முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு இந்த புதிய பிளான்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..

ரீசார்ஜ் செய்வதற்கு முன்பு இந்த புதிய பிளான்களை தெரிந்துக்கொள்ளுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

Airte Jio VI New Plans : 30 நாட்கள் வேலிடிட்டி உடன் ஜியோ, ஏர்டெல், விஏ அறிமுகம் செய்துள்ள 5 புதிய பிளான்கள்!

  • Last Updated :

நாட்டின் முக்கியமான மற்றும் மூன்று பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய அனைத்துமே தத்தம் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளன. அறிமுகமான அனைத்து புதிய திட்டங்களும் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும், அதாவது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கொண்டிருக்கும்.

இந்த புதிய திட்டங்கள் அனைத்துமே கவனிக்கப்பட வேண்டியவைகளாகும். ஏனெனில் இப்போது வரை, இந்த டெலிகாம் ஆப்ரேட்டர்களின் பெரும்பாலான ‘மாதாந்திர’ ப்ரீபெய்ட் திட்டங்கள் 28 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகின்றன.

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ.296 திட்டம்:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃப்ரீடம் தொகுப்பின் கீழ் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முன்னரே குறிப்பிட்டுள்ளபடி இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் இந்த திட்டத்தின் விலை ரூ.296 ஆகும். நன்மைகளை பொறுத்தவரை, ரூ.296 ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தம் 25 ஜிபி அளவிலான ஹைஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது.

ஒப்பிடுகையில், ஜியோவின் சற்றே விலை குறைந்த ரூ.209 திட்டமானது 28 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 1ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா ஓதுக்கீடு முடிந்ததும், இண்டர்னட் ஸ்பீட் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

also read : அமேசான், பிளிப்கார்டில் ஐபோன் 13 மீது கிடைக்கும் "அடேங்கப்பா" ஆபர்கள்!

இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஜியோ ஃப்ரீடம் திட்டங்களின் வழியாக பயனர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட டேட்டாவை மாதம் முழுவதும் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் ரூ. 209 திட்டத்தின் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள புதிய ரூ.296 மற்றும் ரூ.319 திட்டங்கள்:

ஏர்டெல் ரூ.296 ரீசார்ஜ் பேக்கை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் மொத்தம் 25 ஜிபி அளவிலான டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா ஒதுக்கீடு முடிந்ததும், ஒரு எம்பிக்கு 50 பைசா என்கிற கட்டணம் விதிக்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

also read : 4ஜி சேவைகள் மூலமாக வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் - பிஎஸ்என்எல் நம்பிக்கை

அடுத்ததாக உள்ள ஏர்டெல் ரூ.319 ரீசார்ஜ் பேக் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் தினமும் 2 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்ட டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் மற்றும் இந்த திட்டமும் 30 நாட்கள் செல்லுபடியாகும்.

வோடபோன் ஐடியாவின் புதிய ரூ.327 மற்றும் ரூ.337 திட்டங்கள்:

வோடபோன் ஐடியாவின் ரூ.327 பேக் ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் செல்லுபடியாகும் 30 நாட்களுக்கும் 25 ஜிபி அளவிலான மொத்த டேட்டாவை வழங்குகிறது. மறுகையில் உள்ள ரூ.337 திட்டமானது 30 நாட்களுக்கு அல்ல, மாறாக 31 நாட்கள் என்கிற வித்தியாசமான வேலிடிட்டியை வழங்குகிறது. நன்மைகளை பொறுத்தவரை, இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் பேக் செல்லுபடியாகும் காலம் முழுவதும் 28 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

First published:

Tags: Airtel, Jio