• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • வாட்ஸ்அப் ஆப்பில் தீபாவளி வாழ்த்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம்- வழிமுறை இதோ..

வாட்ஸ்அப் ஆப்பில் தீபாவளி வாழ்த்து ஸ்டிக்கர்ஸ் அனுப்பலாம்- வழிமுறை இதோ..

Whatsapp Deepavali Sticker

Whatsapp Deepavali Sticker

வாட்ஸ்அப்பில் அனுப்புவதற்கான சிறந்த தீபாவளி 2021 ஸ்டிக்கர்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.,

  • Share this:
நம் நாட்டில் புது வருடப்பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி , கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட இருக்கும் பண்டிகை தீபாவளி.  இப்பண்டிகையின் ஆடம்பரமான கொண்டாட்டம் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்குகிறது. இந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி தந்தேராஸ் என்றும், அதை தொடர்ந்து நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி என்றும் கொண்டாடப்படுகிறது.

தற்போது கொரோனா கட்டுக்குள் இருந்தாலும் மூன்றாவது அலை எப்போது வேண்டுமானாலும் ஆரம்பம் ஆகலாம் என்ற நிலை இருப்பதால், ஒன்றாக இணைந்து கொண்டாட முடியாத சூழ்நிலை இருக்கிறது. ஆனால் நம்மிடம் எந்நேரமும் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மூலம் ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ள ஏதுவாக வாட்ஸ்அப் ஆப்பில் தீபாவளி 2021-ன் ஸ்டிக்கர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்க வார்த்தைகள் போதுமானது என்றாலும், ஸ்டிக்கர்கள் உங்கள் வாழ்த்துக்களை மேலும் அழகாக்கும். வாட்ஸ்அப்பில் சில ஸ்டிக்கர்கள் கொடுக்கப்படிருந்தாலும் கூட, பிற ஆப்ஸ்களில் இருந்து புதிய ஸ்டிக்கர்களை பெற்று நமது அன்புக்குரியவர்களுக்கு அனுப்புவதற்கான ஆப்ஷன்களும் இருக்கிறது. வாட்ஸ்அப்பில் அனுப்புவதற்கான சிறந்த தீபாவளி 2021 ஸ்டிக்கர்களை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை கீழே பார்க்கலாம்.,

Also read:  ச்சீ..ச்சீ.. 300க்கும் மேற்பட்ட பெண்களின் மார்பகங்களை தழுவியதாக பெருமை பேசி வசமாக மாட்டிக்கொண்ட இளைஞர்…

* முதலில் உங்கள் மொபைலில் உள்ள வாட்ஸ்அப் ஆப்பை திறந்து கொள்ளவும்.

* உங்கள் இன்பாக்ஸில், ஸ்டிக்கர் அனுப்ப விரும்பும் நபரின் சாட் பாக்ஸை திறக்கவும்.

* நீங்கள் அனுப்ப விரும்பும் மெசேஜை டைப் செய்து, சாட் பாக்சிற்கு அருகில் உள்ள ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்யவும்

* இப்போது நீங்கள் விரும்பிய ஸ்டிக்கர்களை தேர்வுசெய்து அனுப்பலாம்.

Also read:     புர்கா அணியாமல் ஜீன்ஸ் அணிந்ததற்காக பெண் வாடிக்கையாளரை அவமதித்து விரட்டியடித்த கடைக்காரர்!

* நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர் இல்லையென்றால், ‘+’ ஐகானை தட்டவும். இப்போது அதிகமான ஸ்டிக்கர்கள் உங்கள் திரையில் தோன்றும், அதில் இருந்து தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

* மற்றொரு முறை Google Play Store-ல் சென்று தேடல் பெட்டியில் ‘தீபாவளி’ என டைப் செய்யவும். அதில் தோன்றும் ஸ்டிக்கர்களை கண்டறிந்த டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இதில் எண்ணற்ற ஸ்டிக்கர்ஸ்கள் இருக்கும் என்பதால் உங்களுக்கு தேவையானதை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் ஸ்டிக்கர்ஸ்களுக்கென ஒரு தனிப்பட்ட ஆப்ஸ்களும் இருக்கும். அதனை டவுன்லோடு செய்தும் பயன்படுத்தலாம்.

தீபாவளிப் பண்டிகையைக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வண்ணமயமான வாழ்த்துகளைத் தெரிவிக்க நீங்கள் திட்டமிட்டால், இந்தக் கட்டுரை உங்களுக்கு அவசியமானது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் யூசர்கள் மேற்கண்ட டிப்ஸ்களை பின்பற்றி ஸ்டிக்கர்களை டவுன்லோடு செய்து அனுப்பலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: