ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆபாச வெப்சைட்களுக்கான பட்டியலில் புதிதாக 67 வெப்சைட்கள் சேர்ப்பு.!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஆபாச வெப்சைட்களுக்கான பட்டியலில் புதிதாக 67 வெப்சைட்கள் சேர்ப்பு.!

வெப்சைட்

வெப்சைட்

Porn Websites Blocked | இந்தியாவில் நாளுக்கு நாள் ஆபாச படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் 67 ஆபாச இணையதளங்களுக்கான அணுகலை உடனடியாக முடக்க இன்டர்நெட் சர்விஸ் ப்ரொவைடர்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தியாவை பொறுத்த வரை உலக நாடுகளின் பார்வையில் ஒன்றாகவும், நிஜத்தில் வேறொன்றாகவும் பல விஷயங்களில் முரண்பட்டு காணப்படுகிறது. இதில் முக்கியமான ஒன்று செக்ஸ்.  ஆனால் உலகளவில் ஆபாச படங்களை பார்க்கும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் இந்தியா இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றின் போது இந்தியாவில் பார்ன் வீடியோக்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இந்தியாவில் நாளுக்கு நாள் ஆபாச படங்களை பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் வெளியாகி உள்ள நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் 67 ஆபாச இணையதளங்களுக்கான அணுகலை உடனடியாக முடக்க இன்டர்நெட் சர்விஸ் ப்ரொவைடர்களுக்கு மத்திய தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில் இணக்க அறிக்கையை (compliance report) சமர்ப்பிக்குமாறும் இன்டர்நெட் சர்விஸ் ப்ரொவைடர்களுக்கு (ISPs) உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் 2021-ல் வெளியிடப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறியதற்காக 67 ஆபாச இணையதளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக இன்டர்நெட் சர்விஸ் ப்ரொவைடர்களுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT) அனுப்பி உள்ள இ-மெயிலில், புனே நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 63 பிளாக் செய்யவும், உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் 4 வெப்சைட்களை பிளாக் செய்யவும் கேட்டு கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ஆபாச வெப்சைட்களை முடக்குவது தொடர்பான உத்தரவில் DoT கூறி இருப்பதாவது, "தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் விதி 3(2)(b) உடன் படிக்கப்பட்ட (உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின்) உத்தரவுக்கு இணங்கும் வகையிலும், மேலும் சில ஆபாச விஷயங்களைக் கருத்தில் கொண்டும் பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருக்கும் உள்ளடக்கங்களை கொண்ட வெப்சைட்கள்/URL-கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றை உடனடியாக அகற்ற (முடக்க) வேண்டும்" என அறிவுறுத்தியுள்ளது.

Also Read : போலி ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் திருட்டை தடுக்க அரசின் புதிய விதிமுறை!

சுவாரஸ்யமாக IT விதிகளின் விதி 3(2)(b) இன் கீழ் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கபடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த விதி பெரும்பாலும் பழிவாங்கும் ஆபாச போட்டோ மற்றும் வீடியோவை முடக்குவதற்கானது. ஆனால் சமீபத்திய இந்த சுற்றறிக்கையில் பழிவாங்கலுக்கு தொடர்பில்லாத வெப்சைட்களை தடை செய்ய உத்தரவிட பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதே போல கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து ஆபாச இணையதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளின் இரண்டாவது கட்டம் இதுவாகும்.

Also Read : வாட்ஸ்அப்பை குறிவைக்கும் ஹேக்கர்கள்.. உடனே அப்டேட் செய்யுமாறு யூசர்களுக்கு அறிவுரை.!

முன்னதாக உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சுமார் 827 ஆபாச இணையதளங்களுக்கான அணுகலை அதிகாரிகள் முடக்கினர். இதனிடையே ஆபாச வெப்சைட்களை முடக்க கூறியுள்ள உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தின் உத்தரவில், தடை உத்தரவிற்கு பின்னணியில் பெண்களின் உருவம் மற்றும் கண்ணியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஆபாச விஷயங்கள் இடம்பெற்றுள்ளது முக்கிய காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: India, Porn websites, Technology