புதிதாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் உலகத்திற்கு அடியெடுத்து வைப்பவர்களுக்கு அதில் உள்ள பல்வேறு அம்சங்களும், செயல்பாடுகளும் புரியாத புதிராக இருக்கும். பெரும்பாலானோருக்கு அதை பயன்படுத்துவது சுலபம் என்றாலும், முதன் முறையாக ஸ்மார்ட் போன் வாங்கும் ஒருவருக்கு வழிகாட்டும் குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். எனவே நீங்கள் முதன் முறையாக ஆன்ட்ராய்டு மொபைல் வாங்கியவராக இருந்தாலும் சரி அல்லது ஐபோன் பயன்பாட்டில் இருந்து ஆன்ட்ராய்டுக்கு மாறி இருந்தாலும் சரி, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில மிக முக்கியமான இங்கே.
கூகுள் அக்கவுண்ட்:
ஸ்மார்ட் போனை கூகுள் அக்கவுண்ட் இல்லாமல் கூட இயக்கலாம் என்றாலும், நிச்சயம் ஏதாவது ஒரு ஜிமெயில் கணக்கை உள்ளிடவோ அல்லது புதிய கணக்கை தொடங்கவோ பரிந்துரைக்கிறது. ஆண்ட்ராய்டு கூகுளின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதால், இந்த இணைப்பு உங்கள் புகைப்படங்கள் மற்றும் கோப்புகள் போன்ற தரவுகளை காப்புப் பிரதி எடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் அமைப்புகளின் விருப்பத் தேர்வுகளை நினைவில் வைத்துக் கொள்ளும், நீங்கள் நிறுவிய ஆப்ஸ்களைக் கண்காணிக்கும், மேலும் உங்கள் எல்லா சாதனங்களிலும் காலண்டர் மற்றும் தொடர்புகள் போன்ற உங்கள் Google செயலிகளின் தகவலைப் பகிரும் என்பதால் உங்கள் ஆன்ட்ராய்டு போனை முதல் முறையாக நீங்கள் ஆன் செய்ததும் கூகுள் அக்கவுண்டை கொடுத்து லாகின் செய்து கொள்வது அவசியம்
ஸ்மார்ட் போனை உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுங்கள்:
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் மக்களிடையே அதிக அளவில் விரும்பி பயன்படுத்தப்பட காரணம், அதனை கஸ்டமைஸ் (Customize) செய்து கொள்ள பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் தான். ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன் பயனாளர் தன்னுடைய முழு செல்போனையும் தனக்கு ஏற்ற அழகியலோடு மாற்றிக்கொள்ள முடியும்.
Also Read : தற்போதைய ஸ்மார்ட்ஃபோன்களில் ஏன் நீக்கக்கூடிய பேட்டரிகள் இல்லை?
1. கூகுள் பிளே ஸ்டோருக்குச் செல்வதன் மூலம் வால்பேப்பர், தீம்கள், எழுத்துருக்கள், ரிங்டோன்கள், அறிவிப்பு ஒலிகள் போன்றவற்றை மாற்றலாம். மாற்றாக, Samsung, Xiaomi, Oppo போன்ற பெரும்பாலான பிராண்டுகளில், நீங்கள் அதனுடைய சொந்த மென்பொருள் அங்காடிக்குள் சென்று தேவையானவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நீங்கள் விரும்பும் இணையதளத்தில் இருந்தும் அவற்றை பதிவிறக்கம் செய்ய முடியும்.
2. முகப்புத் திரையை மாற்ற: நீங்கள் அதிகமாகப் பயன்படுத்திய செயலிகள், பல்வேறு விட்ஜெட்களைச் சேர்க்கலாம் அல்லது குறைந்தபட்ச பயன்பாட்டிற்காக அதை காலியாக விடலாம். முகப்பு பக்கத்தில் ஒரு செயலியை சேர்க்க அதன் மீது நீண்ட நேரம் உங்களுடைய விரலை வைத்து அழுத்தி இழுத்து வந்து, திரையில் நீங்கள் விரும்பும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.
3. உங்களது செல்போன் திரையில் வரும் வெளிச்சம் கண்களை கூசும் அளவிற்கு இருப்பதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக டார்க் மோட் ( Dark mode)-க்கு சென்று அதனை மாற்றிக்கொள்ளலாம். இது செல்போன் திரையை முற்றிலும் கருமையாக மாற்ற உதவும். இந்த டார்க் மோட் வடிவமைப்பானது மொபைல் திரையில் இருந்து ஒளிரும் வெளிச்சத்தை குறைக்கிறது. மேலும் படிப்பதற்கு ஏற்ற வண்ண வேறுபாடுகளை கொடுக்கிறது. மேலும் டார்க் மோடை பயன்படுத்துவதன் மூலமாக அமோலெட் (AMOLED) போன்ற டிஸ்பிளே வடிவங்களில் அதிக சக்தியைச் சேமிக்க முடியும்.
Also Read : உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடித்து லாக் செய்து, தரவுகளை நீக்குவது எப்படி?
4. ஸ்கீரின் ஷாட்: வால்யூம் டவுன் + பவர் பட்டனை அழுத்தி ஸ்கிரீன் ஷாட் எடுக்கலாம். மாற்றாக, ஸ்கிரீன்ஷாட்டை எடுக்க திரையில் மூன்று விரல்களால் கீழே ஸ்வைப் செய்தால் கூட போதும்.
5. அறிவிப்பு பட்டி (Notification Bar): அறிவிப்பு பட்டியைப் பயன்படுத்த, ஸ்மார்ட்போனின் மேற்புறத்தில் இருந்து கீழே ஸ்வைப் செய்யவும். அறிவிப்புப் பட்டியில் இரண்டு பகுதிகள் உள்ளன, முதலில் உங்கள் எல்லா அறிவிப்புகளையும் பயன்பாட்டிலிருந்து பெறுவீர்கள், இரண்டாவது குவிக் செட்டிங் பார் இதன் மூலம் ஸ்மார்ட்போனில் என்ன உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
6. ப்ளே ஸ்டோர்: கூகுள் ப்ளே ஸ்டோரில் 3 மில்லியனுக்கும் அதிகமான செயலிகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்தமான செயலிகள், கேம்கள், திரைப்படங்கள், புத்தகங்கள் மற்றும் பலவற்றைக் கண்டறிய நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்றாலே போதும்.
Also Read : உங்கள் மொபைலின் செயல்திறனை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை
7. மல்டி டாஸ்க் ஸ்கிரீன்: மல்டி டாஸ்க் ஸ்கிரீன் என்பது ஸ்மார்ட் போனில் நீங்கள் திறந்திருக்கும் எல்லா ஆப்ஸ்களையும் பார்க்க உதவுவது. ஒரு பயன்பாட்டிலிருந்து மற்றொரு பயன்பாட்டிற்கு விரைவாகச் செல்ல இந்தத் திரையைப் பயன்படுத்தலாம். இந்தத் திரையை அணுக முகப்புப் பொத்தானை நீண்ட நேரம் அழுத்த வேண்டு. இந்த ஒரே திரையைப் பயன்படுத்தி எல்லா செயலிகளையும் மூட முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Android, Mobile Phone Users, Smart Phone, Technology