Home /News /technology /

ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.? இதிலிருந்து தப்பிக்கும் வழிகள்!

ஒரு போன் கால் மூலம் WhatsApp அக்கவுண்ட் திருடப்படுவது எப்படி.? இதிலிருந்து தப்பிக்கும் வழிகள்!

WhatsApp

WhatsApp

WhatsApp | வாட்ஸ்அப் யூசர்கள் மீண்டும் ஒரு பயங்கரமான ஆபத்தில் உள்ளனர்! இந்த புதிய மோசடியானது ஒரு ஃபோன் கால் வழியாக உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டில் இருந்து உங்களை லாக் செய்து விடும்.

வாட்ஸ்அப் யூசர்கள் ஒரு லேட்டஸ்ட் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் ஹேக்கர்கள் சில நிமிடங்களில் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை திருட அனுமதிக்கும் ஓரு புதிய ஆன்லைன் மோசடி அது! இந்த வாட்ஸ்அப் மோசடியில் இருந்து உங்களை நீங்களே எப்படி காப்பாற்றுவது என்று இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் யூசர்கள் மீண்டும் ஒரு பயங்கரமான ஆபத்தில் உள்ளனர்! இந்த புதிய மோசடியானது ஒரு ஃபோன் கால் வழியாக உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டில் இருந்து உங்களை லாக் செய்து விடும். குறிப்பிட்ட போன் கால்-ஐ நீங்கள் எடுக்கும் பட்சத்தில், அது உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ லாக் செய்து விடும். அது மட்டுமின்றி, இந்த செயல்முறையின் கீழ் ஆன்லைன் மோசடி செய்பவர் உங்கள் அக்கவுண்ட்-ஐ எளிதில் அபகரித்து, உங்கள் காண்டாக்ட் லிஸ்ட்-ஐ அணுகலாம், மேலும் உங்களின் சாட்-களையும் படிக்கலாம்.

ஆகமொத்தம் ஆன்லைன் மோசடி செய்பவரிடமிருந்து வரும் குறிப்பிட்ட ஆபத்தான அழைப்பை நீங்கள் எடுத்தவுடன், உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ அவர்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்! இன்னும் மோசமான பகுதி என்னவென்றால், இதை நடத்த அவர்களுக்கு பல மணிநேரங்கள் தேவைப்படாது; சில நிமிடங்களில் ஹேக்கர்கள் இந்த மோசமான தாக்குதலை நடத்துகிறார்கள்.

இந்த புதிய வாட்ஸ்அப் மோசடியை க்ளவுட்செக்கின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆன ராகுல் சசி, லிங்க்ட்இன் போஸ்ட் ஒன்றின் வழியாக எடுத்துரைத்தார் மற்றும் அவர் இந்த வாட்ஸ்அப் மோசடியின் விளைவுகளையும் விளக்கி உள்ளார்.



இந்த வாட்ஸ்அப் ஸ்கேம் எப்படி வேலை செய்கிறது?

இந்த மோசடி உங்கள் போன் நம்பரில் இருந்து தொடங்குகிறது! ஒரு ஹேக்கர் உங்கள் ஃபோன் எண்ணைக் கண்டறிந்ததும், சில பொறியியலைப் பயன்படுத்தி உங்களுக்கு கால் செய்வார். வாட்ஸ்அப் யூசர்கள் ஹேக்கர்களிடமிருந்து குறிப்பிட்ட அழைப்பைப் பெறுவார்கள், பின் யூசர்கள் சில நன்மைகளை பெறுவதற்காக அல்லது அவர்களின் வங்கி அல்லது பிற அக்கவுண்ட்கள் தொடர்பான சில ஆபத்துகளைத் தவிர்ப்பதற்காக மற்றொரு எண்ணை டயல் செய்யும்படி அறிவுறுத்தபடுகிறார்கள். ஹேக்கர்களின் இந்த அறிவுறுத்தலைப் பின்பற்றுபவர்கள், பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்; அவர்களின் அக்கவுண்ட் உடனடியாக முடக்கப்படுகிறது.

Also Read : வாட்ஸ் அப் யூஸர்களே உஷார்... மகள் போல் மெசெஜ் அனுப்பி ரூ.15 லட்சம் பணம் பறிப்பு

இந்த மோசடியின் கீழ், ஹேக்கர்கள் ஃபார்வர்டு செய்யப்பட்ட அழைப்போடு ஒடிபி பாஸ்வேர்ட் ஒன்றையும் கோருகிறார்கள் என்று ப்ளீப்பிங் கம்ப்யூட்டர் குறிப்பிடுகிறது. ஹேக்கர்கள் குறிப்பிட்ட ஒடிபி-ஐ பெற்றவுடன், அவர்கள் ஒருவரின் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை தன்வசமாக்க முடிகிறது.



இந்த வாட்ஸ்அப் மோசடியில் சிக்காமல் இருப்பது எப்படி.?

அதிர்ஷ்டவசமாக, இந்த அச்சுறுத்தும் வாட்ஸ்அப் மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உங்கள் அக்கவுண்ட்-ஐ ஹேக்கர்கள் லாக் மற்றும் ஹேக் செய்யாமல் பாதுகாக்கவும் சில எளிய வழிகள் உள்ளன. டூ-ஸ்டேப் ஆத்தென்டிகேஷன்-ஐ இயக்குவது போன்ற செயல்முறையின் கீழ் நீங்கள் இதுபோன்ற ஆன்லைன் தாக்குதல்களில் இருந்து உங்களைப் பாதுகாக்க முடியும்.

Also Read : MyGov ஹெல்ப் டெஸ்க் வழியே பான் கார்டு, டிரைவிங் லைசென்ஸை இந்திய வாட்ஸ்அப் யூஸர்கள் இனி அணுகலாம்!

இருப்பினும், கோரப்படாத குறுஞ்செய்திகள் அல்லது அறியப்படாத எண்களிலிருந்து வரும் போன் கால்கள் குறித்து நீங்கள் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் தனிப்பட்ட அல்லது நிதி விவரங்களை நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
Published by:Selvi M
First published:

Tags: Technology, WhatsApp

அடுத்த செய்தி