ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

இனி நெட் இல்லாமலே தொலைந்து போன போனை ஈசியா கண்டுப்பிடிக்கலாம்..! ஈசியான வழி இதோ

இனி நெட் இல்லாமலே தொலைந்து போன போனை ஈசியா கண்டுப்பிடிக்கலாம்..! ஈசியான வழி இதோ

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

புதிய வசதிக்கான அறிவிப்பை டிசம்பர் 22 சேன்ஜ் லாகில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தற்போது பைண்ட் மை டிவைஸ் மூலம் மொபைலில் எண்கிரிப்டட் இருந்த லொகேஷனை நம்மால் ட்ராக் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கூகுளில் ஃபைண்ட் மை டிவைஸ் (find my device) வசதி பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். கூகுளின் ஆண்ட்ராய்டு அல்லது வியர் இயங்குதளங்களில் யூசருடைய மொபைல் ஆன்லைனில் இருக்கும் போது, மொபைலின் லொகேஷனை டிராக் செய்வதற்கு இந்த இந்த வசதி உதவுகிறது. ஆனால் விரைவிலேயே மொபைல் ஆன்லைனில் இல்லாத போதும் கூட, இந்த ஃபைண்ட் மை டிவைஸ் வசதியை பயன்படுத்தி மொபைலை டிராக் செய்ய முடியும் என கூகுள் அறிவித்துள்ளது.

இந்த புதிய வசதிக்கான அறிவிப்பை டிசம்பர் 22 சேன்ஜ் லாகில் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் தற்போது பைண்ட் மை டிவைஸ் மூலம் மொபைலில் எண்கிரிப்டட் இருந்த லொகேஷனை நம்மால் ட்ராக் செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இனி உங்கள் மொபைல் ஆன்லைனில் இல்லாமல் இருந்தாலும் கூட, மொபைல் கடைசியாக ஆக்டிவாக இருந்த லொகேஷனை ஆஃப்லைனிலேயே நம்மால் பார்க்க முடியும் என்பதாகும்.

தற்போது வரை ஆண்ட்ராய்டு அல்லது வியர் ஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தி வரும் இயங்கி வரும் டிவைசுகள் அனைத்தும் ஆன்லைனில் இன்டர்நெட்டில் இணைந்து இருந்தால் மட்டுமே அதன் லொகேஷனை சரியாக பார்க்க முடியும். மேலும் அவ்வாறே லொகேஷனை டிராக் செய்தாலும் நம்மால் டிவைஸை லாக் செய்ய முடியும், நம்முடைய அக்கவுண்ட்டை சைன் அவுட் செய்ய முடியும், அது மட்டுமல்லாமல் மொத்த டேட்டாவையும் ஃபார்மேட் செய்ய முடியும். இந்த மூன்று விதமான வசதிகள் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.

ஒருவேளை டிவைஸ் ஆனது ரிமோட் மூலம் ஃபார்மேட் செய்யப்படும் பட்சத்தில், அதன் பிறகு மீண்டும் எப்போதும் உங்களால் டிவைஸ் சர்வீஸை பயன்படுத்தி உங்களது மொபைலை கண்டுபிடிக்க முடியாது. மேலும் உங்கள் மொபைலை வைத்துள்ள யாரேனும் மொபைலை ரீசெட் செய்தாலும் ஃபைண்ட் மை டிவைஸ் செயலி வேலை செய்யாது.

இந்த காரணங்கள் தான், தன்னுடைய புதிய அப்டேட் ஆக ஆண்ட்ராய்டு மற்றும் வியர் ஓ எஸ் இயங்குதலங்களில் இனிவரும் காலங்களில் மொபைல் திருடு போனாலும் அல்லது காணாமல் போனாலும் ஆன்லைனிலேயே அதன் லொகேஷனை நம்மால் கண்டறிய இயலும். மேலும் சாம்சங் மற்றும் ஆப்பிள் டிவைஸ்களில் உள்ளது போல இவை என்க்கிரிப்டட் செய்யப்பட்டுள்ளதால், உங்களைத் தவிர வேறு யாரும் உங்களது மொபைலின் லொகேஷனை கண்டறிய முடியாது என்பது கூடுதல் வசதி ஆகும்.

ஆனால் தற்போது வரை கூகுள் எப்போது இந்த வசதியை அறிமுகப்படுத்தப் போகிறது என சரியான விவரங்கள் ஏதும் தெரியவில்லை. இந்த டிசம்பர் மாத இறுதிக்குள் தனது இறுதி கட்ட சோதனையை முடித்து, ஆண்ட்ராய்டு 14 வெர்ஷனுடன் சேர்ந்து அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Google, Online, Technology