இதுவரை எழுத்துக்களை வாசிக்கும் டூல், பேசுவதை எழுத்துக்களாக மாற்றும் கூகுள் டூல்களை பார்த்திருப்போம். ஆனால் கூகுளின் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு (AI) டூல் எழுத்துக்களை வைத்து இசையை உருவாக்குமாம். மியூசிக் எல்எம் எனப்படும் தொழில்நுட்ப டூல் டெக்ஸ்ட்-டு மியூசிக் ஜெனரேஷன் சிஸ்டமாக செயல்பட்டு வருகிறது.
மியூசிக்எல்எம் (MusicLM) டூல் அதில் பதிவேற்றும் உரையை பகுப்பாய்வு செய்து, வார்த்தை கலவையின் அளவு மற்றும் சிக்கலான தன்மையைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ற மெட்டை அமைக்கிறது. எழுத்துக்களை மட்டுமல்லாது விசில் மற்றும் ஹம்மிங் ஒலிகளையும் வாத்திய இசையாக மாற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வானத்தில் காணப்பட்ட மர்ம சுழல்.. ஏலியன்களின் விண்கலமா? - உண்மை என்ன?
ஒரு விசில் ஒலி, அல்லது ஹம்மிங்கை பதிவேற்றி இந்த ஒலிக்குறிப்பு வேறொரு ட்யூனில் வேண்டும் என்று கேட்டால் அதையும் இந்த செயற்கை நுண்ணறிவு டூல் செய்யும். மியூசிக்எல்எம் டூலை சுமார் 280,000 மணிநேர இசையின் தரவுத்தொகுப்பினை கொண்டு தயாரித்துள்ளனர். அதன்மூலம், உரை விளக்கங்களிலிருந்து அதற்கு ஒத்த பாடல்களை உருவாக்கவும் மனநிலை, மெல்லிசை மற்றும் கருவிகள் போன்ற நுணுக்கங்களைப் பிடிக்கவும் டூல் கற்றுக்கொண்டது.
இது போன்ற தொழில்நுட்பத்தை செய்யும் முதல் டூல் மியூசிக்எல்எம் அல்ல. இதற்கு முன்னதாக OpenAI இன் Jukebox, Riffusion, இவ்வளவு ஏன் Google இன் சொந்த AudioLM டூலே பல முயற்சிகளை முன்வைத்துள்ளனர். ஆனால், இதன் மூலம் குறைவான நொடிகளுக்குத் தான் இசையை உருவாக்க முடிந்தது. தொழில்நுட்ப வரம்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட பயிற்சி தரவு காரணமாக, முழு நீள பாடல்களை யாராலும் உருவாக்க முடியவில்லை. ஆனால் மியூசிக்எல்எம் இதை நிறைவேற்றும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த டூல் 24 kHz அளவில் இசையை உருவாக்குகிறது. அது மட்டும் அல்லாமல் இது பல நிமிடங்களுக்கு இதே தரத்தில் சீராக இருக்கிறது என்று கூகுள் ஆராய்ச்சி தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது பரிசோதனையின்போது, டூல் உருவாக்கிய இசையில் சுமார் 1 சதவிகிதம் அது பயிற்சியளிக்கப்பட்ட பாடல்களில் இருந்து நேரடியாகப் பிரதிபலித்தது. இதனால் காப்பி ரைட்ஸ் பிரச்சனைகள் எழலாம். அதை சரி செய்ய நிறுவனம் முயற்சித்து வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Artificial Intelligence, Google, Toolkit