ஆண்ட்ராய்டு மற்றும் கூகுள் குரோம் பயனர்களுக்கு தங்கள் கணக்குகளுக்கு தனிப்பட்ட கடவுச்சொற்கள் (Password) இல்லாமல் வெவ்வேறு சேவைகளில் உள்நுழைவதற்கான புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.
பாஸ் கீ என்றால் என்ன?
'பாஸ்கி'(passkey) எனப்படும் புதிய அம்சம் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கும் மற்றும் பாரம்பரிய இரு வழி அங்கீகார முறைக்கு எளிதான மாற்றாக மாறும் என்று கூகுள் கூறியுள்ளது.
பாஸ் கீ என்பது உலகளாவிய வலை கூட்டமைப்பு (W3C) மற்றும் FIDO அலையன்ஸ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. இது பயனர்களுக்கான கடவுச்சொல் இல்லாத உள்நுழைவு விருப்பமாகும். இதன்மூலம் எந்த ஒரு இணையதளம் அல்லது பயன்பாட்டை அணுகவும் கடவுச்சொல்லிற்குப் பதிலாக, பயனர்கள் PINகள் அல்லது பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை நிரூபிக்கும் விருப்பத்தைப் பெறுவார்கள்.
5Gbps, 8Gbps அதிவேக இணையசேவை வழங்கும் கூகுள் ஃபைபர்! அமெரிக்காவில் முதற்கட்ட சோதனை!
கூகுளின் கூற்றுப்படி , கடவுச் சாவியை உருவாக்கும்போது, தொடர்புடைய பொது விசை மட்டுமே ஆன்லைன் சேவையால் சேமிக்கப்படும். அதே நேரத்தில் கிரிப்டோகிராஃபிக் பிரைவேட் கீ பயனரின் சாதனங்களில் மட்டுமே இருக்கும். தனிப்பட்ட விசையிலிருந்து ஒரு கையொப்பமானது, பொது விசையைப் பயன்படுத்தி உள்நுழைவில் சேவையால் சரிபார்க்கப்படுகிறது. இது பயனரின் சாதனங்களில் ஒன்றிலிருந்து மட்டுமே உருவாக்கப்படும்.
கடவுச் சாவியை எவ்வாறு அமைப்பது?
இந்த அம்சம் தற்போது டெவலப்பர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் கூகுளின் வழக்கமான பயனர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளது. இது அறிமுகப்படுத்தப்பட்டால், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் கடவுச் சாவியை சிரமமின்றி நிறுவ முடியும்.
அவ்வாறு செய்ய, அவர்கள் ஒரு Google கணக்கோடு அவர்களின் பதிவு செய்யப்பட்ட கைரேகை அல்லது முகத்தை பயன்படுத்தி பாஸ் கீ சேவையை உருவாக்கிக்கொள்ளலாம். பாஸ் கீ, கிளவுட் அடிப்படையிலான Google கடவுச்சொல் நிர்வாகிக்கு காப்புப் பிரதி எடுக்கப்படும். இதன் மூலம், பயனர் சாதனத்தை மாற்றும்போது, குறியாக்க விசைகள் பாதுகாப்பாக புதிய சாதனத்திற்கு மாற்றப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Google, Google Chrome