ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அரசு ஊழியர்கள் கூகுள் டிரைவில் தகவல்களை சேமிக்க தடை... மத்திய அரசின் உத்தரவிற்கு காரணம் இதுவா.? 

அரசு ஊழியர்கள் கூகுள் டிரைவில் தகவல்களை சேமிக்க தடை... மத்திய அரசின் உத்தரவிற்கு காரணம் இதுவா.? 

Google Drive

Google Drive

Government Employees | மத்திய அரசு ஊழியர்கள் கூகுள் டிரைவில் தகவல்களை சேமித்து வைக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மத்திய அரசின் தேசிய தகவல் மையம் (NIC) அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவு அரசு ஊழியர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசின் புதிய உத்தரவின் படி, அரசு ஊழியர்கள் அரசு அல்லாத மூன்றாம் தரப்பு கிளவுட் சேவைகளைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கூகுள் டிரைவ், டிராப் பாக்ஸ் போன்ற பிரபலமான கிளவுட் சேமிப்பகங்களில் எந்த தகவலையும் சேமித்து வைக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கிளவுட் சேவைகளுடன், அரசு ஊழியர்கள் NordVPN, ExpressVPN போன்ற VPN சேவைகளைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இந்திய அரசாங்கம் VPN சேவை வழங்குநர்கள் மற்றும் தரவு மைய நிறுவனங்களை ஐந்தாண்டுகளுக்கு பயனர் தரவைச் சேமித்து வைக்குமாறு அறிவுறுத்திய சில வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “பணியாளர்கள்  உள், கட்டுப்படுத்தப்பட்ட, ரகசிய அரசாங்க தரவு அல்லது கோப்புகளை  அரசு அல்லாத எந்த கிளவுட் சேவையிலும் பதிவேற்றவோ அல்லது சேமிக்கவோ வேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  அதாவது ஊழியர்கள் அரசின் ரகசிய ஆவணங்கள், தகவல்கள் ஆகியவற்றை கூகுள் ட்ரைவ் மற்றும் டிராப் பாக்ஸில் சேமிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களுடைய சுய விவரங்கள் உள்ளிட்ட தகவல்களை சேமித்து கொள்ளலாம்.

  அரசுக்கு சொந்தமில்லாத எந்த கிளவுட் சேவையையும் பயன்படுத்த தடை விதித்துள்ள மத்திய அரசு, இந்திய அரசாங்கத்திடம் உள்ள DigiLocker எனப்படும் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையை பயன்படுத்தும் படியும், இது இலவசமாகவே யூஸர்கள் தங்களது ஸ்மார்ட் போன் மூலமாக ஆவணங்களை சேமிக்க பயன்படுவதையும்  சுட்டிக்காட்டியுள்ளது.

  மேலும் மூன்றாவது பார்ட்டியின் செயலிகள் மூலம் அரசு ஆவணங்களை ஸ்கேன் செய்ய கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. NordVPN, ExpressVPN, Tor மற்றும் பிற ப்ராக்ஸிகளை உள்ளடக்கிய VPN சேவைகளைப் பயன்படுத்த வேண்டாம். டீம்வியூவர், எனிடெஸ்க் மற்றும் அம்மி அட்மின் போன்ற அங்கீகரிக்கப்படாத ரிமோட் நிர்வாகக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களை இந்த உத்தரவு கேட்கிறது.

  Also Read : வாட்ஸ் அப் யூஸர்களே உஷார்... மகள் போல் மெசெஜ் அனுப்பி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு

  உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு மற்றும் முக்கிய விஷயங்களில் சந்திப்புகள் மற்றும் விவாதங்களை நடத்துவதற்கு வெளிப்புற மின்னஞ்சல் சேவைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. மூன்றாம் தரப்பு வீடியோ கான்பரன்சிங் சேவைகள் கூட உள் சந்திப்புகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளன.

  தற்காலிக, ஒப்பந்த/ அவுட்சோர்ஸ் ஆதாரங்கள் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் மத்திய அரசின் இந்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட துறை ஊழியர்களின் CISOக்கள்/ துறைத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Also Read : எச்சரிக்கை! இந்த ஆண்டிராய்டு ஆப்ஸ் இருந்தால் நீங்கள் உடனடியாக நீக்கவும்

  அரசு ஆவணங்களின் ரகசியம் காக்கவும், அச்சுறுத்தல்களை தவிர்க்கவும் கிளவுட் சேவைகளில் அரசு ஆவணங்களை சேமித்து வைப்பதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கிளவுட் சேவைகள் போக விபிஎன் சேவைகளால் ஆபத்து இருப்பதாக இந்திய அரசு கருதுகிறது. மேலும் விபிஎன் சேவைகள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுவது ஆபத்து என இந்திய கம்ப்யூட்டர் ஏஜென்சிஸ் ரெஸ்பான்ஸ் குழு மற்றும் தேசிய புள்ளியல் மையம் செய்த பரிந்துரையை அடுத்தே மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  Published by:Selvi M
  First published:

  Tags: Government Employees, Technology