குறைவான கட்டணத்தில் கேபிள்டிவி பேக்கேஜ்: அரசு அறிவிப்பு

மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக கிராமப்புற தொகுப்பு , தமிழ்தொகுப்பு 180 என இரண்டு தொகுப்புகளை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: July 11, 2019, 7:24 AM IST
குறைவான கட்டணத்தில் கேபிள்டிவி பேக்கேஜ்: அரசு அறிவிப்பு
மாதிரிப் படம்
Web Desk | news18
Updated: July 11, 2019, 7:24 AM IST
கேபிள் டிவி கட்டணத்தை குறைக்க வேண்டும் என பொதுமக்களுடைய கோரிக்கையை ஏற்று, குறைவான கட்டணத்தில் புதியதாக இரண்டு தொகுப்புகள் அறிமுகம் செய்வதாக அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார் .

தமிழ்நாடு அரசு கேபிளில் பொதுமக்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப கட்டண சேனல்கள் உட்பட பலதரப்பட்ட சேனல்கள் அடிங்கிய மூன்று தொகுப்புகள் தற்போது நடைமுறையில் உள்ளது .

142 கட்டணமில்லா சேனல்கள் கொண்ட 120ரூ +வரி என ஒரு தொகுப்பும் , 142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 37 கட்டண சேனல்கள் கொண்ட 200ரூ +வரி என ஒரு தொகுப்பும் , 142 கட்டணமில்லா சேனல் மற்றும் 49 கட்டண சேனல்களை உள்ளடிக்கிய 220ரூ + வரி என ஒரு தொகுப்பு என மூன்று வகையான கட்டணங்கள் கொண்ட தொகுப்புகள் தற்போது உள்ளன.


இந்நிலையில் , அனைத்து தரப்பு பொதுமக்களும் கேபிள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நேற்றைய தினம் நடைபெற்ற மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ தா.மோ அன்பரசன் உட்பட எம்எல்ஏக்கள் அரசிடம் கேபிள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தொடர்ச்சியாக தகவல் தொழில்நுட்ப துறையின் அறிவிப்புகளின் போது , குறைந்த கட்டணத்தில் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக கிராமப்புற தொகுப்பு , தமிழ்தொகுப்பு 180 என இரண்டு தொகுப்புகளை அமைச்சர் அறிவித்துள்ளார்.

Loading...

142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 12கட்டண சேனல்களை உள்ளடக்கிய கிராமப்புற தொகுப்பு 170ரூ + வரி எனவும் , 142 கட்டணமில்லா சேனல்கள் மற்றும் 28 கட்டண சேனல்களை உள்ளடக்கிய தமிழ்தொகுப்பு180 180ரூ+ வரி எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார் .

இந்த புதிய தொகுப்புளை மக்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்கனேவே உள்ள கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தில் மக்கள் விரும்பிய சேனல்களை பார்த்து ரசிக்க முடியும் எனவும் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...