மூலம், உங்கள் மாதந்திர டேட்டா சைக்கிள் என்று தொடங்குகிறது என்பதை முடிவு செய்யலாம்.
* அடுத்ததாக திரையில் காண்பிக்கப்படும் Set data warning on என்ற டாகில் ஆப்ஷனை ‘ஆன்’ செய்யவும். நீங்கள் எவ்வளவு டேட்டா பயன்படுத்தலாம் என்ற அளவை உள்ளிடுங்கள்.

நீங்கள் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக டேட்டாவை உங்கள் மொபைலில் பயன்படுத்த முடியாது.
Published by:Selvi M
First published:

Tags: Mobile Data, Smartphone, Technology

அடுத்த செய்தி