கூகுள் Wi -Fi செயலி நிறுத்தம்? பயனாளர்கள் உடனடியாக இந்த செட்டிங்கை மாற்றுங்கள்

கூகுள் நிறுவனம்

கூகுள் வைஃபை செயலி வரும் மே மாதம் முதல் நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

  • Last Updated :
  • Share this:
    கூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பின்படி, தன்னுடைய ஸ்மார்ட் ரவுட்டர்களின் function control-ஐ கூகுள் வைஃபை பயன்பாட்டில் இருந்து முற்றிலுமாக நீக்க திட்டமிட்டுள்ளது. மேலும், நீக்கப்படும் ஸ்மார்ட் ரவுட்டர்களின் கன்ட்ரோலானது கூகுள் ஹோம் உடன் இணைக்கப்படவுள்ளது. தற்போது கூகுள் வைஃபை செயலி மூலம் Google WiFi மற்றும் OnHub routers கட்டமைக்கபட்டு செயல்பாட்டில் உள்ளன. வைஃபை செயலி மூலம் இணைய வேகத்தை அறிந்து கொள்வதுடன், பாஸ்வேர்டு உள்ளிட்ட மற்ற அமைப்புகளையும் யூசர்கள் மாற்றிக்கொள்ள முடியும்.

    இந்நிலையில், மே 25 ஆம் தேதிக்குப் பிறகு இந்த செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட உள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் வைஃபை செயலி நிறுத்தம் குறித்து கூகுள் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யூசர்களின் தனிப்பட்ட மெயில்களுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. இந்த செயலி முற்றிலுமாக ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் ஃபிளே ஸ்டோரில் இருந்தும் நீக்கப்பட உள்ளது. ஒருவேளை யூசர்கள் மே 25 ஆம் தேதிக்குப் பிறகு கூகுள் வைஃபை செயலியை செல்போனில் பயன்படுத்தினால் கூட, வைஃபை மற்றும் ஒன்ஹப் ரவுட்டர்களின் செட்டிங்ஸை அந்த செயலியில் இருந்து மாற்ற முடியாது என கூகுள் தெரிவித்துள்ளது.

    உங்களின் கூகுள் வைஃபை மற்றும் ஒன்ஹப் ரவுட்டர்களில் மாற்றம் செய்ய விரும்பினால், கூகுள் ஹோம் பக்கத்துக்கு சென்று அங்கு புதிதாக கொடுக்கப்பட்டிருக்கும் செட்டிங்ஸில் தேவையான மாறுபாடுகளை செய்து கொள்ளலாம். கூகுள் வைஃபை நீக்கப்படுவதால் அந்த தகவல்களை நீங்கள் பெற முடியாது என பயப்படத் தேவையில்லை. கூகுகள் வைஃபை - ஐ அப்படியே கூகுள் ஹோம் பக்கத்துக்கு மாற்றிக்கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளையும் கூகுள் அறிவித்துள்ளது. தற்போது இருக்கும் கூகுள் வைஃபை செயலியில் Add on மூலம் வைஃபை மற்றும் ரவுட்டர்களுக்கு நெஸ்ட் வைஃபை மற்றும் நெஸ்ட் ரவுட்டர்களை இணைத்துக் கொள்ளும் அம்சத்தையும் கூகுள் கொடுத்துள்ளது.

    இந்த Add On ஆப்சன் மூலம் வைஃபை செயலியில் இருந்து அடிப்படை மாற்றங்களை செய்துகொள்ள கூகுள் அனுமதிக்கிறது. அதாவது, வைஃபை தொடர்பை மாற்ற அல்லது புதிய வைஃபையுடன் இணைத்துக் கொள்ளலாம். மேலும், வைஃபையின் பெயரையும் மாற்றிக்கொள்ளலாம். வைஃபைக்கு முதன்முறையாக கூடுதல் உதவிகளை கொடுக்கும் அம்சத்தை கூகுள் நிறுவனம் வழங்கியுள்ளது. ஒருவேளை கூகுள் வைஃபை அமைப்புகளில் மாற்றம் தேவைப்பட்டால், கூகுள் வாய்ஸ் மூலம் உங்களின் கோரிக்கையை தெரியப்படுத்த முடியும். இந்த புதிய அமைப்பு மூலம் கூகுளின் வைஃபை-ஐ ஆன் அல்லது ஆப் செய்யலாம்.

    இன்டர்நெட் ஸ்பீடு, வைஃபை பாஸ்வேர்டு ஆகியவற்றை பார்த்துக்கொள்ளலாம். ஒருவேளை கூகுள் ஹோமுடன், கூகுள் வைஃபை இணைக்கப்படாவிட்டால், அதனுடன் இணைக்கப்படும் வரை உங்கள் தகவல்கள் கூகுள் வைஃபை செயலியில் தொடர்ந்து இருக்கும். யூசர்களின் ஒப்புதலுடன் மட்டுமே கூகுள் ஹோமுடன் வைஃபை இணைக்கப்படும் என தெரிவித்துள்ள கூகுள், மே 25 ஆம் தேதிக்குப் பிறகு செயலியில் கூடுதல் அம்சங்கள் பயன்பாட்டில் இருக்காது என்பதால், அதற்கு முன்னதாக கூகுள் ஹோமுடன், வைஃபையை இணைத்துவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

     
    Published by:Vijay R
    First published: