ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

போலி ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் திருட்டை தடுக்க அரசின் புதிய விதிமுறை!

போலி ஃபோன்கள் மற்றும் ஸ்மார்ட்ஃபோன் திருட்டை தடுக்க அரசின் புதிய விதிமுறை!

IMEI நம்பர் என்பது ஒவ்வொரு மொபைலுக்குமே தனித்துவமாக இருக்கும் எண். கிரிமினல்களை டிராக் செய்வதற்கு இது பெரிய அளவில் பயன்படும்.

IMEI நம்பர் என்பது ஒவ்வொரு மொபைலுக்குமே தனித்துவமாக இருக்கும் எண். கிரிமினல்களை டிராக் செய்வதற்கு இது பெரிய அளவில் பயன்படும்.

இந்நிலையில், பெருகி வரும் போலி ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் திருட்டு ஆகியவற்றை முற்றிலுமாக தடுப்பதற்கு அரசாங்கம் புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  எந்த அளவுக்கு புதிது புதிதாக தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் பல பலவிதமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் வந்தாலுமே ஸ்மார்ட் போன் திருட்டு மற்றும் சந்தையில் போலி ஸ்மார்ட் ஃபோன்களின் அணிவகுப்பும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

  ஸ்மார்ட்ஃபோன்கள் திருடப்பட்டாலும் ஒரு சில செக்யூரிட்டி அம்சங்கள் இருப்பதால் போனை பயன்படுத்த முடியாத அளவுக்கு பல மொபைல் நிறுவனங்களும் ஸ்மார்ட்ஃபோன்களை பாதுகாப்பாக உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு தனிப்பட்ட IMEI நம்பர் இருக்கும். அந்த எண்ணை வைத்து போலி போன்களை தயாரிக்கலாம் என்பதெல்லாம் அனைவரும் அறிந்ததுதான்.

  இந்நிலையில், பெருகி வரும் போலி ஸ்மார்ட்ஃபோன்களின் எண்ணிக்கை மற்றும் ஸ்மார்ட்ஃபோன்கள் திருட்டு ஆகியவற்றை முற்றிலுமாக தடுப்பதற்கு அரசாங்கம் புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் 2023 ஆம் ஆண்டு, ஜனவரி 1 இல் இருந்து, மொபைல் உற்பத்தியாளர்கள் அனைவருமே தாங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து சாதனங்களின் IMEI எண்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் உற்பத்தி செய்யும் ஒவ்வொரு உற்பத்தியாளருமே, தாங்கள் உற்பத்தி செய்த சாதனங்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு IMEI எங்களை இந்திய போலி சாதனக் கட்டுப்பாட்டு தளத்திடம் பதிவு செய்ய வேண்டும்.

  அதாவது ஒரு மொபைல் நிறுவனம் 1000 ஸ்மார்ட்ஃபோன்களை உற்பத்தி செய்தால், அந்த 1000 போன்களுக்குமே வெவ்வேறு IMEI இருக்கும். விற்பனை செய்வதற்கு முன்பே, அந்த 1000 போன்களின் IMEI எண்களையும் https://icdr.ceir.gov.in தளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

  தொடர்ந்து பல காலமாக ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் ஃபீச்சர் ஃபோன்கள் என்று இரண்டு வகைகளிலேயும் போலியான IMEI எண்கள் அல்லது ஒரே IMEI கொண்ட இரண்டுக்கு மேற்பட்ட மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன என்று பலவிதமான புகார்கள் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொபைல்களைப் போலவே போலி மொபைல்கள் அல்லது டூப்ளிகேட் மொபைல்களை உற்பத்தி செய்வது ஒன்றும் கடினமல்ல.

  இவை பெரும்பாலும் சீனாவில் இருந்து வருகின்றன. இதைத் தடுப்பதற்காக இந்திய அரசாங்கம் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதன்மூலம் போலியாக உருவாக்கப்படும் மொபைல்களை எளிதாக ட்ராக் செய்து அதனை தடுக்க முடியும்.

  மேலும், இந்த அம்சத்தின் மூலம் உங்களுடைய ஸ்மார்ட்ஃபோன் அல்லது பீச்சர் ஃபோன் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை நீங்கள் உடனடியாக பிளாக் செய்து கொள்ளலாம். திருடப்பட்ட அல்லது தொலைந்த போனை வேறு யாராலும் பயன்படுத்த முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோனுக்கான கள்ளச்சந்தை குறையும்.

  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கிட்டத்தட்ட 13,500 ஸ்மார்ட்போன்களை போலீசார் கண்டறிந்தனர். இவை அனைத்துமே போலி IMEI கொண்டிருந்தது என்று போலீசார் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல பல சம்பவங்கள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  இதுவரை IMEI பற்றி அறியாதவர்களுக்கு:

  IMEI நம்பர் என்பது ஒவ்வொரு மொபைலுக்குமே தனித்துவமாக இருக்கும் எண். கிரிமினல்களை டிராக் செய்வதற்கு இது பெரிய அளவில் பயன்படும்.

  Read More: வாட்ஸ்அப் வீடியோ காலில் புதிய வசதி..! இனி இங்கேயும் மீட்டிங் நடத்தலாம்

  நீங்கள் பயன்படுத்தும் சிம் கார்டை மாற்றினாலும் அல்லது சிம் கார்டை நீங்கள் செயல் இழக்கச் செய்தாலும், IMEI நம்பரை அவ்வாறு செய்ய முடியாது. இது கடினமான கோடிங்குடன் பாதுகாப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவர்களை எளிதாக டிராக் செய்ய முடியும் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போன்களுக்கு இரண்டு விதமான IMEI எண்கள் இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.

  நீங்கள் புதிதாக ஒரு ஸ்மார்ட்ஃபோன் சாதனத்திற்கு IMEI இருக்கிறதா இல்லையா என்பதை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

  *#06#என்ற எண்ணை டயல் செய்தால் உங்கள் மொபைலின் IMEI எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Mobile phone, Smartphone