ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை முடக்கிய மத்திய அரசு - காரணம் என்ன.?

10 யூடியூப் சேனல்களின் 45 வீடியோக்களை முடக்கிய மத்திய அரசு - காரணம் என்ன.?

யூடியூப்

யூடியூப்

YouTube Videos Banned | மத்திய அரசின் உத்தரவை அடுத்து குறிப்பிட்ட 45 யூடியூப் வீடியோக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆன்லைன் வீடியோ ஷேரிங் மற்றும் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்மான யூடியூப்பின் வெவ்வேறு 10 சேனல்களில் இருந்து சுமார் 45 வீடியோக்களை பிளாக் செய்ய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் உத்தரவை அடுத்து குறிப்பிட்ட 45 யூடியூப் வீடியோக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த யூடியூப் வீடியோக்கள் மத சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் மற்றும் மத நல்லிணக்கத்தை சிதைக்கும் எண்ணங்களை தூண்டும் வகையிலும், தேசிய பாதுகாப்பு குறிப்பாக அக்னிபாத் திட்டம் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை பரப்புவதாக மத்திய அரசால் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் உத்தரவின் பேரில் Block செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் ஒட்டுமொத்தமாக சுமார் 1 கோடியே 30 லட்சம் வியூஸ்களை பெற்றுள்ளன. பிளாக் செய்யப்பட்ட வீடியோக்களில் பிரபல யூடியூபர் துருவ் ரதியின் ஒரு வீடியோவும் அடக்கம். புலனாய்வு அமைப்புகளின் அறிக்கை அடிப்படையில் கடந்த செப்டம்பர் 23 அன்று 45 வீடியோக்களை பிளாக் செய்யும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் விதிகளின் கீழ், சம்பந்தப்பட்ட வீடியோக்களை YouTube-ல் இருந்து Block செய்வதற்கான உத்தரவுகள் 23.09.2022 அன்று வெளியிடப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

முடக்கப்பட்டுள்ள வீடியோக்களின் கன்டென்ட்டில் மத சமூகங்களிடையே வெறுப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட போலி செய்திகள் மற்றும் மார்ஃபிங் செய்யப்பட்ட வீடியோக்கள் உள்ளிட்டவை அடங்கும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக முடக்கப்பட்டுள்ள வீடியோக்களில், சில சமூகங்களின் மத உரிமைகளை மத்திய அரசு பறித்துள்ளது. மத சமூகங்களுக்கு எதிராக வன்முறை அச்சுறுத்தல்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் உள்நாட்டுப் போர் என்பது போன்ற தவறான கருத்துக்கள் அல்லது காட்சிகள் அடங்கி இருந்தன. இத்தகைய வீடியோக்கள் நாட்டில் பொது ஒழுங்கை சீர்குலைக்கும் திறன் கொண்டவை என கண்டறியப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

Also Read : YouTube shorts எடுப்பதில் கில்லாடிகளாக நீங்கள்?.. பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை இனி நீங்களும் பெற முடியுமாம்!

அதே போல சில வீடியோக்கள் இந்திய எல்லைக்கு வெளியே ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இருப்பதாக சித்தரித்து இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கேடு விளைவிக்கும் வகையில் இருந்தன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், அக்னிபாத் திட்டம், இந்திய ஆயுத படைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு, காஷ்மீர் விவகாரம் போன்றவற்றுடன் தொடர்புடைய பிரச்சனைகள் குறித்து தவறான தகவல்களை பரப்ப குறிப்பிட்ட 45 வீடியோக்களும் பயன்படுத்தப்பட்டன.

Also Read : YouTube வீடியோக்களை Dislike கொடுக்கும் முன்பாக இதை தெரிஞ்சுக்கோங்க!

மேலும் தவறான தகவல்களின் மூலம் நட்பு நாடுகளுடனான உறவு உள்நாட்டில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கை சீர்குலைக்க செய்யப்படும். எந்த ஒரு முயற்சியையும் முறியடிப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தேசத்தின் நலனுக்காக ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Central government, Technology, Videos, Youtube