BHIM அல்லது Bharat Interface for Money எனப்படும் பீம் என்பது டிஜிட்டல் பேமெண்ட் வசதியை கொண்ட ஆப் ஆகும். இது யூபிஐ பரிவர்த்தனை அடிப்படையில் செயல்படுகிறது. Virtual Payment Address அல்லது QR CODE பயன்படுத்தி ஒருவருக்கு பணம் அனுப்ப அல்லது பிறரிடம் இருந்து பணம் பெற்றுக் கொள்ள இது உதவிகரமாக இருக்கிறது.
வருடத்தில் உள்ள 365 நாட்களில் 24 மணி நேரமும் நீங்கள் பணம் அனுப்புதல் அல்லது பெறுதல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். குறிப்பாக, வங்கி விடுமுறை நாட்களிலும் கூட நீங்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பீம் ஆப்-ஐ எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
பீம் ஆப் பயன்படுத்துவது எப்படி?
* உங்கள் மொபைலில் கூகுள் பிளே ஸ்டோர் சென்று முதலில் பீம் ஆப் டவுன்லோடு செய்யவும். இந்த ஆப் இதுவரை ஆப்பிள் ஐஃபோன்களுக்கு வரவில்லை. ஆகவே, ஆண்டிராய்டு இயங்குதளம் கொண்ட ஃபோன்களில் மட்டுமே இந்த ஆப் செயல்படும்.
* ஆப் இன்ஸ்டால் செய்த பிறகு, அதன் புரொஃபைல் பக்கத்திற்கு செல்லவும்.
* இங்கு உங்களுக்கு விருப்பமான ஆப் மொழியை தேர்வு செய்து கொள்ளலாம். பிறகு உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட ஃபோன் நம்பரை வெரிஃபை செய்து கொள்ளவும்.
Also Read : ஆன்லைன் ஹேக்கர்கள் எந்தெந்த வழிகளில் உங்கள் பணத்தை திருடக்கூடும் - ஆர்பிஐ எச்சரிக்கை
* இப்போது வெரிஃபிகேஷன் நடைமுறை முடியும் வரை காத்திருங்கள்.வெரிஃபிகேஷன் நிறைவடைந்த பிறகு 4 இலக்க பின் நம்பரை செட் செய்யவும்.
* தற்போது டிராப் பாக்ஸ் மூலமாக நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியை தேர்வு செய்யலாம். உங்கள் ஃபோன் நம்பர் அடிப்படையில் ஆப் தானாகவே விவரங்களை எடுத்துக் கொள்ளும்.
அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த விரும்பும் பிரைமரி அக்கவுண்ட் எது என்று தேர்வு செய்து கொள்ளவும். இப்போது பரிவர்த்தனைகளுக்கு உங்கள் புரொஃபைல் தயார்.
* பரிவர்த்தனைகளை தொடங்குவதற்கு, யாருக்கு பணம் அனுப்புகிறீர்களோ அவர்களது ஃபோன் நம்பர் அல்லது யூபிஐ ஐடி அல்லது வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை உள்ளிடவும்.
* இப்போது எவ்வளவு பணம் அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிடவும்.
Also Read : இனிவரும் காலங்களில் சிம் கார்டு ஸ்லாட் இல்லாத ஃபோன்கள்
* பின்னர் உங்களது எம்பின் அல்லது 4 இலக்க பின் நம்பரை நீங்கள் குறிப்பிட வேண்டும். அது சரியாக இருந்தால் பணம் சென்றுவிடும்.
* இதேபோல பிற நபர்களிடம் உங்கள் ஃபோன் நம்பரை தெரிவித்து, நீங்கள் பெற வேண்டிய பணம் பெற்றுக் கொள்ளலாம்.
* ஒருவேளை நீங்கள் க்யூ.ஆர் கோடு வழியாக பணம் அனுப்ப வேண்டும் என விரும்பினால், 2டி வடிவில் உள்ள கருப்பு-வெள்ளை படத்தை கிளிக் செய்வதன் மூலமாக பணம் அனுப்பி வைக்கலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.