கேட்ஜெட் விரும்பிகளுக்கு புதுப்புது சாதனங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்கிற விருப்பம் அதிகம் இருக்கும். அந்த வகையில் பலர் தற்போது அதிகம் விரும்பி வாங்குவது ஏர்பாட்ஸ் போன்ற சாதனங்களை தான். இதை வாங்கிய சிலருக்கு எப்படி இதை ரீசெட் செய்வது என்பதில் மிக பெரிய குழப்பம் இருக்கும். இந்த குழப்பங்களை தீர்ப்பதற்காகவே இந்த பதிவு. ஏர்பாட்ஸ், ஏர்பாட்ஸ் ப்ரோ மற்றும் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஆகியவற்றை எளிதாக ரீசெட் செய்ய கூடிய வழிமுறையை இந்த விரிவாக பார்ப்போம்.
ஸ்டெப் 1 - பேட்டரியை சரி பார்த்தல்
உங்கள் ஏர்பாட்ஸை ரீசெட் செய்ய அதன் பின்புறத்தில் உள்ள பட்டனை பிடித்துக்கொண்டு நீங்கள் முயற்சி செய்யும்போது, அதன் உட்புறத்தில் இருந்து ஃபிளாஷ் ஒளியைக் காணவில்லை என்றால், அவற்றில் சார்ஜ் இல்லை என்று அர்த்தம். எனவே குறைந்தபட்சம் 15 நிமிடங்கள் அவற்றை சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டெப் 2 - பட்டனை கண்டுபிடித்தல்
ஏர்பாட்ஸ் சார்ஜிங் கேஸின் பின்புறத்தில் உள்ள சிறிய பட்டன் தான் ஏர்பாட் ரீசெட் செய்வதற்கான வழியாகும். எனவே 15 விநாடிகள் அதை அழுத்திப் பிடிக்கவும், கேஸில் உள்ள LED விளக்கு வெள்ளை நிறத்தில் இருந்து தேன் (amber) நிறமாக மாறும் வரை இவ்வாறு செய்யவும். மேலும் ஒயர்லெஸ் இயர்பாட்களிலிருந்து இணைக்க பயன்படுத்தும் மொபைலில் இந்த ரீசெட் பட்டனை வைத்திருப்பது நல்லது. இது மிக அருகில் இருந்தால், அது முன்பு இருந்த எல்லா தரவையும் எடுத்து கொள்ளும்.
Also Read : போலி வாடிக்கையாளர் சேவை மையத்தால் 16 லட்சம் இழந்த பெண்... ஆன்லைன் ஸ்கேம்களில் இருந்து பாதுகாப்பது எப்படி?
ஸ்டெப் 3 - சாதனத்துடன் இணைக்கவும்
ஏர்பாட்களை ரீசெட் செய்த பிறகு, புதிய ஐஓஸ் சாதனத்துடன் அவற்றை இணைக்க வேண்டி இருக்கும். இதற்கு இரண்டு சாதனங்களையும் அருகருகில் வைத்து கொள்ளவும். இதுவே நீங்கள் ஆண்ட்ராய்டு பயன்படுத்தினால், Settings-க்குள் சென்று அதில் Connections என்பதை கிளிக் செய்யவும். பிறகு அதிலுள்ள Bluetooth என்பதற்குச் சென்று, அவற்றை இணைக்க வேண்டும்.
ஸ்டெப் 4 - பெயரை மாற்றவும் (கட்டாயமில்லை)
நீங்கள் உங்கள் ஏர்பாட்களை ரீசெட் செய்திருந்தாலும், அவை அப்போதும் அவற்றின் பழைய பெயரை கொண்டிருக்கும். எனவே நீங்கள் அதை மாற்றுவதற்கு Settings-க்குள் சென்று அதிலுள்ள Bluetooth என்பபதை தேர்வு செய்து மாற்ற வேண்டும். பெயரை மாற்றிய பின் info ('i') பட்டனை கிளிக் செய்யவும்.
Also Read : உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனில் மால்வேர் அகற்றுவது எப்படி!
ஏர்பாட்ஸ் மேக்ஸை ரீசெட் செய்ய
ஆப்பிளின் ஏர்பாட்ஸ் மேக்ஸை ரீசெட் செய்ய, முதலில் சில நிமிடங்களுக்கு அவற்றைச் சார்ஜ் செய்து கொள்ளுங்கள். பிறகு, LED லைட் இருக்கும் இடத்தில் அம்பர் ஒளி ஒளிரும் வரை noise control பட்டனை டிஜிட்டல் கிரவுனையும் (Digital Crown) அழுத்திப் பிடிக்கவும். உங்கள் iCloud கணக்கிலிருந்து அவற்றை இணைக்க விரும்பினால், பேக்டரி செட்டிங்ஸ் மூலம் ஏர்பாட்ஸ் மேக்ஸை ரீசெட் செய்து அதன் பிறகு மேற்சொன்ன செய்முறைகளை செய்யவும். இதற்கு LED லைட்டானது அம்பர் நிறத்தில் இருந்து வெள்ளை நிறமாக மாறும் வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.