COVID-19 - கொரோனா வைரஸ் பாதிப்பின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களை குறிவைத்து கணினி வைரஸ் தாக்குதல் நடத்தப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. இந்த அறிவுரைகள் இ-மெயில், இணையதளம், சமூகவலைதளங்கள், டிக்டாக் போன்ற பொழுதுபோக்கு செயலிகள் மூலமாக பரப்பப்பட்டு வருகின்றன.
மக்களிடம் நிலவும் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தலை பயன்படுத்தி கார்ப்பரேட்டு நிறுவனங்களைக் குறிவைத்து கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடந்துவருவது தெரியவந்துள்ளது.
ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதலால் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளன.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'Checkpoint' -இன் அதிகாரிகள் இதுகுறித்து தெரிவிக்கும்போது, "கொரோனா குறித்த தகவல்களுடனும், தலைப்புகளுடனும் உலக சுகாதார நிறுவனத்தின் பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கம்ப்யூட்டர் வைரஸ்டனான மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இரண்டு மாதங்களில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட கணினி வைரஸ் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. பல நிறுவனங் களின் முக்கிய தகவல்கள் திருடப் பட்டுள்ளன.
போலியான மின்னஞ்சல்கள். குறுஞ்செய்திகளை நம்பவேண்டாம். பாஸ்வேர்டு, பாஸ்கோட் ஓடிபி, உள்ளிட்ட எந்த விவரங்களையும் கேட்பது எங்கள் அமைப்பு கேட்பது கிடையாது என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.