முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..? ஒரே மொபைலில் 2 வாட்ஸ்அப் கணக்குகள் பயன்படுத்துவது எப்படி?

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா..? ஒரே மொபைலில் 2 வாட்ஸ்அப் கணக்குகள் பயன்படுத்துவது எப்படி?

ஒரு மொபைல் இரண்டு வாட்ஸ்அப்

ஒரு மொபைல் இரண்டு வாட்ஸ்அப்

எல்லா ஸ்மார்ட்போன்களுமே இரண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்தக்கூடிய அம்சங்களுடன் அல்லது தேர்வுகளுடன் வராது. அதாவது ஒரு சில பிராண்டுகளில் ஆஃப் க்ளோனிங் உள்கட்டமைப்புப்பட்ட அம்சமாக வராது.

 • News18 Tamil
 • 2-MIN READ
 • Last Updated :
 • Tamil Nadu, India

பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் டூயல் சிம், அதாவது இரண்டு சிம் கார்டுகளை ஒரே மொபைலில் பயன்படுத்தும் அம்சத்துடன் வருகிறது. ஆனால், வாட்ஸ்அப் என்று வரும் போது, ஒரு கணக்குக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும். சாம்சங், vivo, ரியல்மி, மோடோரோலா, கூகுள் என்று பெரும்பாலான பிராண்டுகளில் இரண்டு சிம்களுக்கு ஒரு மொபைல் போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பதிவு செய்து பயன்படுத்த முடியுமா என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

சீன மொபைல் போன் உற்பத்தியாளர்களான சியோமி, ரியல்மி, ஒன்பிளஸ், ஓப்போ உள்ளிட்ட ஃபோன்களில் ஆஃப் குளோனர் என்று கூறப்படும் உள்கட்டமைக்கப்பட்ட ஒரு சில அப்ளிகேஷன்கள் வருகின்றன. இந்த அப்ளிகேஷன்களை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு எண்களில் இருந்து இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும். சாம்சங் மொபைலைப் பொறுத்தவரை டூயல் மெசேஜிங் என்ற அம்சத்தை பயன்படுத்தி ஒரே சாம்சங் மொபைலில் இரண்டு வெவ்வேறு எண்களுக்கு இரண்டு தனி தனி வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியும். ஒரு வேளை உங்களுடைய ஆண்ட்ராய்டு போனில் குளோனிங் சப்போர்ட் இல்லை என்றால் மூன்றாம் தரப்பு செயலிகளை வைத்து நீங்கள் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்தலாம்.

சாம்சங் போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை அமைப்பது எப்படி

 • மொபைல் போனில் Settings என்பதற்கு சென்று, > Advanced features > Dual Messenger ஐத் தேர்வு செய்யுங்கள்
 • அதில், Dual Messenger என்பதை ஆக்டிவேட் செய்யுங்கள்
 • வாட்ஸ்அப்பை தனியாக இன்னொரு கணக்குக்கு பயன்படுத்த சுவிட்சை toggle செய்யுங்கள்
 • இன்ஸ்டால் செய்து, உறுதிப் படுத்தவும்
 • Read More : போன் திருட்டு போனா இதை மட்டும் செய்யுங்க.. தந்திரமாக ஐடி, பாஸ்வோர்ட் வாங்கும் நவீன திருடர்கள்!

  சியோமி போனில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை அமைப்பது எப்படி?

  • ஸ்மார்ட்போனில் Settings என்பதற்கு சென்று, > Apps > Dual Apps ஐத் தேர்வு செய்யுங்கள்.
  • அதில், Create என்பதை tap செய்யுங்கள்
  • அடுத்துத் தோன்றும் பட்டியலில் வாட்ஸ்அப்பை என்பதைத் தேர்வு செய்யுங்கள்.
  • Oppo, ஒன்பிளஸ், மற்றும் ரியல்மி ஃபோன்களில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை அமைப்பது எப்படி

   • ஸ்மார்ட்போனில் Settings என்பதற்கு சென்று, > Apps > Apps cloner ஐத் தேர்வு செய்யுங்கள்
   • அடுத்துத் தோன்றும் பட்டியலில் வாட்ஸ்அப்பை என்பதைத் தேர்வு செய்யுங்கள்
   • App clone என்ற தேர்வில் toggle செய்து உருவாக்குங்கள்
   • இரண்டாவது வாட்ஸ்அப் கணக்கு தொடங்க வாட்ஸ்அப் செயலி தயார்
   • Vivo மற்றும் iQOO ஃபோன்களில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை அமைப்பது எப்படி

    • ஸ்மார்ட்போனில் Settings என்பதற்கு சென்று, > Apps > Apps cloner ஐத் தேர்வு செய்யுங்கள்
    • வாட்ஸ்அப்பை தனியாக இன்னொரு கணக்குக்கு பயன்படுத்த சுவிட்சை toggle செய்யுங்கள்
    • இரண்டாவது வாட்ஸ்அப் கணக்கு தொடங்க வாட்ஸ்அப் செயலி தயார்
    • நத்திங், மோடோரோலா உள்ளிட்ட ஃபோன்களில் இரண்டாவது வாட்ஸ்அப்பை பயன்படுத்துவது எப்படி

     எல்லா ஸ்மார்ட்போன்களுமே இரண்டு வாட்ஸ்ஆப் பயன்படுத்தக்கூடிய அம்சங்களுடன் அல்லது தேர்வுகளுடன் வராது. அதாவது ஒரு சில பிராண்டுகளில் ஆஃப் க்ளோனிங் உள்கட்டமைப்புப்பட்ட அம்சமாக வராது. ஆனால் இதை நீங்கள் மூன்றாம் தரப்பு செயலிகளில் இருந்து தரவிறக்கம் செய்து, இரண்டு வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் 2accounts – dual apps space மற்றும் clone apps – parallel space உள்ளிட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்து இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை பதிவு செய்து பயன்படுத்தலாம்.

First published:

Tags: Technology, WhatsApp