ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இந்தியாவில் போலி ஸ்மார்ட்போன்களை தடைசெய்ய புதிய விதி- விபரங்கள் இதோ!

இந்தியாவில் போலி ஸ்மார்ட்போன்களை தடைசெய்ய புதிய விதி- விபரங்கள் இதோ!

போலி போன்கள் தடுப்பு

போலி போன்கள் தடுப்பு

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கக்கூடிய முறையான IMEI எண்ணைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதே புதிய விதியின் நோக்கமாகும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

இந்தியாவில் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஸ்மார்ட்போன்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, ஜனவரி 1, 2023 முதல் அனைத்து மொபைல் போன் உற்பத்தியாளர்களும், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு கைபேசியின் IMEI எண்ணையும் விற்பனைக்கு முன், இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

போலி IMEI எண்கள்:

இந்தியாவில் போலியான IMEI எண்கள் அல்லது டூப்ளிகேட்IMEI எண்களுடன் வரும் லட்சக்கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்கள் இருப்பதாக கடந்த கால அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. சீனாவிலிருந்து வரும் பிரபலமான கைபேசிகளின் நகல்களை வாங்குவது மிக எளிது. ஜூன் 2020 இல், Vivo இன் 13,500 ஸ்மார்ட்போன்கள் ஒரே IMEI எண்ணைக் கொண்டிருப்பதை மீரட் காவல்துறை கண்டறிந்தது.இதே போன்ற சம்பவங்கள் மற்ற சீன பிராண்டுகளுக்கும் இதற்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல, மேட்-இன்-இந்தியா போன்களுக்கும், டாப்-எண்ட் ஐபோன்கள், சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கும் இது போன்ற போலிகள் உருவாக்கப்பட்டு சந்தையில் விற்பனைக்கு வருகிறது. இப்படி கருப்பு சந்தையில் விற்கப்படும் போன்கள் மற்றும் அதனால் உருவாகும் குற்றங்களைத் தடுக்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் வீடியோ காலில் புதிய வசதி..! இனி இங்கேயும் மீட்டிங் நடத்தலாம்

புதிய விதி…

இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மொபைல் போன்களும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கக்கூடிய முறையான IMEI எண்ணைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதே புதிய விதியின் நோக்கமாகும். புதிய செயல்முறைபடி பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது ஃபீச்சர் போன்கள் தொலைந்து போனால் அல்லது திருடப்பட்டால் அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் தடுக்க உதவும். இது இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் கறுப்பு சந்தைப்படுத்துதலை தடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

“விற்பனை, சோதனை, ஆராய்ச்சி அல்லது வேறு எந்த நோக்கத்திற்காகவும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் மொபைல் போனும் இறக்குமதி செய்வதற்கு முன் அதன் சர்வதேச மொபைல் சாதன அடையாள எண் IMEI இறக்குமதியாளரால் இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் ‘இந்திய போலி சாதனக் கட்டுப்பாட்டு போர்ட்டலில்’ (https://icdr.ceir.gov.in) பதிவு செய்யப்பட வேண்டும்.

IMEI எண் தனித்துவமானது மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கப் பயன்படுகிறது. சிம் கார்டை மாற்றவோ அல்லது அழிக்கவோ முடியும் என்றாலும், IMEI எண்ணை மறைக்க முடியாது. சட்ட அமலாக்க முகவர் குற்றங்களை கண்டறியும் முறையை எளிதாக்குகிறது.

சோஷியல் மீடியாவில் நீங்கள் டெலிட் செய்வது உண்மையில் அழிவதில்லை தெரியுமா?

போலி சாதன கட்டுப்பாடு (ICDR) அமைப்பு என்றால் என்ன?

போலி சாதன கட்டுப்பாடு என்பது ஜனவரி 1, 2020 முதல் செயல்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டில், பல்வேறு சுங்கத் துறைமுகங்கள் மூலம் மொபைல் சாதனங்களை இறக்குமதி செய்வதற்கான ‘IMEI சான்றிதழ்களை வழங்குவதற்காக’ இந்திய போலி சாதனக் கட்டுப்பாடு (ICDR) முறையை அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தியது. தற்போது அதோடு சேர்த்து விற்பனைக்கு முன்னர் போர்ட்டலில் IMEI எண்களை பதிவு செய்யும் முறையும் சேர்ந்துள்ளது. இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.

“இந்தியாவின் மொபைல் ஸ்டாண்டர்ட் அலையன்ஸ் (MSAI) ஆல் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் பழைய IMEI- குளோனிங் மற்றும் டூப்ளிகேஷன் கட்டுப்பாடு முறைக்குப் பதிலாக புதிய அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இணைய போர்டல் மூலம் பதிவு மற்றும் IMEI சான்றிதழ் உருவாக்கும் செயல்முறைக்கு, எந்தவொரு முகவரையும் அல்லது மூன்றாம் தரப்பினரையும் அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.

கவனம்:

நீங்கள் எங்கிருந்து மொபைல் போன் அல்லது புதிய ஹெட்செட் வாங்கினாலும், சாதனத்தில் IMEI எண் உள்ளதா இல்லையா என்பதை எப்போதும் சரிபார்க்கவும். IMEI எண் இல்லாத எந்த சாதனமும் போலியானது. IMEI எண்ணைச் சரிபார்க்க, விவரங்களைப் பெற *#06# ஐ டயல் செய்யுங்கள். இரட்டை சிம் ஸ்மார்ட்போன்களுக்கு, இரண்டு தனித்துவமான IMEI எண்கள் இருக்கும்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Mobile phone, Theft