Home /News /technology /

4 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் உட்பட 22 சேனல்களை அதிரடியாக முடக்கிய மத்திய அரசு.. காரணம் என்ன.?

4 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் உட்பட 22 சேனல்களை அதிரடியாக முடக்கிய மத்திய அரசு.. காரணம் என்ன.?

YouTube

YouTube

YouTube Channels Banned | முடக்கப்பட்ட இந்த யூடியூப் சேனல்கள் டிவி நியூஸ் சேனல்களின் லோகோக்கள் மற்றும் தவறான தம்ப்நெயில்ஸ்களை பயன்படுத்தி வியூவர்ஸ்களை தவறாக வழிநடத்துவதாக அரசின் அறிக்கை கூறுகிறது. 22 யூடியூப் சேனல்களுடன் 3 ட்விட்டர் அக்கவுண்ட்கள், ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் மற்றும் ஒரு நியூஸ் வெப்சைட்டையும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது.

மேலும் படிக்கவும் ...
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அதிரடி நடவடிக்கையாக 22 யூடியூப் சேனல்களை முடக்கியுள்ளது. நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான தவறான தகவல்களை பரப்பியதோடு மட்டுமின்றி, வெளிநாட்டு உறவுகள் மற்றும் பொது ஒழுங்கு தொடர்பான தவறான தகவல்களை இந்த சேனல்கள் பரப்பியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது முடக்கப்பட்ட 22 யூடியூப் சேனல்களில் 18 இந்திய யூடியூப் நியூஸ் சேனல்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 4 யூடியூப் நியூஸ் சேனல்கள் அடக்கம். 2021-ஆம் ஆண்டின் புதிய ஐடி விதிகளின் கீழ் இந்திய யூடியூப் சேனல்கள் முடக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அறிக்கை ஒன்றில் அரசு தெரிவித்துள்ளது. 22 யூடியூப் சேனல்கள் ஏன் பிளாக் செய்யப்பட்டன என்பதற்காக அந்த சேனல்கள் ஒளிபரப்பிய கன்டென்ட்டின் ஸ்கிரீன் ஷாட்களும் ஷேர் செய்யப்பட்டு உள்ளன.

முடக்கப்பட்ட இந்த யூடியூப் சேனல்கள் டிவி நியூஸ் சேனல்களின் லோகோக்கள் மற்றும் தவறான தம்ப்நெயில்ஸ்களை பயன்படுத்தி வியூவர்ஸ்களை தவறாக வழிநடத்துவதாக அரசின் அறிக்கை கூறுகிறது. 22 யூடியூப் சேனல்களுடன் 3 ட்விட்டர் அக்கவுண்ட்கள், ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் மற்றும் ஒரு நியூஸ் வெப்சைட்டையும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் முடக்கியுள்ளது. இந்திய ஆயுதப் படைகள், ஜம்மு மற்றும் காஷ்மீர் போன்ற பல விவகாரங்களில் போலி செய்திகளை மக்களிடையே பரப்ப முடக்கப்பட்டுள்ள பல யூடியூப் சேனல்கள் பயன்படுத்தப்பட்டன.



அதே போல பாகிஸ்தானில் இருந்து ஒருங்கிணைந்த முறையில் இயக்கப்படும் பல சமூக ஊடக கணக்குகளில் இருந்து வெளியிடப்பட்ட சில இந்தியாவுக்கு எதிரான கன்டென்ட்களையும் அவை உள்ளடக்கியது என்று அரசு கூறி உள்ளது. Block செய்யப்பட்டுள்ள இந்திய யூடியூப் சேனல்களால் வெளியிடப்பட்ட கணிசமான அளவு தவறான கன்டென்ட்கள் உக்ரைனில் நிலவும் சூழ்நிலையுடன் தொடர்புடையது மற்றும் பிற நாடுகளுடனான இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளை பாதிக்கும் நோக்கத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : Youtube Vanced சேவை கிடைக்கவில்லை என வருத்தமா? - ஆட் ஃப்ரீ வீடியோக்களுக்கு இதை முயற்சி செய்யலாம்!

முடக்கப்பட்ட சில இந்திய யூடியூப் சேனல்கள் பிரபல டிவி நியூஸ் சேனல்களின் லோகோக்களை மட்டுமின்றி டெம்ப்ளேட்கள் மற்றும் அவற்றின் செய்தி அறிவிப்பாளர்களின் படங்கள் உட்பட பலவற்றை பயன்படுத்தி, அப்லோட் செய்துள்ள செய்தி உண்மையானது என்றும் வியூவர்ஸை தவறாக வழி நடத்தின என்றும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Also Read : Google Chrome-ல் பாதுகாப்பு சிக்கல்.! ஹேக் செய்ய வாய்ப்புள்ளது..

தடைசெய்யப்பட்ட யூடியூப் சேனல்களின் முழு பட்டியல்:

ARP News, AOP News, LDC News, SarkariBabu, SS ZONE Hindi, Smart News, News23Hindi, Online Khabar, DP news, PKB News, KisanTak, Borana News, Sarkari News Update, Bharat Mausam, RJ ZONE 6, Exam Report, Digi Gurukul, दिनभरकीखबरें

பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப் சேனல்கள்:

DuniyaMeryAagy, Ghulam NabiMadni , HAQEEQAT TV, HAQEEQAT TV 2.0
Published by:Selvi M
First published:

Tags: Central government, India, Youtube

அடுத்த செய்தி