Vi Postpaid ப்ளான்கள்- நீங்கள் அறிந்ததும் அறியாததும்! முழு விவரம்..

Vi Postpaid ப்ளான்கள்

வோடாஃபோன் ஐடியா நிறுவனம் போஸ்பெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிட்டெட் add-on டேட்டா bundle -ஐ இந்தியா முழுவதும் அறிவித்துள்ளனர்.

  • Share this:
வோடாஃபோன் ஐடியா நிறுவனங்கள் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களை தக்க வைக்கும் நோக்கில் அன்லிமிட்டெட் ஆட் ஆன் டேட்டா பேக் பண்டிலை அறிவித்துள்ளது. அன்லிமிட்டெட் டேட்டா பேக்கானது 699 ரூபாய்க்கு 6 மாத வேலிடிட்டியில் கொடுக்கப்படுகிறது. உங்களின் போஸ்ட் பெய்ட் பிளானை அன்லிமிட்டெட் 4 ஜி டேட்டா பிளானுக்கு மாற்றுவதற்கு கூடுதலாக 117 ரூபாய்க்கு ஆட் ஆன் பேக் ரீச்சார்ஜ் செய்ய வேண்டும். RED x மற்றும் 699 ரூபாய் திட்டத்தில் இணைந்திருப்பவர்களைத் தவிர மற்ற அனைத்து வாடிக்கையாளர்களும் விஐ -யின் 4 ஜி அன்லிமிட்டெட் டேட்டா பேக்கில் இணைந்து கொள்ள முடியும்.

தற்போது சிங்கிள் கனெக்ஷ்ன் உள்ள விஐ போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 399 ரூபாய் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய ஆட் ஆன் பேக்கில் 6 மாதங்களுக்கு 699 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஏற்கனவே பழைய திட்டத்தை முன்கூட்டியே தேர்தெடுத்து இன்னும் ஆக்டிவேட் ஆகாதவர்களும் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள வாய்ப்புகள் உள்ளன. விஐ என்டர்டெய்ன்மென்ட் பிளான் 399 ரூபாய் பேக் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் தேசிய அளவில் அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதனுடன் 40 ஜிபி டேட்டா மற்றும் விஐ மூவீஸ், டீவி ஸ்டீரிமிங் ஆப்-ஐ பயன்படுத்திக்கொள்ளும் வசதி கொடுக்கப்படுகிறது.

Also read : செப்டம்பரில் வெளியாகிறதா ஐபோன் 13 சீரிஸ் - விற்பனைக்கு வரும் தேதி குறித்து பரவும் தகவல்!

499 ரூபாய்க்கு இருக்கும் விஐ என்டர்டெய்ன்மென்ட் பிளஸ் பிளான், 75 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் தேசிய அழைப்புகளை மேற்க்கொள்ளும் வசதியை வழங்குகிறது. அமேசான் பிரை சப்ஸ்கிரிப்சன், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி, மற்றும் விஐ மூவீஸ் டிவி ஸ்டீரிமிங் செயலியை பயன்படுத்திக் கொள்ளும் கூடுதல் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். 699 ரூபாய் என்டர்டெய்ன்மென்ட் பிளஸ் பேக்கும், 1099 ரூபாய் RED X பேக்கும் ஏற்கனவே 4 ஜி டேட்டா பண்டில் திட்டத்தில் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவற்றில் அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் விஐபி, விஐ மூவீஸ் மற்றும் டீவி சப்ஸ்கிரிப்சன், RED X -ல் நெட்பிளிஸ்க் ஸ்டீரிமிங்கும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்களை தேர்தெடுக்கும்போது பண்டில் யூசேஜ் சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அதேநேரத்தில் ரிலையன்ஸ் ஜியோவுடன் ஒப்பிடுபோது விஐ -ன் பண்டில் பிளான்கள் விலை கூடுதலாக இருக்கின்றன. ஜியோவைப் பொறுத்த வரை குறைந்தபட்சமாக 199 ரூபாய் விலையில் இருந்து பண்டில் பிளான்களை கொடுக்கின்றன.

Also Read : வாட்ஸ் அப்பில் ஜியோ மார்ட்: இ-காமர்ஸ் வணிகத்தின் புதிய பரிணாமம் - முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்!

199 ரூபாய் பிளானில் 25 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 399 ரூபாயnet pac திட்டத்தில் 75 ஜபி டேட்டாவை வழங்குகிறது. 599 ரூபாய் திட்டம் 100 ஜிபி டேட்டாவையும், 799 ரூபாய் பிளான் 150 ஜிபி டேட்டாவையும் கொடுக்கிறது. 999 ரூபாய் திட்டத்தை ஒருவர் தேர்தெடுத்தால் அவருக்கு 200 ஜிபி டேட்டாவை அனுபவிக்கலாம். 199 ரூபாய் பிளானைத் தவிர மற்ற அனைத்து பிளான்களிலும் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் சப்ஸ்கிரிப்சன்கள் கிடைக்கின்றன.

 
Published by:Tamilmalar Natarajan
First published: