• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Hangouts-லிருந்து Chat-க்கு மாற யூஸர்களை கூகுள் கட்டாயப்படுத்துவது ஏன்?

Hangouts-லிருந்து Chat-க்கு மாற யூஸர்களை கூகுள் கட்டாயப்படுத்துவது ஏன்?

google hangouts

google hangouts

Google Chat-ஐ பயன்படுத்துவது, ஒருவரிடம் இருக்கும் புதிய காரை எடுத்து கொண்டு, பழுது பார்க்காத மிகவும் பழைய வாகனத்தை ஓட்ட அவரை கட்டாயப்படுத்துவது போல இருக்கிறது என்று ஒரு யூஸர் பிளே ஸ்டோர் ரிவ்யூவில் குறிப்பிட்டுள்ளார்.

  • Share this:
கூகுள் தனது ஹேங்கவுட் யூஸர்களை புதிய டெக்ஸ்ட் மெசேஜிங் app-ஆன கூகுள் சாட்-ஐ (Google Chat) பயன்படுத்த தீவிரமாக கூறி சுமார் 1 மாதம் ஆகிவிட்டது. யூஸர்களை தனது புதிய Chat app-ஆன Google Chat-ஐ பயன்படுத்த அறிவுறுத்தும் வகையில் "Chat-க்கு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது,"Hangouts முடிவடைய உள்ளது, எனவே இப்போது நீங்கள் Google Chat-க்கு மாறவும்" என்று ஹேங்கவுட் app பேனர் மூலம் டிஸ்ப்ளே செய்யப்பட்டு வருகிறது. பிஸினஸ் யூசர்களுக்கான மாற்றம் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், கூகுள் பர்சனல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களை Google Chat-க்கு மாறும்படி தற்போது கூகுள் கேட்கிறது.

கூகுள் ஹேங்கவுட்ஸ் யூஸர்களுக்கான இந்த மாற்றம் பல வாரங்களாக, பல கட்டங்களாக, ஜிமெயில் மற்றும் பிற கூகுள் அப்ளிகேஷன்களுக்காக வெளிவரும் கூகுள் வொர்க்ஸ்பேஸ் பிராண்டிங்கோடு சேர்ந்து வருகிறது.

Also Read:  தமிழக பட்ஜெட்டில் 10 முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

எனினும் கூகுள் நிறுவனத்தின் ஹேங்கவுட் டூ சேட் கட்டாய மற்ற நடவடிக்கை யூசர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்பது கூகுள் பிளே ஸ்டோரில் Chat app-ற்கு கிடைத்து வரும் ஸ்டார் ரேட்டிங் வெளிப்படுத்துகிறது. ஹேங்கவுட்ஸில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இல்லாத புதிய app-ஆக கூகுள் சாட் இருப்பதால், இதன் மூலம் பெரியளவில் யூஸர்கள் ஈர்க்கப்பட்டதாக தெரியவில்லை.

குறிப்பாக Hangouts-லிருந்து Google Chat-க்கு மாறிய யூஸர்கள் சேட் செய்வதற்கு ஆடியோ அல்லது வீடியோ கால்ஸ் செய்வதற்கான ஆப்ஷன்கள் இல்லாதது மிகப்பெரிய மைனஸ் என்று புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இவ்வசதி Hangouts-ல் இருக்கிறது. பிளே ஸ்டோரில் கூகுள் சாட்டில் கஸ்டமைஸ்ட் ஆப்ஷன்கள் இல்லாததையும், எஸ்எம்எஸ் மற்றும் ஸ்டிக்கர்ஸ் ஸபூர்ட் இல்லாததையும், மீடியாவை அட்டாச் செய்வதற்கு பிரத்யேக கேலரி பிரவுசர் ஏதும் இல்லை என்பதையும் யூசர்களின் ரிவ்யூக்கள் சுட்டி காட்டி இருக்கின்றன. ஒரு சில யூஸர்கள் ஹேங்கவுட்டை விட மோசமானது கூகுள் சாட் மோசமாக இருக்கிறது என்று விமர்சித்துள்ளனர்.

Also Read:  காந்தகார் நகரை கைப்பற்றிய தலிபான்கள்: ஆப்கானிஸ்தானின் 2வது பெரிய நகரும் வீழ்ந்தது!

Google Chat-ஐ பயன்படுத்துவது, ஒருவரிடம் இருக்கும் புதிய காரை எடுத்து கொண்டு, பழுது பார்க்காத மிகவும் பழைய வாகனத்தை ஓட்ட அவரை கட்டாயப்படுத்துவது போல இருக்கிறது என்று ஒரு யூஸர் பிளே ஸ்டோர் ரிவ்யூவில் குறிப்பிட்டுள்ளார். யூஸர்களின் அதிருப்தி கமெண்ட்ஸ்களுக்கு பதிலளித்துள்ள கூகுள், விரைவில் அனைத்து குறைகளும் தீர்க்கப்பட்டு கட்டாயம் மேம்படுத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி Google Chat பெரும்பாலான வழிகளில் Hangouts-ஐ விட மோசமாக இருக்கிறது என்பதையே யூசர்களின் கருத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. Google Chat-ற்கு சிங்கிள் ஸ்டார் கொடுத்துள்ள யூஸர் ஒருவர் குறிப்பிடுகையில், "குறைந்தபட்சம் தற்போது ஹேங்கவுட்ஸில் இருக்கும் ஆப்ஷன்கள் அளவிற்காவது இருக்குமாறு Google Chat சரி செய்யப்பட்டு முழு பயன்பாட்டிற்கு விட்டால் சரி. இல்லையென்றால் கூகுள் அல்லாத போட்டியாளர்களை விட Google Chat மெசேஜிங்கில் மிக மிக மோசமான செயல்பாட்டை கொண்டிருக்கும்" என்று கூறி இருக்கிறார். மேலும் உங்கள் சமீபத்திய ஹேங்கவுட்ஸ் சேட்கள், Google Chat-ல் உங்களுக்காக ரெடியாக உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விரைவில் ஹேங்கவுட்ஸ் போய் விடும். எனவே உடனடியாக Gmail-ல் Chat-க்கு மாறவும் என்ற எச்சரிக்கை மெசேஜ் அவ்வப்போது ஹேங்கவுட்ஸ் யூஸர்களுக்கு வந்தாலும், முழுமையாக ஹேங்கவுட்ஸ் எப்போது செயல்பட்டிலிருந்து விலக்கி கொள்ளப்படும் என்ற அதிகாரப்பூர்வ தகவலை கூகுள் இன்னும் வெளியிடவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: