கோவிட் காரணமாக சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தற்போது அனைவரும் ஆன்லைன் உலகில் இணைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அனைத்தும் ஆன்லைன் மயம் ஆகிவிட்ட நிலையில் ஒரு சில கிளிக்குகளில் அணுகக்கூடிய டேட்டாக்களை பாதுகாப்பது தற்போது ஒரு முக்கிய கவலையாக இருக்கிறது. சேட்டிங் ஆப்ஸ்கள் முதல் கல்விக்கான பணம் செலுத்துதல் மற்றும் இன்னும் பல, அனைத்தும் உங்கள் மொபைல், லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்பில் இன்டர்நெட் மற்றும் அப்ளிகேஷன்ஸ், வெப்சைட்ஸ் போன்றவற்றின் உதவியுடன் செய்யப்படுகிறது. எனினும் ஆன்லைன் சேவைகளை பெற உங்கள் பெயர், முகவரி, இருப்பிடம் மற்றும் சில நேரங்களில் உங்கள் வங்கி விவரங்கள் போன்ற அடிப்படை விவரங்களை வழங்க வேண்டும்.
டேட்டா பிரைவசி நாளானது (Data Privacy Day) தரவு பாதுகாப்பிற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. டேட்டா பிரைவசி நாளானது முதன்மையாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இஸ்ரேலில் அனுசரிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் தனியுரிமைக் கவலைகளுக்கு மத்தியில், பிற நாடுகளிலும் தற்போது Data Privacy Day அனுசரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்திய காலங்களில் மிகவும் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றாக டேட்டா பிரைவசி மாறி இருக்கிறது. குறிப்பாக தொற்றுநோயை அடுத்து சைபர் கிரைம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உங்கள் தனியுரிமையை அதாவது பிரைவசியை பாதுகாக்க எடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகளை பற்றி இங்கே பார்க்கலாம். தனிநபருக்கு ஆன்லைன் பாதுகாப்பை உறுதி செய்யவே டேட்டா பிரைவசி நாள் அனுசரிக்கப்படுகிறது. ஒருவரின் பிரைவசியை பாதுகாப்பதில் தோல்வி என்பது நிதி இழப்புகள் மட்டுமின்றி பல மோசடிகளுக்கு வழிவகுக்கும்.
மொபைலை அன்லாக் செய்ய பயோமெட்ரிக் லாக் அல்லது ஃபேஸ் ஐடி:
உங்கள் ஸ்மார்ட் ஃபோனை அன்லாக் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. பேட்டர்ன் அல்லது நம்பர் லாக் வைத்திருப்பதை தவிர, அது தவறான கைகளில் சிக்காமல் இருப்பதை உறுதி செய்ய, ஃபிங்கர் பிரிண்ட் மற்றும் ஃபேஸ் ஐடி பயன்படுத்தி உங்கள் மொபைலை அன்லாக் செய்யலாம்.
Also Read : இன்ஸ்டாகிராமிற்கு வரும் 5 முக்கியமான அம்சங்கள்!
டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன்:
இது வாட்ஸ்அப், பேஸ்புக், ஜிமெயில் போன்ற ஆப்களில் கிடைக்கிறது. இது யூஸர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்க உதவுகிறது.
டிஸ்ஸப்பியரிங் மெசேஜஸ்:
ஒருமுறை அனுப்பப்பட்டால் 7 நாட்களுக்குப் பிறகு மறைந்துவிடும் மெசேஜ்களை யூஸர்கள் அனுப்ப இந்த அம்சத்தை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது. அதே போல மெசேஜிங் அப்ளிகேஷனின் ‘view once’ அம்சம் பயன்படுத்தினால் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை ஓபன் செய்து பார்த்த பிறகு மறைந்துவிடும்.
செக்யூரிட்டி பின்:
Paytm, Google Pay போன்ற பேமென்ட்ஸ் ஆப்ஸ்களை ஓபன் செய்ய வெவ்வேறு செக்யூரிட்டி பின்களைப் பயன்படுத்தலாம். உங்கள் மொபைலை யாரேனும் அன்லாக் செய்தாலும், அவர்களால் பேமென்ட்ஸ் ஆப்ஸ்களை எளிதாக அணுக முடியாது என்பதை உறுதிப்படுத்த இது உதவும்.
Also Read : வாட்ஸ் அப் மெசேஜ் டெலீட் கால அவகாசம் நீட்டிப்பு?
ஃபார்வேர்டு லிமிட்ஸ்:
ஒரே நேரத்தில் 5 சேட்களுக்கு மட்டுமே மெசேஜ்களை அனுப்ப WhatsApp லிமிட் நிர்ணயித்துள்ளது. தவறான தகவல் பரவுவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.