”காற்று சுத்திகரிப்பான்… ஹை-டெக் தொழில்நுட்பம்…”- ஏ.ஆர்.ரகுமானின் மாஸ்க் குறித்து ‘முனுமுனுக்கும்’ நெட்டிசன்கள்… விலை எவ்வளவு தெரியுமா?

முகக்கவசத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சுத்திகரிப்பான்கள் காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டதால் இடையூரின்றி பல மணி நேரம் அணிந்துகொள்ள முடியும்.

முகக்கவசத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சுத்திகரிப்பான்கள் காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டதால் இடையூரின்றி பல மணி நேரம் அணிந்துகொள்ள முடியும்.

  • Share this:
கொரோனா தடுப்பூசியை  செலுத்திக்கொண்ட பின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முகக்கவசத்தோடு எடுத்துக்கொண்ட செல்பி வைரலானது. ஏ.ஆர்.ஆர் அணிந்திருக்கும் முகக்கவசத்தைப் பற்றி நெட்டிசன்கள் முனுமுனுக்கத் தொடங்கினர்.

கொரோனா நோய்தொற்றுக்கு மத்தியில் முகக்கவசங்கள் நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டன. வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது எப்படி மொபைல், பர்ஸ் போன்ற விஷயங்களை வைத்திருக்கிறோமா என்று ஒருமுறை பரிசோதித்துவிட்டு செல்வதுபோல் முகக்கவசத்தை அணிந்திருக்கிறோமா என்று ஒருநொடி நிதானித்துவிட்டு செல்கிறோம். அந்த அளவிற்கு முகக்கவசம் நம் வாழ்வின் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்டது.

காற்றை சுத்திகரிக்கும் வகையிலான முகக்கவசம் ஒன்றை எல்ஜி நிறுவனம் கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்ட இசையமைப்பாளர் ஏர்.ஆர்.ரகுமான், ‘தடுப்பூசி போட்டாச்சு... நீங்க..?’ என்ற ஒரு பதிவுடன் தனது மகனுடன் எடுத்தக்கொண்ட செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் அணிந்திருந்த முகக்கவசம் ஹை-டெக் தொழில்நுட்பம் கொண்டதாக இருந்ததால் நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளானது. எந்த மாதிரியான மாஸ்க் இது? என்ன விலை? வித்தியாசமாக இருக்கிறதே.. என்பது போல் பேச்சு கிளம்பியது. ஏ.ஆர்.ரகுமான் அணிந்திருந்த முகக்கவசம் குறித்து இங்கே பார்ப்போம்.

ஹை-டெக் முகக்கவசம்:

எல்ஜி நிறுவன தயாரிப்பாக கருதப்படும் இந்த முகக்கவசத்தின் இரு புறங்களிலும் காற்று சுத்திகரிப்பான்கள் இருக்கும். இந்த சுத்திகரிப்பான்கள் காற்றை சுத்திகரித்து உள்ளே அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டதால் இடையூரின்றி பல மணி நேரம் அணிந்துகொள்ள முடியும். முகக்கவசத்தில் பொருந்தப்பட்டிருக்கும் சென்சார், அணிந்திருப்போரின் சுவாச சுழற்சிக்கு ஏற்ப அளவைமாற்றி கொள்ளும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். 
View this post on Instagram

 

A post shared by ARR (@arrahman)


மாஸ்க் அணிந்திருக்கும் போது கிருமிகள் நம்மை நெருங்காத வண்ணம் காத்துக்கொள்ள UV-LED ஒளி பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த முகக்கவசமானது, அதனை அணிவோருக்கு சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்க உதவுகிறது. எனவே, மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்படாத வண்ணம் இந்த முகக்கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகக்கவசத்தில் ஒவ்வொரு கூறுகளும் மாற்றத்தக்கவை என்றும் மறுசுழற்சி செய்யக்கூடியவை என்றும் சொல்லப்படுகிறது. 820 mAh பேட்டரி திறனுடைய இந்த மாஸ்க்கை 2 மணி நேரம் முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்த-சக்தி பயன்பாட்டில் (Low-power mode) 8 மணிநேர நீடிக்கும் எனவும், அதிக-சக்தி பயன்பாட்டில் (High-power mode) 4 மணி நேரம் நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 30 நாட்கள் பயன்பாட்டிற்கு பிறகு முகக்கவசத்தில் உள்ள ஃபில்டர்களை மட்டும் மாற்ற வேண்டியது அவசியம். இப்படிப்பட்ட ஹை-டெக் தொழில்நுட்பங்களை கொண்ட இந்த முகக்கவசத்தின் விலை அமெரிக்க டாலர் மதிப்பில் 249க்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவதால் இந்திய ரூபாய் மதிப்பில் இந்த முகக்கவசத்தின் விலை சுமார் 18 ஆயிரமாக கூறப்படுகிறது.
Published by:Archana R
First published: