வாட்ஸ் அப் போலவே எஸ்.எம்.எஸ்ஸையும் கணினியில் பார்க்கலாம்..

வாட்ஸ் அப் போலவே எஸ்.எம்.எஸ்ஸையும் கணினியில் பார்க்கலாம்..
  • News18
  • Last Updated: December 10, 2018, 1:03 PM IST
  • Share this:
வாட்ஸ் அப்பை போன்று எஸ்.எம்.எஸ்.களையும் கணினியில் எளிதாக பார்க்கும் வசதியை கூகுள் வழங்குகிறது.

வாட்ஸ் அப் வந்ததிலிருந்து எஸ்.எம்.எஸ் மீதான நாட்டம் செல்பேசி பயன்படுத்துவோரிடம் குறைந்தது. வணிக தகவல்களும், வங்கி பண பரிவர்த்தனைக்கான ஓ.டி.பி. எண்ணும் மட்டுமே எஸ்.எம். எஸ்சில் நிரம்பிக் கிடக்கும். சிலருக்கு அந்த எஸ்.எம்.எஸ்சை எப்படி கணினியிலேயே பார்க்கலாம் என்ற ஆவல் எழலாம். அவர்களுக்கான தீர்வை கூகுள் தனது ஆண்டிராய்டு இயங்குதளம் மூலம் நிறைவேற்றியுள்ளது.
இதை எப்படி பயன்படுத்துவது?

  1. ஆண்டிராய்டு போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் Google Message என்று டைப் செய்து ஆப்பை நிறுவவும்.
  2. அப்ளிகேஷனை திறந்து வலது மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளிகளை தொடவும்.

  3. அதில் தோன்றும், Messages For Web என்பதை தொடவும்

  4. கணினி ப்ரவுசரை திறந்து அதில் https://messages.android.com/ திறக்கவும்

  5. செல்பேசியில் உள்ள ஸ்கேனரை கணினி திரையில் தோன்றும் க்யூ.ஆர். கோடை காட்டினால் மெசேஜ்கள் அனைத்து திரையில் தோன்றும்.

  6. இந்த சேவை வாட்ஸ் அப்பில் உள்ள வாட்ஸ் வெப் சேவை போன்றதாகும்.

  7. கணினியில் இருந்து கொண்டே எஸ்.எம்.எஸ்.ஸும் அனுப்பலாம்.


குறிப்பு: இந்த வசதியை முழுமையாக பெற இணைய இணைப்பு தேவை.
First published: September 25, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading