• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • போட்டோகிராபியின் அழகை மீட்டெடுக்க ஒரு ஸ்மார்ட்போன் - OnePlus 9 series OTA சிறப்பம்சங்கள்!

போட்டோகிராபியின் அழகை மீட்டெடுக்க ஒரு ஸ்மார்ட்போன் - OnePlus 9 series OTA சிறப்பம்சங்கள்!

ஒன்பிளஸ் 9

ஒன்பிளஸ் 9

நீங்கள் கேப்சர் செய்யும் எந்தவொரு படமும் நீங்கள் கேப்சர் செய்ய விரும்பிய படமாக மாறும் முன் நெகட்டிவ்வில் தோன்றும். மேலும் இந்த மோடு அந்த காலகட்டத்தில் கருப்பு வெள்ளை திரைப்படத்தில் உள்ள சிக்னேச்சர் Hasselblad XPan தோற்றத்தையும் எமுலேட் செய்கிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    சமீபத்திய மாடலான OnePlus 9 series OTA வில் உள்ள Hasselblad-XPan மோடு என்பது கவர்ச்சிகரமான, எதிர்பார்ப்பு நிறைந்த ஃபிலிம் போட்டோகிராபிற்கு ஒரு புதிய தலைமுறையை அறிமுகப்படுவதற்கானச் சிறந்த வழியாகும்.

    OnePlus சமீபத்தில் தனது OnePlus 9 series க்காக ஒரு புதிய XPan மோடை அறிமுகப்படுத்தும் OTA ஐ வெளியிட்டுள்ளது. இதைப் பார்க்கும் போது, ஒரு வழக்கத்திற்கும் மாறான 65:24 கிராப் கொண்ட இன்னொரு சிமுலேஷன் மோடாக தோன்றினாலும், அதை விடச் சற்று அதிகமானது.

    Hasselblad உடன் இணைந்து உருவாக்கப்பட்ட XPan, போட்டோகிராஃபர்கள் தங்கள் கதை சொல்லும் திறன்களை மேம்படுத்த உதவும் மற்றுமொரு படைப்பாற்றல் கருவியாகும். XPan முதன்முறையாக 1998 இல் கண்டுபிடிக்கப்பட்டது, அன்று முதல் இன்றுவரை வழக்கத்திற்கும் மாறான சிறந்த ஒன்றாகத் திகழ்கிறது. பல தசாப்தங்களாக இருந்து வரும் 3:2 அஸ்பெக்ட் ரேஷியோவைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, XPan 65:24 அஸ்பெக்ட் ரேஷியோ போன்ற சினிமா தோற்றத்தை வழங்க ஒரு பெரிய அளவிலான பகுதியை எக்ஸ்போஸ் செய்கிறது.



    திரைப்படத் தயாரிப்பாளர்கள் பல ஆண்டுகளாக இந்த பரந்த மற்றும் குறுகிய அளவிலான அஸ்பெக்ட் ரேஷியோவைப் பயன்படுத்தி வருகின்றனர் (அவர்கள் அனமார்ஃபிக் எனப்படும் சற்று அகலமான வெர்ஷனைப் பயன்படுத்தினாலும் கூட), மற்றும் இந்த பயன்பாட்டை நீங்கள் பல்ப், ஃபிக்ஷன், பிளேட் ரன்னர் (1982), மற்றும் ஏலியன் போன்ற ஐகானிக் திரைப்படங்களில் காணலாம். இந்த பரந்த ஃபிரேமில் இன்னும் நிறைய தகவல்கள் கிடைக்கின்றன, மேலும் காட்சிகளைக் கடந்து செல்லும்போது ஒரு கதையைக் கூற முடியும். இந்த கதை சொல்லும் திறனை தான் XPan ஊக்குவித்தது, மேலும் திரைப்படங்களில் இதன் ஷாட் புகைப்படக்காரர்களைத் தங்களின் ஷாட், அதன் கலவை, மற்றும் அவர்கள் படமெடுக்க முயற்சிக்கும் கதை ஆகியவற்றைப் பற்றி சிந்திக்க தூண்டியது. 

    XPan mode என்பது OnePlus 9 series போன்களுக்கான வெறும் கிளாசிக் அஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் ஸ்டைலிற்கான எமுலேஷன் மட்டுமல்ல, இது அனுபவத்தின் எமுலேஷனும் கூட.

    தொடங்குவதற்கு, உங்கள் OnePlus camera செயலிக்குச் சென்று XPan க்கு மாற்றவும். உடனடியாக, உங்கள் ஃபீல்டு ஆஃப் வியூ 65:24 அஸ்பெக்ட் ரேஷியோவிற்கு குறுக்கப்பட்டு, அந்த காலகட்டத்தில் XPan கேமராக்களில் டிப்ளாய் செய்யப்பட்ட 45 mm or 65 mm லென்ஸ்களுக்கு எமுலேட் செய்யப்பட மேற்கொண்டு மாற்றப்படும். OnePlus 9 இல் தேவைக்கேற்ப அல்ட்ரா-வைடு மற்றும் வைடு ஆங்கில் கேமராக்களுக்கு இடையில் மாறுவதன் மூலம் இவ்வாறு செய்ய முடியும்.

    Also read... செப்டம்பர் மாதத்தில் ரூ.20,000-க்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் டிவிகள் விவரம்!

    ஷட்டர் பட்டன் ஆரஞ்ச் நிறத்திலுள்ள Hasselblad-esque மூலம் மாற்றப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் கேப்சர் செய்யும் எந்தவொரு படமும் நீங்கள் கேப்சர் செய்ய விரும்பிய படமாக மாறும் முன் நெகட்டிவ்வில் தோன்றும். மேலும் இந்த மோடு அந்த காலகட்டத்தில் கருப்பு வெள்ளை திரைப்படத்தில் உள்ள சிக்னேச்சர் Hasselblad XPan தோற்றத்தையும் எமுலேட் செய்கிறது.



    இதைச் சிறப்பாக மாற்றுவது ஃபிலிம் சிமுலேஷனோ அல்லது ஃபோர்ஸ்டு பெர்ஸ்பெக்டிவோ அல்ல, மாறாக, போட்டோகிராபியை ஆதரிக்கும் மெதுவான, அதிகளவிலான அளவீட்டு அணுகுமுறையே இதைச் சிறப்பாக மாற்றுகிறது. இந்த மோடு நீங்கள் வெறுமனே ஒரு டஜன் படங்களை சிறப்பாக படம் பிடிக்க உதவும் மோடு அல்ல. இந்த மோடானது நீங்கள் உங்கள் காம்போசிஷன் மற்றும் ஃபிரேமிங்கை பற்றி அக்கறை கொள்ளும் போது, அதற்கேற்ப அதிக ரிவார்டுகளைத் தரும் படங்களைப் பிடிக்க உங்களுக்கு உதவும் ஒரு மோடாகும்.

    Instagram ஃபில்டர்களைப் போல, இது பயன்படுத்துவதற்கு எளிதான மோடாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது தான் இதனை பயனுள்ளதாக்குகிறது. இந்த மோடின் வெற்றி, இது போன்ற வடிவமைப்பில் நாம் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறோம் என்பதைப் பொறுத்தது. மற்றொரு வகையில் சொல்லப்போனால், நவீன காலத்தில் ஃபிலிம் போட்டோகிராபியின் அழகை மீட்டெடுக்க யாரோ ஒருவர், ஒரு காலத்தில் மிகவும் விரும்பப்பட்ட, ஆனால் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத வடிவத்தைப் புதுப்பிக்க முயற்சிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: