Home /News /technology /

ட்விட்டர் யூஸர்களுக்கு ஹேப்பி நியூஸ்; இனி ட்வீட்டை எடிட் பண்ணலாம்... எப்போது இருந்து தெரியுமா? 

ட்விட்டர் யூஸர்களுக்கு ஹேப்பி நியூஸ்; இனி ட்வீட்டை எடிட் பண்ணலாம்... எப்போது இருந்து தெரியுமா? 

ட்விட்டர்

ட்விட்டர்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று ட்விட்டரிலும் ட்வீட் செய்த பிறகு அதை எடிட் செய்யும் வசதி இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • New Delhi, India
    ட்விட்டர் விரைவில் எடிட் ஆப்சனுக்கான சோதனையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    சோசியல் மீடியாவில் கருத்துக்கள், போட்டோஸ், வீடியோ ஆகியவற்றை பகிரக்கூடிய மிகவும் முக்கியமான தளமாக ட்விட்டர் உள்ளது. ஆனால் இதில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்று ட்விட்டரிலும் ட்வீட் செய்த பிறகு அதை எடிட் செய்யும் வசதி இல்லாதது மிகப்பெரிய குறையாக இருந்து வந்தது. எனவே ட்வீட்டை எடிட் செய்யும் வசதி வேண்டும் என்று பயனர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ட்விட்டரில் எடிட் ஆப்ஷன் வேண்டும் என்பது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தியது பரபரப்பைக் கிளப்பியது.

    அதன் பின்னர் ட்விட்டரை விலைக்கு வாங்க முடிவெடுத்த எலான் மஸ்க், முதலில் எடிட் ஆப்ஷனைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் மஸ்க் பின்வாங்கியதால் எடிட் பட்டன் கிடைக்குமா?, கிடைக்காதா? என மில்லியன் கணக்கான ட்விட்டர் யூஸர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், தற்போது அதற்கான தீர்வு கிடைத்திருக்கிறது.

    ட்விட்டர் நிறுவனம் எடிட் பட்டனுக்கான சோதனையை செப்டம்பர் 21ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், தொடக்கத்தில் இந்த அம்சம் மாதத்திற்கு $4.99 செலுத்தும் அதன் ப்ளூ டிக் சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.

    Read More: ஜியோ நிறுவனம் ஜூலை மாதத்தில் 29.4 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது - டிராய் தகவல்!

    பிளாட்பார்ம் நியூஸின் நிறுவனரான கேசி நியூட்டன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த அம்சம் அடுத்த வாரம் முதல் பொதுமக்களுக்கு வெளியிடப்படும். எனக்கு கிடைத்த ஆவணங்களின் படி, ட்வீட்களை எடிட் செய்வதற்கான பொது சோதனையை செப்டம்பர் 21ம் தேதி முதல் தொடங்க ட்விட்டர் திட்டமிட்டுள்ளது" என பதிவிட்டுள்ளார்.

    ட்விட்டரில் எடிட் பட்டன் - யார் முதலில் பயன்படுத்தலாம்?

    முதல் முயற்சியிலேயெ அனைத்தையும் சரியாக தட்டச்சு செய்வது எளிதல்ல. எனவே ட்விட்டர் யூஸர்கள் எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகளை சரிசெய்ய பல ஆண்டுகளாக எடிட் பட்டனைக் கேட்டு வருகின்றனர்.



    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி, திருத்தப்பட்ட ட்வீட்களின் ஒட்டுமொத்த தகவல்களும் டைம் மற்றும் லேபிளுடன் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ட்வீட்டில் உள்ள லேபிளைத் தட்டினால், முதல் ட்வீட்டில் இருந்து மாற்றப்பட்ட ட்வீட் வரை முழு ஹிஸ்டரியும் தெரியும் எனக்கூறப்படுகிறது.

    இந்த அம்சத்தை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், ட்விட்டர் முதற்கட்ட சோதனையை இம்மாதம் தொடங்க உள்ளது. புதிய அம்சத்தை மக்கள் தவறாக பயன்படுத்தக்கூடுமா? என்பதைக் குறித்து ஆராய ட்விட்டர் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

    Read More: ஆப்பிளின் iphone 14 சீரிஸ் அறிமுகத்திற்கு பின் விலை குறைக்கப்பட்ட iPhone 12 மற்றும் iPhone 13!

    "எழுத்துப்பிழைகளை சரிசெய்தல், தவறவிட்ட சொற்களைச் சேர்ப்பது மற்றும் பலவற்றைச் செய்ய சிறிது காலமே உள்ளது" என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது. இந்த தகவல் மில்லியன் கணக்கான ட்விட்டர் யூஸர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Instagram, Twitter

    அடுத்த செய்தி