ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

கம்யூட்டரின் ஸ்க்ரீன் ப்ரைட்னெஸ் மாற்றினாலே ஹேக் ஆகும் அபாயம்

கம்யூட்டரின் ஸ்க்ரீன் ப்ரைட்னெஸ் மாற்றினாலே ஹேக் ஆகும் அபாயம்

ப்ரைட்னெஸ் ஹேக்கிங்

ப்ரைட்னெஸ் ஹேக்கிங்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கம்யூட்டரின் ஸ்க்ரீன் ப்ரைட்னெஸ் (Screen Brightness) மாற்றுவதைக் கண்காணிப்பதன் மூலமாகவே, உங்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக் செய்ய முடியும் என்னும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

  இஸ்ரேல் நாட்டின், பென் குரியோன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில், ஸ்க்ரீன் ப்ரைட்னெஸை மாற்றும்போது கம்யூட்டரை ஹேக் செய்ய முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, ஸ்மார்ட் ஃபோன், ஐ பேட், லேப்டாப் ஆகியவை பல்வேறு முறைகளில் ஹேக் செய்யப்பட்டுவருவதால், தகவல் பாதுகாப்பின்மை குறித்த பயம் அதிகரித்துள்ளது.

  இண்டெர்நெட் இணைக்கப்படாதபோதும் ஏற்கனவே இருக்கும் டேட்டா ஸ்டீலிங் மால்வேரைப் பயன்படுத்தி தகவல்களை ஹேக் செய்ய முடியும் என்பது தெரியவந்துள்ளது. இந்த மால்வேரை பென் ட்ரைவ் மூலமாக ஒருமுறை கணினியில் பதிவேற்றிவிட்டால், அதன் பிறகு தகவல்களை ஹேக் செய்வது ஹேக்கர்களுக்கு மிகச் சுலபமான வேலை என்றும் தெரியவருகிறது.

  இணைய இணைப்பு இல்லாமலும் நடக்கும் இத்தகைய மால்வேர் தரவுத் திருட்டுகளால் அபாயங்கள் அதிகம் எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also See...

  Published by:Gunavathy
  First published:

  Tags: Computer, Hacking