Home /News /technology /

டிஜிட்டல் மோசடியில் பாதுகாப்பாக இருப்பது எப்படி.? டிப்ஸ்.!

டிஜிட்டல் மோசடியில் பாதுகாப்பாக இருப்பது எப்படி.? டிப்ஸ்.!

மாதிரி படம்

மாதிரி படம்

Online Fraud | போலியான கிரிப்டோ கரன்சி பற்றிய தகவல்களைப் பரப்பி, லட்சகணக்கில் தொகையை கொள்ளையடிப்பது. இதில் கடந்த சில மாதங்களில் சில பிரபலங்களும் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ டு இசட் எல்லா பொருட்கள் மற்றும் சேவைகளையும் தற்போது ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ள முடிவதால் டிஜிட்டல் பேமென்ட் நிறுவனங்களும் அதிகரித்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆன்லைன் பேமென்ட் என்றாலே இன்டர்நெட் பேங்கிங் மட்டும் தான் இருந்தது. அதற்கு பிறகு ஒவ்வொரு வங்கியின் செயலிகள் அறிமுகமாகி தற்போது பல்வேறு மொபைல் பேமென்ட் ஆப்கள் மற்றும் கேட்வேக்கள் வந்துள்ளன.

இந்நிலையில் ஆன்லைனில் எதற்கு செலுத்தும் பேமண்ட் சரியானது அல்லது எதெல்லாம் பிராடு ஏமாற்றுவேலை என்பதைத் தெரிந்து கொள்வது கடினம் தான். கிட்டத்தட்ட தினமும் சிலர் ஆன்லைன் ஃபிராடால் பாதிக்கப்படுகிறார்கள், கணிசமான தொகையை இழக்கிறார்கள். வங்கி கஸ்டமர் சர்வீசில் இருந்து பேசுகிறேன் என்று ஏடிஎம் நம்பர் அல்லது அல்லது கிரெடிட் கார்டு நம்பர்களை வாங்கி, கணக்கில் இருக்கும் தொகையை முழுவதுமாக அபேஸ் செய்வது நாட்டில் பல முறை நடந்துள்ளது. இதை தவிர்த்து பல்வேறு விதமான ஆன்லைன் மோசடிகளும் நடந்து வருகிறது. ஆன்லைன் மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளவும் பணத்தை இழக்காமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்பது பற்றிய விவரங்கள் இங்கே.

என்னென்ன மோசடிகள் நடைபெறுகின்றன:

KYC மோசடி: வங்கியின் அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநதியாக போலியாக வேடமிட்டு, know your customer என்ற வாடிக்கையாளரின் விவரங்களைப் பெறுதல்

சிம் போர்ட்டல் மோசடி: ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மாறும் போது, கிட்டத்தட்ட 24 மணி நேரத்துக்கு சிம் கார்டு இயங்காது. இடைப்பட்ட நேரத்தில், உங்கள் சிம் கார்டு தகவலை அறிந்து, போலி கார்டை அதே நம்பருக்கு பெற்று வங்கி லாகின் முதல் அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை விவரங்களையும் மாற்றிவிடுவார்கள்.QR கோடு மோசடி : மிகவும் பரவலாக நடைபெறும் மோசடி QR கோடு மோசடி. ஸ்கேன் செய்து ஒரே நொடியில் பேமெண்ட் செலுத்தும் வசதி இருந்தாலும், போலி QR கோடுகள் மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் பணத்தை இழந்துள்ளனர்.

கஸ்டமர் கேர் மோசடி : மேலே கூறியது போல, வங்கியில் அல்லது நிதி நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன் என்று பணம் பறிக்கும் நபர்கள்.

கிரிப்டோ கரன்சி மோசடி : போலியான கிரிப்டோ கரன்சி பற்றிய தகவல்களைப் பரப்பி, லட்சகணக்கில் தொகையை கொள்ளையடிப்பது. இதில் கடந்த சில மாதங்களில் சில பிரபலங்களும் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : ஆன்லைன் ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் பணத்தை திருடக்கூடும் - ஆர்பிஐ எச்சரிக்கை

டிஜிட்டல் மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

நீங்கள் எந்த செயலியில் எந்த பேமண்ட் செய்கிறீர்கள் அல்லது எதை வாங்குகிறீர்கள் என்பது பற்றிய அனைத்து விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் உங்கள் வங்கிக் கணக்கு அறிக்கையை முறையாக கவனித்து நீங்கள் ஏதாவது ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளவில்லை என்றால் உடனடியாக அதைப்பற்றி புகார் அளிக்கவும். நீங்கள் செய்யும் செலவுகளை டிராக் செய்து வந்தாலே மோசடியிலிருந்து எளிதாக பாதுகாத்துக் கொள்ளலாம்.கஸ்டமர் சர்வீஸ் பிரதிநிதிகளை பொறுத்தவரை எந்த நிறுவனம் வங்கி அல்லது சேவையாக இருந்தாலும் ரிமோட் அக்சஸ் என்பதை கேட்க மாட்டார்கள். அதாவது ஃபோனிலேயே உங்கள் வங்கி பற்றிய தகவல்கள் அல்லது உங்கள் கணினியின் பாஸ்வேர்ட் உள்ளிட்ட தகவல்களை கேட்க மாட்டார்கள். அவ்வாறு, கஸ்டமர் கேர் பிரதிநிதி உங்களிடம் தனிநபர் விவரங்களை கேட்டாள், நீங்கள் உடனடியாக அழைப்பை துண்டித்து அதை பற்றி புகார் எழுப்பவும்.

QR ஸ்கேன் மோசடியைத் தவிர்க்க, நம்பகத்தன்மை இல்லாத எந்த பேமென்ட்டையும் மேற்கொள்ள வேண்டாம்.

Also Read : ஐபோன் வைத்திருப்பவர்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 6 டிரிக்ஸ்! 

தற்போது யூசர்களின் பாதுகாப்பை அதிக உறுதிப்படுத்த வேண்டும் என்பது பல தொழில்நுட்ப நிறுவனங்களின் முதன்மை குறிக்கோளாக உள்ளது. அதையொட்டி பல நிறுவனங்களும் மின்னஞ்சல் முதல் மொபைல் வரை டூ ஃபேக்டர் ஆத்தென்டிகேஷன் என்ற விருப்பத்தை வழங்கியுள்ளது. எனவே உங்கள் மின்னஞ்சல், டிரைவ், கிளவ்டு கணக்கு என்று யாரேனும் பாஸ்வேர்டை ஹேக் செய்து லாகின் செய்தாலும், உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் எஸ்எம்எஸ் மூலம் தான் நீங்கள் ஆக்செஸ் வழங்க முடியும் என்பதை இயக்கி வைத்தால் உங்களுடைய தரவுகள் பாதுகாப்பாக இருக்கும்.அதிகாரப்பூர்வமான வலைத்தளங்களில் இருந்து மட்டுமே டிஜிட்டல் பேமண்ட் ஆப்களை டவுன்லோட் செய்யவும். குறிப்பாக வங்கி கணக்குகள் பொறுத்தவரை அந்தந்த வங்கியின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் செயலியின் லிங்க் கொடுக்கப்பட்டு இருக்கும். அதை தவிர்த்து வேறு எந்த தளத்தில் இருந்தும் நீங்கள் டவுன்லோடு செய்யக்கூடாது.

Also Read : சத்தமின்றி இந்த 2 ஆப்ஸ்களை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

கிரிப்டோ கரன்சியைப் பொறுத்தவரை சந்தையில் எவ்வகையான கிரிப்டோ கரன்சிகள் எல்லாம் இருக்கின்றன என்பதை பற்றி நீங்கள் நன்றாக தெரிந்து கொண்டால் மட்டுமே அந்த மோசடியில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள முடியும். எனவே கிரிப்டோ கரன்சி முதலீடு செய்ய விருப்பம் இருந்தால், அதைப்பற்றி நன்றாகக் கற்றுக்கொண்டு, நம்பகமான நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள்.

டிஜிட்டல் மோசடியை தவிர்க்க மிகவும் முக்கியமானது, உங்களுடைய பாஸ்வேர்டை மற்றவர்களுடன் பகிரக்கூடாது. அதுமட்டுமின்றி ஒரே பாஸ்வேர்டை எல்லா கணக்குகளுக்கும் எல்லா லாகின்களுக்கும் பயன்படுத்தக் கூடாது.
Published by:Selvi M
First published:

Tags: Online Frauds, Technology

அடுத்த செய்தி