Home /News /technology /

இஸ்ரோவின் கனவு திட்டம்.. ககன்யான் ஏவுகணைக்கான முக்கியக் குழுமங்களை இஸ்ரோவுக்கு ஒப்படைத்த ஹிந்துஸ்தான் நிறுவனம் !

இஸ்ரோவின் கனவு திட்டம்.. ககன்யான் ஏவுகணைக்கான முக்கியக் குழுமங்களை இஸ்ரோவுக்கு ஒப்படைத்த ஹிந்துஸ்தான் நிறுவனம் !

இஸ்ரோ

இஸ்ரோ

முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்புகளால் உருவாகும் ககன்யானின் பகுதிகளை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
இந்தியா விண்வெளிக்கு மனிதர்களை ஏற்றிச் செல்லும் தன் முதல் ஏவுகணையான ககன்யானை இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு நிறைவடையும் இந்த வருடம் செலுத்த இருந்தது. ஆனால் தற்போது அது அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ரூ. 10,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் மூலம், 3 பேர் கொண்ட இந்தியக் குழுவை ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு விண்வெளிக்கு அனுப்பி அவர்களைப் பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பி கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு குடியரசு தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி ககன்யான் திட்டம் குறித்து அறிவித்தார்.

விண்வெளிக்குச் சென்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து விண்வெளி வீரர்களை தனியாக ஒரு கேப்சுலே மூலம் பூமியில் தரையிறக்கும் சோதனைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நடத்தி வருகிறது. இதற்காக சென்ற மாதம் ஆளில்லா ஏவுகணை மூலம் க்ரூ எஸ்கேப் சிஸ்டத்தை இயக்கும் லோ ஆல்டிட்யூட் எஸ்கேப் மோட்டாரை இஸ்ரோ வெற்றிகரமாக சோதித்தது.

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த காரணம் என்ன?

முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்புகளால் உருவாகும் ககன்யானின் பகுதிகளை இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் தயாரித்து வருகிறது. முக்கிய பகுதிகள் மிக கவனத்துடன் நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு பல கட்ட சோதனைகள் செய்யப்பட்டு விண்வெளி ஆய்வகத்திற்கு ஒப்படைக்கப்படுகிறது.

ஏப்ரலில், பெங்களூரை தளமாகக் கொண்ட ஹிந்ந்துஸ்தான் இந்த பணிக்கான வன்பொருளை வழங்கியது. இதையடுத்து, தற்போது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) க்ரூ மாட்யூல் ஃபேரிங் (CMF) & ஹை-ஆல்டிடியூட் எஸ்கேப் மோட்டார் த்ரஸ்ட்-ட்ரான்ஸ்ஃபர் ஸ்ட்ரக்சர் (HTS) ஆகியவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் (ISRO) ஒப்படைத்துள்ளது. பின்னர் இந்த ககன்யானின் இரண்டு பெரிய கூறுகள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திடம் ஒப்படைக்கப்பட்டன.



இதுமட்டுமின்றி, ஹிந்துஸ்தான் இஸ்ரோவுடன் இணைந்து அதன் பெரிய ஏவுகணையான பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வியை உருவாக்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டில் விண்வெளி பணிகளுக்காக Mk-III ஏவுகணை வாகனத்தில் பயன்படுத்துவதற்காக, செமி கிரையோஜெனிக் உந்து சக்தி டேங்கை (SC120-LOX) வழங்கியது. இதுவரை தயாரிக்கப்படத்திலேயே மிக கனமானடேங்க் இதுவே ஆகும்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Gaganyan, Hindustan aeronautics, ISRO

அடுத்த செய்தி