Home /News /technology /

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க அரசு உத்தரவு.. இதோ எளிய வழிமுறை!

வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்க அரசு உத்தரவு.. இதோ எளிய வழிமுறை!

voter helpline app என்ற மொபைல் செயலி மூலமாகவும் சுலபமாக வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

voter helpline app என்ற மொபைல் செயலி மூலமாகவும் சுலபமாக வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

போலி வாக்காளர்களைக் கண்டறிய இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துவங்கியது. மார்ச் 31, 2023க்குள் இப்பணிகளை முடிக்க அரசு திட்டமிட்டுள்ள நிலையில், www.nvsp.in, voters portal என்ற இணையதளத்தைப் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    இந்தியாவில் போலி வாக்காளர்களின் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ளது. பேரூராட்சி,ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து இடங்களிலும் 1 வார்டில் இருக்கும் வாக்காளரின் பெயர் 6, 7 என இரண்டிற்கும் மேற்பட்ட வார்டுகளில் இருக்கும். வாக்களிக்கச் செல்லும் போது தான் நாம் எதற்கு வாக்களிக்க வேண்டும்? என்ற குழப்பம் வாக்காளர்களுக்கு ஏற்படுகிறது. இதோடு அரசியல் கட்சியினரும் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு போலி வாக்குகளைப் போடுகின்றனர்.

    இது போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையும் இணைக்க இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து தொடங்கியது. இப்பணிகளை வருகின்ற மார்ச் 31, 2023க்குள் முடிக்கும் வகையில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுரைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதற்கென 6 பி என்ற படிவமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    Also Read :பறக்கும் காரா? வாகனங்கள் வளர்ச்சியில் புதிய புரட்சி..சோதனை ஓட்டத்தில் வெற்றி

    மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு மற்றும் உதவிகளை வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டல், voter helpline app என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துக் கொள்ளலாம் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதோ ஆன்லைனில் எப்படி மேற்கொள்வது என இங்கே தெரிந்துகொள்வோம்.

    தேசிய வாக்காளர் சேவை இணையதளத்தின் https://voterportal.eci.gov.in/, அல்லது https://www.nvsp.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைப் பார்வையிடவும். பின்னர் போர்ட்டலில் உள்நுழைந்ததும், “ Search In Electoral Roll” என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். வாக்காளர் ஐடியைத்தேட தனிப்பட விபரங்களை என்ட்ரி செய்யவும். அல்லது EPIC எண் மற்றும் மாநிலத்தைத் தெரிவிக்க வேண்டும்.

    இணையதளத்தின் இடது பக்கத்தில் ஆதார் எண் என்று உள்ள ஆப்சனைக் கிளிக் செய்யவும். ஆதார் எண்ணை உள்ளீடு செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சலுக்கு வரும் OTP யை என்டர் செய்து சமிட் செய்யவும்.

    Also Read :பஜாஜ் மற்றும் KTM இணைந்து உருவாக்கும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்!

    இந்தநிலைகள் முடிந்ததும் உங்களது வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுவிடும். இதே போன்று voter helpline app என்ற மொபைல் செயலி மூலமாகவும் சுலபமாக வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

    போலி வாக்காளர்களைக் கண்டறிய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் உள்ள ஒரு வாக்காளர்களின் பெயர்களை நீக்கவும் இந்த நடவடிக்கை மிகவும் உறுதுணையாக இருக்கும். இந்தியத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை நேற்று திரிபுரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலிருந்து தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் இப்பணிகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
    Published by:Janvi
    First published:

    Tags: Aadhar, Voters ID

    அடுத்த செய்தி