Home /News /technology /

Paytmயின் புதிய கண்டுபிடிப்பான ஃபோட்டோ QRயில் முதலீடு செய்வதன் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.!

Paytmயின் புதிய கண்டுபிடிப்பான ஃபோட்டோ QRயில் முதலீடு செய்வதன் நன்மைகளைப் பற்றி பார்ப்போம்.!

Paytm QR

Paytm QR

Paytm Photo QR | பல்வேறு வணிகர்கள் தங்கள் சொந்த கடைகளில் பல்வேறு வகையான QR கோடுகளைப் பயன்படுத்துவது வியப்பாகத் தோன்றினாலும், QR கோடுகளின் செயல்முறையை மேம்படுத்துவதற்கு உறுதியளிக்கும் வகையில் புதிய கேம்-சேஞ்சிங் அம்சமான ஃபோட்டோ QR வரவிருக்கிறது. இந்தப் புதிய ஃபோட்டோ QR பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்கவும் ...

    டிஜிட்டல் மயமாக்கலின் விளைவாக வணிக நிறுவனங்கள் எங்கிலும் QR நிறைந்துள்ளது. ஒரு உயர்தர ஷாப்பிங் ஸ்டோராக இருந்தாலும் சரி அல்லது நமக்கு மிகவும் பிடித்தமான டீக்கடையாக இருந்தாலும் சரி, அங்கே டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதற்கான QR கோடை நாம் காணலாம்.


    பல்வேறு வணிகர்கள் தங்கள் சொந்த கடைகளில் பல்வேறு வகையான QR கோடுகளைப் பயன்படுத்துவது வியப்பாகத் தோன்றினாலும், QR கோடுகளின் செயல்முறையை மேம்படுத்துவதற்கு உறுதியளிக்கும் வகையில் புதிய கேம்-சேஞ்சிங் அம்சமான ஃபோட்டோ QR வரவிருக்கிறது. இந்தப் புதிய ஃபோட்டோ QR பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.


    ஃபோட்டோ QR என்பது என்ன:


    ஃபோட்டோ QR என்பது, ஏற்கனவே 20 லட்சத்திற்கும் அதிகமான வணிகர்களால் பயன்படுத்தப்படும் Paytmயின் தனித்துவமான அம்சமாகும். இது வழக்கமான QRயின் புதுமையான, மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இந்த அம்சத்தின் மூலம், ஒரு வணிகர் தனக்கு விருப்பமான ஏதேனும் ஒரு போட்டோவை இணைத்து தனது சொந்த QR ஐத் தனிப்பயனாக்கலாம். மேலும், ஃபோட்டோ QRயில் கடையின் பெயர் மற்றும் ஃபோன் எண் போன்ற விவரங்களும் காண்பிக்கப்படுகிறது, இது வழக்கமான மற்றும் பிற QRகளில் இருந்து இதனைத் தனித்து காண்பிக்கிறது.


    ஃபோட்டோ QRஐ எவ்வாறு பயன்படுத்தலாம்:


    ஃபோட்டோ QR என்பது ஒரு புகைப்படத்தைப் பயன்படுத்தி உங்கள் சொந்த தனிப்பட்ட QRஐ உருவாக்குகிறது. ஒரு வணிகர் தனது ஃபோன் கேலரியில் சேமிக்கப்பட்டுள்ள செல்ஃபி, பிராண்ட் லோகோ அல்லது வேறு ஏதேனும் புகைப்படங்களைத் தேர்வுசெய்யலாம். மாற்றாக, Paytm-for-Business ஆப் கேலரியில் உள்ள போட்டோ QR தனிப்பயனாக்குதல் எனும் பக்கத்தில் கிடைக்கும் பரந்த அளவிலான புகைப்படங்களிலிருந்தும் தேர்வு செய்யலாம். இதில் நினைவுச்சின்னங்கள் மற்றும் வணிக சின்னங்கள் ஆகியவை அடங்கியிருக்கும்.


    வணிகர் தனது ஃபோட்டோ QRஐ உருவாக்கியவுடன், அதன் டிஜிட்டல் பதிப்பைப் பதிவிறக்கம் செய்து வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். மாற்றாக, அவர்கள் தங்கள் கடை அல்லது நிறுவனத்தில் பேமெண்ட்டுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் வைக்கக்கூடிய ஃபோட்டோ QRயின் ஃபிசிக்கல் பதிப்பை ஆர்டர் செய்யலாம். ஃபிசிக்கல் ஃபோட்டோ QRஐத் தேர்வுசெய்யும் வணிகர்கள் அதனுடன் 1 ஸ்டாண்டீயையும், ஃபோட்டோ QRயின் 1 ஸ்டிக்கரையும் பெறுவார்கள். இது பேமெண்ட்டுகளை ஏற்றுக்கொள்வதற்கு மட்டுமல்லாமல், பிராண்ட் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பரவலாகப் பகிரப்படலாம்.


    நாம் ஏன் ஃபோட்டோ QRஐப் பயன்படுத்த வேண்டும்:


    ஃபோட்டோ QRஐ வைத்திருப்பதில் பல நன்மைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானது, இது வணிகப் பரிவர்த்தனைகளைத் தனித்துவமாக்குகிறது. இது வாடிக்கையாளர் தக்கவைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நீண்ட காலத்திற்கு அதிக வருவாயைப் பெறவும் உதவுகிறது.


    உங்கள் வணிகத்தை விளம்பரப்படுத்துவதற்காக நீங்கள் விரும்பும் புகைப்படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான இணையற்ற சுதந்திரத்தை ஃபோட்டோ QR வழங்குகிறது. இனிமேல் சலிப்பூட்டும் QRஐ பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை. ஃபோட்டோ QR ஆனது வணிகர்களுக்கு அவர்களின் ஃபோன் கேலரியில் அல்லது Paytm For Business செயலியில் உள்ள செல்ஃபி, பிராண்ட் லோகோ, பிரபலமான நினைவுச் சின்னங்கள், ஆகியவற்றிலிருந்து புகைப்படத்தைத் தேர்ந்தெடுத்து தங்களின் QRஐத் தனிப்பயனாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.


    ஃபோட்டோ QR என்பது பணம் செலுத்துவதற்குப் பயன்படும் ஒரு ஊடகமாக மட்டுமல்லாமல், வணிகர்களுக்குத் தங்கள் பிராண்டை வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது அவர்களின் வணிகத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எந்த குழப்பமும் இல்லாமல் சரியான QRஐ ஸ்கேன் செய்ய வாடிக்கையாளர்களுக்கும் உதவுகிறது.


    சொந்த ஃபோட்டோ QRஐ எவ்வாறு பெறலாம்:


    வணிகர்கள் தங்களின் சொந்த ஃபோட்டோ QRஐ ஆர்டர் செய்வது மிக எளிது. Paytm For Business செயலியைத் திறந்து, முகப்புப் பக்கத்தில் தெரியும் ஃபோட்டோ QR ஐகானைக் கிளிக் செய்து, QRயில் சேர்க்கப்பட வேண்டிய புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


    அடுத்ததாக உங்களுக்கு விருப்பமான படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.


    பிறகு, வணிகர் தனது முகவரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது புதிய முகவரியை உள்ளிட வேண்டும். ஃபோட்டோ QRஐ ஆர்டர் செய்வதற்குத் தேவையான கட்டணத்தைச் செலுத்துவதும், அது டெலிவரி செய்யப்படும் வரை Paytm For Business செயலியின் வழியாக ஆர்டர் நிலையைக் கண்காணிப்பதும் இறுதிப் படியாகும்.


    வழக்கமான QR மிகவும் பொதுவானதாகிவிட்டதாலும், ஃபோட்டோ QR மேலே உள்ள அனைத்து நன்மைகளையும் கொண்டிருப்பதாலும், உங்கள் வணிகத்திற்கான வாய்ப்புகளை மேம்படுத்த ஃபோட்டோ QRஐப் பயன்படுத்துவது சிறந்த வழிமுறையாகும். பிரத்தியேகமான ஃபோட்டோ QRஐ ஆர்டர் செய்யா இங்கே கிளிக் செய்யவும்.

    Published by:Selvi M
    First published:

    Tags: Paytm

    அடுத்த செய்தி