2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பெண் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

2020ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய பெண் பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா?

கங்கனா ரனவத், அங்கிதா லோகண்டே,ரியா சக்ரவர்த்தி, கனிகா கபூர்,

  • News18
  • Last Updated :
  • Share this:
ஒவ்வொரு ஆண்டின் இறுதியில், கூகுள் இந்தியா (Google India) அதிகம் தேடப்பட்ட இந்தியர்களின் பட்டியலை வெளியிடுகிறது. இந்த ஆண்டு வெளியான பட்டியலில் இந்தியாவில் யாரெல்லாம் இடம் பெற்றுள்ளார்கள் என்பது குறித்து இங்கு பாப்போம்.

இந்தியாவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 50% மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்திய இணைய பயனர்களின் எண்ணிக்கை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடாவின் மக்கள்தொகையை பல விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மக்கள் கூகுளில் யாரை அதிகம் தேடுகிறார்கள் என்று கூகுள் எடுத்த கணக்கில் முதல் ஐந்து பெண்களின் (Googled Indian women) தகவலை காணலாம். 

கனிகா கபூர் (Kanika Kapoor) : 

கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஏப்ரல் மாதம், பாடகி கனிகா கபூர் கோவிட் -19 தொற்றுக்கு ஆளானார். விரைவில், பல ஊடக அறிக்கைகள் கனிகா சுயமாக தனிமைப்படுத்தப்படுவதற்கு பதிலாக லண்டனில் இருந்து வந்த பின்னர் விருந்துகளில் கலந்து கொண்டதாகக் கூறியது. அவர் தனது பயண வரலாற்றை வெளிப்படுத்தாததற்காகவும், பல பிரபலங்களின் ஆரோக்கியத்தை பாதித்ததற்காகவும் சமூக ஊடகங்களில் அவரை பற்றி விமர்சனம் செய்தனர். இதனால் ஒட்டுமொத்த நாடும் வெறித்தனமாக  கனிகா பற்றிய தகவலை கூகுளில் தேடி உள்ளனர். 

ரியா சக்ரவர்த்தி (Rhea Chakraborty) : 

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு பிறகு ரியா சக்கரவர்த்தியின் பெயர் கூகுளில் அதிகம் தேடப்பட்டது. சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பின்னால் இருந்த அரசியல் மட்டுமல்லாது போதை பொருட்களால் சந்தேகப்பட்டு ரியா, கைது செய்யப்பட்டார் என்பதை நாடறியும். இது போன்ற பல பிரச்னைகளில் சிக்கியதால் ரியா கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெண்மணியானர்.  பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவைத் தொடர்ந்து, ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் போதைப்பொருட்களைக் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டனர். 

அங்கிதா லோகண்டே(Ankita Lokhande) :

பாலிவுட் மற்றும் தொலைக்காட்சி நடிகை அங்கிதா லோகண்டே தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மூலம் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தொலைக்காட்சி நடிகர் லோகண்டே, சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலி ஆவார். சுஷாந்த் தற்கொலை செய்து கொண்ட பிறகு, மறைந்த நடிகர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் மற்றும் சமூகத்தின் பல பிரிவுகள் சந்தேகித்தன. சுஷாந்த் மனநலப் பிரச்சினைகளால் போராடியதால் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் குறித்து சிபிஐ (CBI) விசாரணையை கோரியதாகவும் அங்கிதா லோகண்டே முதல் முதலாக குரல் கொடுத்தார்.  

கங்கனா ரனவத் (Kangana Ranaut) : 

இந்தி, தமிழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ள  நடிகை கங்கனா ரனவத். 2006ம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை இவர் வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் திரைப்படத்துறைக்கு கங்கனா அறிமுகமானார். இந்த ஆண்டு, கங்கனா ட்விட்டரில் சேர்ந்து பல சமூக மற்றும் அரசியல் விஷயங்களில் தனது கருத்துக்களை உரக்க தெரிவித்தார். பாலிவுட் பிரபலங்களான கரண் ஜோஹர் மற்றும் அவரது நண்பர்கள் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்திற்கு காரணம் என்று அவர் வலியுறுத்தினார். அவரது மும்பை அலுவலகம் BMCயால் இடிக்கப்பட்டபோது கங்கனா பரவலாக பொதுவெளியில் பேசப்பட்டார்.

திஷா பர்மர் (Disha Parmar) : 

பாடகரும், பிக் பாஸ் 14ன் போட்டியாளருமான ராகுல் வைத்யா தனது காதலியான திஷா பர்மரை தேசிய தொலைக்காட்சியில் ப்ரொபோஸ் செய்தார், அது தலைப்புச் செய்தியாக அமைந்தது. திஷா ஒரு நடிகையும் ஆவார். பலரும் அவரை திரையில் ரசித்துள்ளனர். திரை பின்புலத்தை சார்ந்த சிலர் அவரது திட்டத்திற்கு பதிலளிக்கும்படி அவரை வற்புறுத்தினர். இந்த பட்டியலில் உள்ள மீதமுள்ள பெண்கள் ஏக்தா கபூர், பயல் கோஷ், சஞ்சனா சங்கி, மேகனா ராஜ், மற்றும் ஹிமான்ஷி குரானா (Ekta Kapoor, Payal Ghosh, Sanjana Sanghi, Meghana Raj, and Himanshi Khurana) மற்றும் அர்னாப் கோஸ்வாமி (Arnab Goswami) ஆகியோரும் உள்ளதில் ஆச்சர்யம்படுவதற்கு ஒன்றுமில்லை, குறிப்பாக கனிகா கபூர், அமிதாப் பச்சன், ரியா சக்ரவர்த்தி, மற்றும் அங்கிதா லோகண்டே ஆகியோர் கூகுளின் டாப் 10 லிஸ்டுகளில் உள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: