• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஏர்டெல் Vs ஜியோ Vs VI -ஸ்ட்ரீமிங் நன்மைகளுடன் தினசரி 3GB டேட்டா வழங்கும் ப்ரீபெய்டு ப்ளான்கள்! முழு விவரம்

ஏர்டெல் Vs ஜியோ Vs VI -ஸ்ட்ரீமிங் நன்மைகளுடன் தினசரி 3GB டேட்டா வழங்கும் ப்ரீபெய்டு ப்ளான்கள்! முழு விவரம்

ஏர்டெல், ஜியோ,விஐ

ஏர்டெல், ஜியோ,விஐ

அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் 3 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் பிளான்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

  • Share this:
தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகியவை தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், மற்றும் எஸ்எம்எஸ் அடங்கிய ப்ளான்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ப்ளான்கள் 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும். தற்போது ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகியவை புதிய ப்ளான்களை அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் ஜியோ 15, 30, 60, 90 மற்றும் 365 நாள் ப்ளான்களை வழங்கி வரும் நிலையில், ​​ஏர்டெல் மற்றும் Vi ஆகியவை 60 நாள் செல்லுபடியாகும் டேட்டா ப்ளான்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா பயன்படுத்த லிமிட் இல்லை. தினமும் தாராளமான தரவைத் தேடும் ப்ரீபெய்ட் யூசர்கள் இந்த ப்ளான்களை தேர்வு செய்யலாம்

தற்போது அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுடன் 3 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் பிளான்கள் குறித்து தெரிந்து கொள்வோம்., இந்த திட்டங்களில் சில ஸ்ட்ரீமிங் நன்மைகளையும் வழங்குகின்றன.

ஏர்டெல் Vs ஜியோ Vs Vi 3GB தினசரி டேட்டா - 28 நாட்கள் வேலிடிட்டி :

* ஜியோ ரூ. 349 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற ஆன்-நெட் அழைப்பு சலுகைகள், வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகள் உள்ளது. 28 நாள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் ஜியோ ஆப்-பிற்கான சந்தாவையும் வழங்குகிறது.

* ஏர்டெல் ரூ. 398 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்திலும் தினமும் 3 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. 28 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகளாக விங்க் மியூசிக் மற்றும் ஷா அகாடமியின் சந்தா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியத்தின் சந்தாவும் கிடைக்கிறது. மேலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ .150 கேஷ்பேக் கிடைக்கும். எனினும் இந்த திட்டத்துடன் ஸ்ட்ரீமிங் நன்மைகள் எதுவும் இல்லை.

* Vi Rs. 401 ப்ரீபெய்ட் திட்டம்:

Vi ப்ரீபெய்ட் திட்டம் 3 ஜிபி தினசரி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகளை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் 16 ஜிபி கூடுதல் டேட்டாவுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆப்-பிற்கான 1 ஆண்டு விஐபி சந்தாவையும் வழங்குகிறது. மேலும் இரவு நேரத்தில் இது அதிவேக டேட்டா, வார இறுதி டேட்டா மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுக்களையும் பெறலாம்.

* ஜியோ ரூ. 401 ப்ரீபெய்ட் திட்டம்:

ஜியோ ரூ. 401 ப்ரீபெய்ட் திட்டத்தில் 28 நாட்களுக்கு 90 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக 6 ஜிபி டேட்டா கிடைக்கிறது. வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகள், ஜியோ ஆப்ஸ்களுக்கான சந்தாவையும், கூடுதல் செலவில் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு 1 ஆண்டு விஐபி சந்தாவையும் வழங்குகிறது.

* Vi ரூ .405 ப்ரீபெய்ட் திட்டம்:

இந்த திட்டத்தில் 90 ஜிபி டேட்டா 28 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தரப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவும், கூடுதலாக 6 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ZEE5 பிரீமியத்திற்கு 1 வருட அணுகலையும், Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலையும் வழங்குகிறது. மேலும் 56 நாட்கள் மற்றும் 94 நாட்கள் செல்லுபடியாகும் 3 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களையும் Vi வழங்குகின்றது.

ஏர்டெல் Vs ஜியோ Vs Vi 3GB தினசரி டேட்டா - 56 மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி :

ஏர்டெல் ரூ.588 விலையில் 56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்குகிறது. இதில் 3 ஜிபி தினசரி டேட்டா, அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம்-க்கான அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டங்களின் பிற நன்மைகள் இலவச ஹெலோட்டூன்கள் (hellotunes) ,Wynk Music, அப்பல்லோ சேவை மற்றும் FastAg-க்கு இலவச அணுகல் ஆகியவையும் கிடைக்கிறது.

56 நாட்கள் செல்லுபடியாகும் 3 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் திட்டத்தை ஜியோ வழங்கவில்லை. Vi-ஐ பொறுத்தவரை ரூ. 601 விலையில் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இதில் 3 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் அதிவேக இரவுநேர டேட்டா, வார இறுதி டேட்டா மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகல் ஆகிய கூடுதல் நன்மைகளும் அடங்கும்.

3 ஜிபி தினசரி டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி ஆகும் எந்தவொரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் ஏர்டெல் வழங்கவில்லை என்றாலும், ஜியோ மற்றும் Vi போன்ற சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகின்றன.

* Vi Rs. 801 ப்ரீபெய்ட் திட்டம் :

இந்த ப்ரீபெய்ட் திட்டம் 3 ஜிபி தினசரி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இதில் 16 ஜிபி கூடுதல் டேட்டா, டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு 1 ஆண்டு விஐபி சந்தாவும் கிடைக்கிறது. மேலும் அதிவேக இரவுநேர டேட்டா சேவை, வார இறுதிக்கான டேட்டா நன்மைகள் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவி போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

* ஜியோ ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டம் :

இந்த ப்ரீபெய்ட் திட்டம் 3 ஜிபி தினசரி தரவை ரூ .999க்கு வழங்குகிறது மற்றும் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 84 நாட்கள் வேலிடிட்டிக்கு அளிக்கிறது. மேலும் இந்த திட்டம் ஜியோ ஆப்ஸ்-களுக்கான அணுகலையும் வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: