நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5 இலவச சந்தா வேண்டுமா?- உதவும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள்!
வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 399 ரூபாய்க்கான வோடஃபோன் ரெட் ப்ளான் தேர்ந்தெடுத்தால் வோடஃபோன் ப்ளே மற்றும் ப்ரீமியம் ஜீ5 வீடியோக்கள் இலவசம்.

மாதிரிப்படம்
- News18
- Last Updated: February 27, 2020, 10:12 AM IST
நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களுக்கான சந்தா உங்களுக்கு இலவசமாகவே கிடைக்க வழி செய்கின்றன சில மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள்.
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்கள் மூலம் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரிமிங் தளங்களுக்கான இலவச சந்தாவை வழங்குகின்றன. சராசரியா நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்களுக்காக நீங்கள் செலவு செய்யும் தொகை என்ன?
ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஆண்டுக்கு 365 ரூபாய். இதுவே ஹாட்ஸ்டார் ப்ரீமியம் சந்தா என்றால் ஆண்டுக்கு 999 ரூபாய். அமேசான் ப்ரைம் வேண்டுவோர் ஆண்டுக்கு 999 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும். நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு அதிகபட்சமாக மாதம் 799 ரூபாய் வரையிலான சந்தா திட்டங்கள் உள்ளன. ஜீ 5-க்கு ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்த வேண்டும். இதுதான் கட்டணப் பட்டியல். ஆனால், நீங்கள் சரியாகத் தேர்ந்தெடுக்கும் மொபைல் ரீசார்ஜ் திட்டங்கள் மூலம் மேற்காணும் சந்தா இல்லாமலே உங்களால் அந்தத் தளங்களைக் காண முடியும். நீங்கள் ஜியோ வாடிக்கையாளர்களாக இருந்தால் ஒரு ஆப் போதும். ஜியோ ஆப் மூலமாகவே 500 லைவ் சேனல்கள், 60 ஹெச்டி சேனல்கள், ஜியோ டிவி மற்றும் இன்னபிற புதுத் திரைப்படங்களையும் ஜியோ சினிமா ஆப் மூலம் பெறலாம்.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 499 ரூபாய்க்கான போஸ்ட்பெய்டு திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால் ஓராண்டுக்கான அமேசான் ப்ரைம் வீடியோ சந்தா, ஜீ 5 ப்ரீமியம் வீடியோக்கள் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் வீடியோ சேவைகள் இலவசமாக கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் செயலியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படங்கள் உள்ளன. 28 நாட்களுக்கான 129 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் தேர்ந்தெடுத்தால் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் சந்தா, 28 நாட்கள் வேலிடிட்டி உடனான 349 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் தேர்ந்தெடுத்தால் அமேசான் ப்ரைம் சந்தா இலவசம்.
வோடஃபோன் வாடிக்கையாளர்கள் 399 ரூபாய்க்கான வோடஃபோன் ரெட் ப்ளான் தேர்ந்தெடுத்தால் வோடஃபோன் ப்ளே மற்றும் ப்ரீமியம் ஜீ 5 வீடியோக்கள் இலவசம். 499 ரூபாய் ப்ளான் என்றால் கூடுதலாக அமேசான் ப்ரைம் சந்தாவும் இலவசம். 999 ரூபாய் ப்ளான் என்றால் கூடுதலாக நெட்ஃப்ளிக்ஸ் சந்தா, சர்வதேச ரோமிங் சந்தா, ஏர்போர்ட் காத்திருப்பு அறை சந்தா ஆகியன இலவசம்.மேலும் பார்க்க: அந்நியர்கள் உங்கள் வாட்ஸ்அப் குழுக்களில் நுழைய வாய்ப்பு உள்ளது!- தவிர்ப்பது எப்படி?
ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகிய நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்கள் மூலம் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரிமிங் தளங்களுக்கான இலவச சந்தாவை வழங்குகின்றன. சராசரியா நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற தளங்களுக்காக நீங்கள் செலவு செய்யும் தொகை என்ன?
ஹாட்ஸ்டார் விஐபி சந்தா ஆண்டுக்கு 365 ரூபாய். இதுவே ஹாட்ஸ்டார் ப்ரீமியம் சந்தா என்றால் ஆண்டுக்கு 999 ரூபாய். அமேசான் ப்ரைம் வேண்டுவோர் ஆண்டுக்கு 999 ரூபாய் சந்தா செலுத்த வேண்டும். நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கு அதிகபட்சமாக மாதம் 799 ரூபாய் வரையிலான சந்தா திட்டங்கள் உள்ளன. ஜீ 5-க்கு ஆண்டுக்கு 999 ரூபாய் செலுத்த வேண்டும். இதுதான் கட்டணப் பட்டியல்.