ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வைத்த செக்... இன்னும் 3 மாசம் தான் கெடு.!

சோசியல் மீடியாக்களுக்கு மத்திய அரசு வைத்த செக்... இன்னும் 3 மாசம் தான் கெடு.!

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

Online Safety | இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் பதிவிடப்படும் விரும்பதகாத கருத்துக்கள் மீது யூஸர்கள் அளிக்கும் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeITY) தனது தகவல் தொழில்நுட்ப (IT) விதிகள், 2021-யை மாற்றியமைத்துள்ளது. இதன் மூலமாக இனி சோசியல் மீடியாக்களில் பதிவிடப்படும் கன்டென்ட் மீது யூஸர்கள் அளிக்கும் புகார்களை ஆராய்ந்து தீர்வு காண்பதற்காக "குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை" மத்திய அரசு அமைக்க உள்ளது.

இந்தியாவில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சோசியல் மீடியாக்களில் பதிவிடப்படும் விரும்பதகாத கருத்துக்கள் மீது யூஸர்கள் அளிக்கும் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது மத்திய அரசே நேரடியாக கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக சோசியல் மீடியாக்களுக்கான தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் திருத்தங்களை செய்துள்ளதாக அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சமூக ஊடகங்கள் மீது அதிகரித்து வரும் பயனர்களின் புகார்களை ஆய்வு செய்து தீர்வு காண்பதற்காக 3 நபர்களைக் கொண்ட “குறைகள் மேல்முறையீட்டுக் குழுவை” மத்திய அரசு 3 மாதத்தில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், திறந்த, பாதுகாப்பான, மற்றும் நம்பகமான, பொறுப்பான இணையத்தின் #DigitalNagriks-க்கான நமது அரசாங்கத்தின் கடமையை உணர்ந்து கொள்வதற்கான அடுத்த படியாகும். இது அனைத்து இந்தியர்களும் இணையத்தை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்ற வேண்டும் என்ற அடிப்படை நோக்கத்துடன், அரசு மற்றும் சோசியல் மீடியா தளங்கள் இடையே கூட்டாண்மையை உருவாக்க உள்ளது” என பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு குழுவும் மத்திய அரசால் நியமிக்கப்படும் ஒரு தலைவர் மற்றும் இரண்டு முழுநேர உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். மூவரில் முன்னாள் அரசு அதிகாரியாகவும், இருவர் தன்னிச்சையானவர்களாகவும் இருப்பார்கள். புதிய விதிகளின்படி, நிறுவனங்கள் யூஸர்களிடம் இருந்து வரும் புகார்களை 24 மணி நேரத்திற்குள் ஒப்புக் கொள்ள வேண்டும் மற்றும் குறிப்பிட்ட தகவலை அகற்றுவது தொடர்பான கோரிக்கையின் போது 15 நாட்கள் அல்லது 72 மணி நேரத்திற்குள் அவற்றை தீர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read : கொட்டிக்கிடக்கும் ஆபாசப் படங்கள்.. புது சிக்கலில் மாட்டும் ட்விட்டர்!

புதிய விதிமுறைகளின் படி, ஆபாசப் படங்கள், வர்த்தக முத்திரை மீறல்கள், போலித் தகவல்கள் மற்றும் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விஷயங்கள், வன்முறையை தூண்டும் விதத்தில் மதம் சம்பந்தப்பட்ட கருத்துக்கள் ஆகியவற்றை யூஸர்கள் அளிக்கும் புகார்கள் மீது குறைகள் மேல்முறையீட்டுக் குழு நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

சோசியல் மீடியாவில் ஜாம்பவான்களாக வலம் வரும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்கள் தங்களுக்கான சுய கட்டுப்பாட்டு நெறிமுறைகளைக் கொண்டிருந்தாலும், சோசியல் மீடியாக்களில் பதிவிடப்படும் ஆட்சேபணைக்குரிய கருத்துக்கள் குறித்து யூஸர்கள் அளிக்கும் புகார் மீது தன்னால் அமைக்கப்பட்ட குறைகள் மேல்முறையீட்டுக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.

Also Read : முதல் ட்விட் செய்தவர் இவர்தான்- ட்விட்டர் பற்றிய 10 சுவாரஸ்ய தகவல்கள்!

சோசியல் மீடியாக்கள் மீது யூஸர்கள் அளிக்கும் புகார்களை தீர்வு காண்பதற்கான அதிகாரியை நியமிப்பது தொடர்பான தகவல் தொழில்நுட்ப (IT) விதியில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தம் செய்யப்பட்டது. தற்போது தகவல் தொழில்நுட்ப (IT) விதிகள், 2021-யில் திருத்தம் செய்யப்பட்டு குறைகள் மேல்முறையீட்டு குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by:Selvi M
First published:

Tags: Central government, Social media, Tamil News, Technology