பேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜ் செயலியான வாடஸ் ஆப் புதிய பிரைவசி பாலிசியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய பிரைவசி பாலிசியை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே வாட்ஸ் ஆப்-ஐ பயன்படுத்த முடியும், மற்றவர்களுக்கு சேவை வழங்கப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாடஸ் ஆப் பயனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், வாஸ்ட் ஆப்பின் புதிய பிரைவசி பாலிசி வாடிக்கையாளர்களின் தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனால், வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்துவதை தவிர்த்து டெலிகிராம், சிக்னல் செயலிகளை பயன்படுத்துமாறு முக்கிய நிறுவனங்களின் தலைவர்கள் சமூகவலைதளங்கள் மூலம் கேட்டுக்கொண்டனர். இது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வாட்ஸ் ஆப் பயனாளர்கள் தங்களின் கவனத்தை டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆப் பக்கம் திருப்பியுள்ளனர். தனிநபர் தகவல் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படாது, முகநூலுடன் தகவல்களை பகிரமாட்டோம் என வாட்ஸ் ஆப் விளக்கமளித்தாலும், அது மக்களிடையே எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் டெலிகிராம் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆக்டிவ் பயனர்களின் எண்ணிக்கை 500 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் டெலிகிராம் தெரிவித்துள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் ஆசியா கண்டத்தில் இருந்து மட்டும் 38 விழுக்காட்டினர் டெலிகிராம் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். ஐரோப்பாவில் 27 விழுக்காட்டினரும், லத்தீன் அமெரிக்க நாடுகளில் 21 விழுக்காடினரும் புதிதாக டெலிகிராமில் இணைந்துள்ளனர். தனிநபர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் செயலிகளில் டெலிகிராம் முதன்மையான இடத்தை வாடிக்கையாளர்களிடம் பெற்றுள்ளதாகவும் அந்த நிறுவனம் பெருமிதம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குறைக்கும் செயலில் டெலிகிராம் ஒருபோதும் இறங்காது என அந்த நிறுவனத்தின் CEO துருவ் (Durov) தெரிவித்துள்ளார். ஆப்பிள் பயனாளர்களிடையே சிக்னல் செயலி முதல் இடத்திலும், டெலிகிராம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. வாட்ஸ் ஆப் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப் செயலி மீதான நம்பிக்கையை வாடிக்கையாளர்கள் இழப்பதற்கு முக்கிய காரணம், அந்த நிறுவனம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் ( FACEBOOK) மற்றும் பேஸ்புக் புரொடக்ட்- உடன் பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது.
இதனால், வாடிக்கையாளர்களின் மனநிலை மற்றும் தனிநபர் தகவல்களை பேஸ்புக் அறிந்துகொண்டு, அதற்கேற்ப விளம்பரங்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதாக குற்றம்சாட்டப்படுகிறது. புதிய பிரைவசி பாலிசியில், எப்போதும் லொக்கேஷன் ( location on) ஆன் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும் என வாட்ஸ் ஆப் கூறுகிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் லொக்கேஷனை ஆப் செய்தால், உங்களின் IP address மற்றும் தொலைபேசி எண்ணின் code -ஐ What's app நிறுவனம் டிராக் செய்வதாகவும் கூறப்படுகிறது.
புதிய விதிமுறைகள் அனைத்தும் டைக்னோஸ்டிக் ( diagnostics) மற்றும் ட்ரபுள்ஸூட்டிங் (troubleshooting) ஆகியவற்றுக்காக மட்டுமே என விளக்கமளித்தாலும், இது தனிநபர் தகவல்களை திருடுவதற்காக அந்த நிறுவனம் செய்யும் மோசடி என பயனர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இதற்காக அந்த நிறுவனம் அளிக்கும் விளக்கமும் மக்களிடையே நம்பிக்கையை பெறவில்லை. இதனால், டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளின் பயன்பாடு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது.