₹ 11 ஆயிரம் விலை தள்ளுபடி உடன் விற்பனையில் நோக்கியா 8.1..!

12 + 13 மெகாபிக்சல் உடனான இரண்டு ரியர் கேமிராக்கள் உடன் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமிராவும் உள்ளது.

Web Desk | news18
Updated: September 2, 2019, 4:21 PM IST
₹ 11 ஆயிரம் விலை தள்ளுபடி உடன் விற்பனையில் நோக்கியா 8.1..!
நோக்கியா
Web Desk | news18
Updated: September 2, 2019, 4:21 PM IST
நோக்கியா 8.1 ஸ்மார்ட்ஃபோனுக்கு 11 ஆயிரம் ரூபாய் விலை தள்ளுபடி அளிக்கப்பட்டு விற்பனையில் உள்ளது.

மத்திய தர ஸ்மார்ட்ஃபோன்களின் பட்டியலில் சிறந்ததாக விளங்கி வருகிறது நோக்கியா 8.1. கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான நோக்கியா 8.1 ஸ்மார்ட்ஃபோனுக்கு தற்போது நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் 11 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகமானபோது 27,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்த நோக்கியா 8.1 இதுவரையில் விலை தள்ளுபடிகளைப் பெற்று வந்துள்ளது. இம்முறை நோக்கியா ஆன்லைன் ஸ்டோரில் 11 ஆயிரம் ரூபாய் விலை குறைக்கப்பட்டு 15,999 ரூபாய் ஆக உள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடனான ஃபோனின் விலை ஆகும்.


இதே ஃபோன் 6ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டதாக இருந்தால் அதனது விலை 22,999 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6.18 இன்ச் முழு ஹெச்டி ரெசொலியூஷன் உடனான நோக்கியா 8.1 Qualcomm Snapdragon 710 SoC திறன் கொண்டதாக உள்ளது.

12 + 13 மெகாபிக்சல் உடனான இரண்டு ரியர் கேமிராக்கள் உடன் 20 மெகாபிக்சல் செல்ஃபி கேமிராவும் உள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை, இரு சிம் பொருத்தும் வகையிலான வசதி, ப்ளுடூத், VoLTE உடனான 4ஜி LTE, டைப் C யூஎஸ்பி போர்ட் மற்றும் 3,500mAh பேட்டரி கூடுதல் சிறப்பு அம்சங்கள் ஆகும்.

மேலும் பார்க்க: 30 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ரியல்மி 5..! மீண்டும் இன்று இரவு விற்பனை தொடங்குகிறது!
First published: September 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...