உலகம் முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைப் போலவே வாட்ஸ் அப் செயலியும் யூஸர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரண எஸ்.எம்.எஸ் செய்திகளை அனுப்புவதற்கு பதிலாக, வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் போது மெசேஜ் உடன் புகைப்படம், வீடியோ மற்றும் வாய்ஸ் மெசேஜ்களையும் அனுப்பலாம் என்பதால் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
மேலும் எழுதவும், படிக்கவும் தெரியாதவர்கள் கூட வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்புவதற்கு வாய்ஸ் மெசேஜ் வசதி சிறப்பானதாக செயல்படுகிறது. தட்டச்சு செய்து மெசேஜ் செய்ய சோம்பலாக இருக்கிறதா?, வாட்ஸ் அப்பில் உள்ள மைக் பட்டனை அழுத்தி உங்களுடைய வாய்ஸ் மெசேஜை சில விநாடிகளில் அனுப்பி விடலாம்.
இதில் டெக்ஸ்ட் மெசேஜ்யைப் போல வாய்ஸ் மெசேஜை தேட முடியாது என்பது மட்டுமே இருக்கும் ஒரே ஒரு குறையாக உள்ளது. சில சமயங்களில் சவுண்ட் இல்லாத வாய்ஸ் மெசேஜ்கள் அல்லது பதிவு செய்ய மட்டுமே அனுமதிக்கும் மெசேஜ்கள் என பிழையான செய்திகள் உங்களுடைய ஸ்மார்ட் போனுக்கு வந்து சேரலாம். அப்படிப்பட்ட பிரச்சனைகளை சுலபமாக தீர்க்க உங்களுடைய ஸ்மார்ட் போனில் உள்ள சில யோசனைகள் இதோ...
1. வாட்ஸ் அப் போர்ஸ் ஸ்டாப் (Force stop):
சில சமயங்களில் வாட்ஸ் அப்பில் உள்ள சேவைகள் வேலை செய்யாமல் போகலாம். அப்போது ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப் ஐகானை அழுத்திப்பிடிக்க வேண்டும். அதன் பின்னர் தோன்றும் ஆப்ஷனில் இருந்து தகவல் பக்கத்திற்கு (APP Info) செல்லலாம். அதில் வாட்ஸ் அப் பயன்பாட்டை கட்டாயமாக நிறுத்தக்கூடிய force stop the app என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். இதன் மூலமாக வாய்ஸ் மெசேஜ் சிக்கல் தீர்க்கப்பட வாய்ப்புள்ளது.
Also Read : இன்ஸ்டாகிராம் அப்டேட்: புதிய அம்சம்; விரைவில்!
2. வாய்ஸ் மெசேஜ் அனுமதி (Turn on WhatsApp permissions):
உங்கள் வாட்ஸ்அப்பில் குரல் செய்திகளைப் பதிவுசெய்து அனுப்புவதற்குத் தேவையான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும். வாட்ஸ்அப் செயலியின் தகவல் மையத்திற்குள் ‘ஆப் பர்மிஷன்’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதனைத் தொடர்ந்து தெரியும் அனுமதி பட்டியலில், மைக்ரோபோன் மற்றும் ஸ்டோரேஜ் ஆகிய அம்சங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தால், வாய்ஸ் செமேஜ் செயல்படாமல் போக வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக இரண்டு ஆப்ஷன்களையும் ஆன் செய்து வைக்க வேண்டும்.
3. ஸ்மார்ட் போன் ஸ்டோரேஜை கவனியுங்கள் (Check Phone Storage):
உங்களுடைய ஸ்மார்ட் போனில் ஸ்டோரேஜ் அளவு எவ்வளவு உள்ளது என்பதை சோதிக்க வேண்டும். ஏனென்றால் வாட்ஸ் அப்பிற்கு வரும் அனைத்து வாய்ஸ் செசேஜ்களும், செல்போனில் உள்ள சேமிப்பு பகுதியில் தானாகவே சேமிக்கப்படும், அதன் பின்னர் மட்டுமே வாய்ஸ் மெசேஜை நீங்கள் கேட்க முடியும். ஒருவேளை உங்களுடைய ஸ்மார்ட் போனில் வாய்ஸ் செசேஜ் வேலை செய்யவில்லை என்றால், ஸ்டோரேஜில் உள்ள தேவையற்ற ஃபைல்களை டெலிட் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Also Read : ஸ்மார்ட் ஃபோன் தொலைந்து விட்டதா.? வங்கி விவரங்கள் & ஆன்லைன் வாலட்களை பாதுகாப்பது எப்படி..
4. பிற ஆப்களை சோதனை செய்யுங்கள் (Check other opened apps):
வாட்ஸ் அப் வாய்ஸ் மெசேஜ் போலவே மைக்ரோஃபோனைப் பயன்படுத்தும் வாய்ஸ் ரெக்கார்டர், வீடியோ கான்பிரன்ஸ், ஸ்கீரின் ரெக்கார்டிங், போன்ற வேறு ஏதேனும் ஆப்கள் ஓபன் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
5. வாட்ஸ் அப்பை புதுப்பிக்கவும் (Update your WhatsApp):
வாட்ஸ் அப்பை பொறுத்தவரை ‘நாளோறு வண்ணம் பொழுதொரு மேனி’ என அப்பேட்களை மெட்டா நிறுவனம் அறிவித்து வருகிறது. எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ஸ்மார்ட் போனில் உள்ள வாட்ஸ் அப்பை அவ்வப்ப்போது அப்டேட் செய்து கொள்வது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Technology, WhatsApp, WhatsApp Audio