இந்தியர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்த்த மால்வேர்... விளக்கம் கேட்கும் அரசு

இந்தியர்களின் வாட்ஸ் அப்பை உளவு பார்த்த மால்வேர்... விளக்கம் கேட்கும் அரசு
வாட்ஸ் அப்
  • Share this:
இந்தியர்களின் வாட்ஸ் அப் பயன்பாடு உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் பதிலளிக்குமாறு, வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இஸ்ரேலில் செயல்படும்  சைபர் கண்காணிப்பு நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்த பேஸ்புக் நிறுவனம், இந்தியாவில் பத்திரிகையாளர்கள், நாடுகளுக்கு இடையிலான தூதர்கள், சமூக ஆர்வலர்கள் என 1,400 பேரின் செல்போன்களுக்கு மால்வேர்களை அனுப்பி அதன் மூலம் அவர்களின் வாட்ஸ் அப் செயல்பாடுகளை வேவு பார்த்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

பஹ்ரைன், மெக்சிகோ, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களின் வாட்ஸ் அப்பில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், வேவு பார்க்கப்பட்டதாகவும் பேஸ்புக் கூறியுள்ளது.


இது தொடர்பாக வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள மத்திய அரசு, நவம்பர் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
Watch Also:
First published: October 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading