முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / நீங்கள் இதுவரை Paytmலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தைப் பரிவர்த்தனை செய்துள்ளீர்களா.! விவரம்

நீங்கள் இதுவரை Paytmலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்குப் பணத்தைப் பரிவர்த்தனை செய்துள்ளீர்களா.! விவரம்

Paytm

Paytm

Paytm | உங்கள் Paytm வாலெட் மூலம் உங்கள் மொபைல் மற்றும் DTH ஐ ரீசார்ஜ் செய்வது மட்டுமின்றி கிரெடிட் கார்டு மற்றும் எரிவாயு சிலிண்டர் பில்களையும் செலுத்தலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

Paytm வாலெட்டின் பன்முகத்தன்மையைக் கருத்தில்கொள்ளும்  போது12 மில்லியனுக்கும் அதிகமான ஸ்டோர்ஃபிரண்ட்களில்  உங்கள் வாலட் இருப்பைப் பயன்படுத்துவது முதல் உங்கள்  வாலட்டிலிருந்து மற்ற பயனர்களுக்குப் பணத்தை பரிமாற்றுவது  வரையிலும் நேரடியாக வங்கிகளுக்கிடையேயான பணப்  பரிவர்த்தனைகளுக்காகவும் மற்றும் பலவற்றிற்காகவும் Paytm UPIஐப் பயன்படுத்தலாம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லைஇன்றைய டிஜிட்டல் உலகில் Paytm வாலெட் என்பது  இன்றியமையாத ஒன்றாகும்.

உங்கள் Paytm வாலெட் மூலம் உங்கள் மொபைல் மற்றும் DTH ஐ ரீசார்ஜ் செய்வது மட்டுமின்றி கிரெடிட் கார்டு மற்றும் எரிவாயு சிலிண்டர் பில்களையும் செலுத்தலாம். உங்கள் வாலெட் மூலம் காப்பீட்டு பிரீமியங்கள் மற்றும் வீட்டு வாடகைக்குப் பணம் செலுத்தலாம், ஃபாஸ்ட் டேக்கை ரீசார்ஜ் செய்து, ஃபுட் கார்டுகள் மற்றும் கிஃப்ட் வவுச்சரை வாங்கலாம். உங்கள் Paytm வாலெட் என்பது உங்களின் அனைத்து பில்களையும் செலுத்தி ரீசார்ஜ்களைச் செய்வதற்கான ஒரிடச் சேவை பகுதியாகும் - எனவே அதை டாப்-அப் செய்து வைத்திருப்பது எப்போதுமே சிறந்த யோசனையாகும்.

அதன் மீதான ஈர்ப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், Paytm மூலம் பயனர்கள் அதன் வாலெட்டிலிருந்து எந்த வங்கிக் கணக்கிற்கும் பணத்தைப் பரிவர்த்தனை செய்யலாம், அது உங்களுடைய சொந்த கணக்காக அல்லது வேறு எந்தவொரு கணக்காக இருப்பினும் அல்லது பெறுநர் Paytm பயனராக இல்லாவிட்டாலும் கூட பரிவர்த்தனை செய்யலாம். இவை அனைத்திற்கும், உங்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் விதிக்கப்படாது! உண்மையில் இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தோன்றுகிறதா? சரி, உங்கள் வாலெட்டிலிருந்து எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் பணத்தை எவ்வாறு பரிவர்த்தனை செய்வது என்பதை இங்கே தெரிந்து கொள்ளவும்.

எப்படி பரிவர்த்தனை செய்வது :

சரி, தொடங்கலாம். உங்களுக்கு அவசர நிதி தேவை இருப்பதாகவும், உடனடியாக கையிருப்பு பணம் தேவை என்றும் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு சில நிமிடங்களில் நீங்கள் பணத்தைப் பெற மிகக் குறைவான தேர்வுகளே உள்ளன. உங்கள் வாலெட்டிலிருந்து உங்கள் கணக்கிற்குப் பணப் பரிவர்த்தனை செய்வதற்கானத் தேர்வு இருப்பது இதுபோன்ற சூழ்நிலைகளில் நிலைமையை எளிதாக்க கூடியதாக இருக்கலாம்.

உங்கள் வாலெட்டிலிருந்து எந்த வங்கிக் கணக்கிற்கும் பணத்தைப் பரிவர்த்தனை செய்ய நீங்கள் செய்ய வேண்டியவை பின்வருமாறு.

படிநிலை 1நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம்உங்கள் மொபைலில் உங்கள் Paytm செயலியைத் திறந்து, 'எனது Paytm' பகுதிக்குச் சென்று, 'Paytm வாலெட்' என்பதைக் கிளிக் செய்யவும்.

படிநிலை 2இது 'பணம் செலுத்துதல்', 'வங்கி பரிவர்த்தனை செய்தல்', 'பரிசு வவுச்சர் அனுப்புதல்மற்றும் 'தானியக்க பணம் சேர்த்தல்போன்ற பல்வேறு விருப்பங்களைத் திறக்கும். 'வங்கி பரிவர்த்தனை செய்தல்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

படிநிலை 3நீங்கள் பரிவர்த்தனை செய்ய விரும்பும் தொகையைச் சேர்க்கவும் - இது INR 20 முதல் INR 25,000 வரை எவ்வளவாக வேண்டுமானாலும் இருக்கலாம், பணத்தைப் பரிவர்த்தனை செய்ய வேண்டிய வங்கி விவரங்களைச் சேர்க்கவும். பரிவர்த்தனை செய்யக்கூடிய மொத்தத் தொகையானது பயனரின் KYC (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) நிலையைப் பொறுத்தது. முழுமையான KYC இருந்தால், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட தொகையை உங்கள் கணக்கிற்குப் பரிவர்த்தனை  செய்ய முடியும். பகுதியளவு KYC அல்லது அடிப்படை KYC ஆனது INR 25,000 ஐ விட அதிக தொகையை உங்கள் வங்கிக்குப் பரிவர்த்தனை  செய்ய அனுமதிக்காது. KYC இல்லாத அல்லது காலாவதியான KYC கொண்டிருந்தால் உங்களால் உங்கள் வாலெட்டில் எந்தவொரு தொகையையும் சேர்க்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், நீங்கள் ஒரு புதிய கணக்கைச் சேர்க்கும்போது, கணக்கு எண், IFSC மற்றும் கணக்குதாரரின் பெயரை உள்ளிட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இந்த செயல்முறையை நீங்கள் நிறைவு செய்தவுடன், அடுத்த முறை நீங்கள் சேமித்த கணக்குகளிலிருந்து வங்கிக் கணக்கைத் தேர்வுசெய்தாலே போதும்.

படிநிலை  இந்த முழு செயல்முறைக்கும் ஒரு மாற்று வழி உள்ளது. ‘பணம் செலுத்துதல்’ என்ற பிரிவில், நீங்கள் QR குறியீட்டு ஸ்கேனரைத் திறந்து, பெறுநரின் UPI QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். இந்த சமயத்தில், நீங்கள் பணம் செலுத்தும்போது, உங்கள் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு மற்றும் உங்கள் Paytm வாலட்டிலிருந்து பணத்தை அனுப்பலாம். மீண்டும் நினைவில்கொள்க, முழு KYC உங்களை அதிகபட்ச தொகையைப் பரிவர்த்தனை செய்ய அனுமதியளிக்கும், மேலும் இந்த அம்சத்தை நீங்கள் விரும்பினால் எந்த நேரத்திலும் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

படிநிலை 5நீங்கள் மொபைல் எண்ணை உள்ளிடலாம் அல்லது தொடர்புகளிலிருந்து தேர்வு செய்யலாம். UPI இல் பதிவு செய்யப்பட்ட எண்களாக இருப்பின், உங்கள் கணக்கு அல்லது வாலெட்டிலிருந்து தொகையை அனுப்பலாம். நீங்கள் எந்த முறையைப் பயன்படுத்த விரும்பினாலும், வாலெட்டிலிருந்து உங்கள் கணக்கிற்குப் பணத்தைப் பர்வர்த்தனை செய்வது முற்றிலும் இலவசம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த வேண்டியதில்லை.

இவற்றை அறிந்துகொள்ளுங்கள்:

முதலாவதாக, எந்தவொரு வங்கிக் கணக்கிற்கும் தொகையைப் பரிவர்த்தனை செய்வதற்கு உங்கள் வாலெட்டில் இருப்பு வைத்திருக்க வேண்டும். உங்களுடைய கணக்கில் இருப்பு தொகை குறைவாக இருந்தால், UPI, கிரெடிட்/டெபிட் கார்டுகள் அல்லது நெட்பேங்கிங் மூலம் உங்கள் வாலெட்டை டாப் அப் செய்யவும். Paytm இல் ‘தானியக்க பணம் சேர்த்தல்’ என்ற அம்சம் இருப்பானது நீங்கள் முன்பே தீர்மானித்த குறிப்பிட்ட வரம்பிற்குக் குறைவாக செல்லும் போதெல்லாம் தீர்மானிக்கப்பட்ட தொகையை உங்கள் வாலெட்டில் தானாகவே டாப் அப் செய்யும்.

Paytm இன் புதிய அம்சமானது Paytm வாலெட் ட்ரான்சிட்  கார்டுகளைக் கொண்டுள்ளதுஇதை கொண்டு உங்கள் வாலட்  இருப்பை ஆன்லைனில் எந்த இடத்தில் வேண்டுமானாலும்  செலுத்தலாம்கடையில் ஷாப்பிங் செய்யலாம்மெட்ரோ  பேருந்துகளில் கட்டணம் செலுத்தலாம்.

சில சமயங்களில், ஏதேனும் நெருக்கடியான சூழ்நிலையானது உங்கள் வங்கிக் கணக்கில் விரைவாக நிதியைப் பெற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தலாம். Paytm வாலெட்டை பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளில் இதைச் செய்வதற்கான திறனைக் கொண்டிருப்பது இன்று கிடைக்கக்கூடிய முக்கியமான டிஜிட்டல் அம்சங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். உங்கள் Paytm செயலியைத் திறந்துஇன்றே உங்கள் வாலட்  இருப்பை டாப் அப் செய்யவும் - அது எப்போதுயாருக்கு உதவியாக இருக்கும் என்று உங்களுக்கே தெரியாது!

First published:

Tags: Bank accounts, Paytm