78 லட்சம் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களின் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாக பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான டி.மொபைல் தெரிவித்துள்ளது.
உலக அளவில் தொலைத் தொடர்பு சேவை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டி.மொபைல் இருந்து வருகிறது. டி.மொபைல் பெயரை பயன்படுத்தி அமெரிக்காவில் டி.மொபைல் யு.எஸ். இன்ச். (T.mobile US Inc.) நிறுவனம் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், தனது கணினிகள் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களில் சுமார் 78 லட்சம் பேரின் தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாகவும் டி.மொபைல் யு.எஸ். தெரிவித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ஆன்லைன் நிறுவனம் ஒன்று டி.மொபைல் வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக வெளியிட்ட தகவலையடுத்து கடந்த வாரம்தான் இந்த தகவல்கள் தங்களுக்கு தெரியவந்துள்ளதாக டி.மொபைல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: அமெரிக்க ராணுவத்தின் பயோமெட்ரிக் கருவியை கைப்பற்றிய தாலிபான்கள்: அச்சத்தில் ஆப்கான் வீரர்கள்!
சுமார் 8,50,000 ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் மற்றும் முன்னாள் அல்லது வருங்கால வாடிக்கையாளர்களின் 40 மில்லியனுக்கும் அதிகமான பதிவுகள் திருடப்பட்டன என்றும் டி.மொபைல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, சமூக பாதுகாப்பு எண், வாகன ஓட்டுநர் விவரம் போன்றவை திருடுபோயுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவில் ரூ.30,000-க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்!
அமெரிக்காவைச் சேர்ந்த டிஜிட்டல் ஊடகமான வைஸ் தான் இது தொடர்பாக முதலில் தகவலை வெளியிட்டது. 10 கோடி வாடிக்கையாளர்களின் விவரங்கள் தங்களிடம் இருப்பதாக ஹேக்கர் ஒருவர் வைஸ் நிறுவனத்திடம் கூறியதன் அடிப்படையில் இந்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.