Home /News /technology /

மீண்டும் 50 சீன ஆப்களுக்கு தடை... ஸ்மார்ட்போன் கேம் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

மீண்டும் 50 சீன ஆப்களுக்கு தடை... ஸ்மார்ட்போன் கேம் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

மீண்டும் 50 சீன ஆப்களுக்கு தடை

மீண்டும் 50 சீன ஆப்களுக்கு தடை

இந்தியாவில் மீண்டும் சீனாவைச் சேர்ந்த 50 ஸ்மார்ட் போன் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2020ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே எல்லைப்பிரச்சனை பெரிதாக வெடித்தது. 2020ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனா, 15 வீரர்களை கொன்றது நாட்டில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது. இந்த சமயத்தில் இந்தியர்களின் தகவல்களை திருடுவதாகவும், அதனை வைத்து வியாபாரம் செய்வதாகவும் சீன செயலிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுங்கின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவும் 69ஏ-ன் கீழ் பல்வேறு சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

2020ம் ஆண்டின் இறுதியில் 59 சீன ஆப்கள் நிரந்தரமாக தடை செய்யப்படுவதாக இந்திய சைபர் கிரைம் ஒத்துழைப்பு மையம் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அதிரடியாக அறிவித்தது. அதன்படி டிக்-டாக், ஷேர் இட், யூசி ப்ரௌசர், ஹலோ, அலி எக்ஸ்பிரஸ், லைகி, மி கம்யூனிட்டி, வீ சேட் உள்ளிட்ட 59 சீன செயலிகள் நிரந்தரமாக முடக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பப்ஜி, வீசாட், பைடு, மொபைல் கேம் உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுவரை சீனாவைச் சேர்ந்த 270 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 50 ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்மார்ட் போன் யூஸர்கள் இடையே மிகவும் பிரபலமான ‘கரேனா ப்ரீ பையர்’ கேம் ஆப், கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து திடீரென காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின.

Also read... ஐபோன் & விண்டோஸ் யூஸர்களுக்காக இந்த டிசைன் மாற்றங்களை டெஸ்ட்டிங் செய்யும் WhatsApp!

ஒருவேளை மத்திய அரசு சீன செயலிகளை மீண்டும் தடை செய்ய திட்டமிட்டு வருவதால், இந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் கிளம்பியது. ஆனால் இதுவரை ஆப் நீக்கப்பட்டது தொடர்பாக அதன் நிறுவனமான கரேனா இன்டர்நேஷனல் அல்லது கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் கூட எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி மத்திய அரசு மேலும் 50 சீன செயலிகளை தடை செய்யலாம் எனக்கூறப்படுகிறது. விடுபட்ட சீன செயலிகள் மற்றும் தடை செய்யப்பட்ட செயலிகளுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட செயலிகளின் பட்டியலை தயாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் 50 சீன செயலிகள் தடை செய்யப்பட்டால் இதுவரை இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன ஆப்களின் எண்ணிக்கை 320 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: China Apps, Technology

அடுத்த செய்தி