ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

Google Warns : இந்த 5 விஷயங்களில் மிகவும் கவனமா இருங்க - கூகுள் எச்சரிக்கை

Google Warns : இந்த 5 விஷயங்களில் மிகவும் கவனமா இருங்க - கூகுள் எச்சரிக்கை

கூகுள்

கூகுள்

விடுமுறை கால ஸ்பெஷல் விற்பனை என்று பலரும் குறைந்த விலையில், சலுகை விலையில் கவர்ச்சிகரமான தள்ளுபடியில் பொருட்கள் கிடைக்கிறது என்று வாங்கி ஏமாந்து போகின்றனர்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

பண்டிகை கால விற்பனை, மாதாந்திர தள்ளுபடி விற்பனை, தீபாவளி சலுகை விற்பனை என்று வெளிநாடுகளில் இருப்பதைப் போலவே இந்தியாவிலும் வணிக நிறுவனங்கள், ஆன்லைன் தளங்கள் மிகப்பெரிய அளவில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை அறிவித்து, சலுகை விலையில் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன.

வெளிநாடுகளில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தேங்க்ஸ் கிவிங், ஹாலோவீன், கிறிஸ்மஸ், புத்தாண்டு என்று விடுமுறை காலமாக அறிவிக்கப்படும். இந்த நாட்களில் ஸ்பெஷலான விற்பனைகள் மேற்கொள்ளப்படும். இதே போன்ற பாணி தற்போது இந்தியாவிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு விடுமுறை கால ஸ்பெஷல் விற்பனை என்று பலரும் குறைந்த விலையில், சலுகை விலையில் கவர்ச்சிகரமான தள்ளுபடியில் பொருட்கள் கிடைக்கிறது என்று வாங்கி ஏமாந்து போகின்றனர்.

இந்நிலையில், கூகுள் விடுமுறை கால விற்பனையில் நடக்கும் மோசடிகள் பற்றி எச்சரிக்கை அறிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. நீங்கள் ஹாலிடே சீசன் ஷாப்பிங் செய்ய விரும்பினால், இந்த ஐந்து விஷயத்தை தவிர்க்க வேண்டும். இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

 • பரிசு அட்டைகள்
 • கிவ்அவே பரிசுகள் / சாரிட்டி சார்ந்த பரிசுகள்
 • இருப்பிடம் சார்ந்த மோசடிகள்
 • சந்தா புதுப்பிப்பு
 • கிரிப்டோ மோசடிகள்
 • உலகின் மிகப் பெரிய டெக் நிறுவனமான கூகுள், ஒரு நாளைக்கு 1.5 கோடி செய்திகளை பிளாக் செய்கிறது என்றும், இதில் 99.9 சதவிகித செய்திகள் மோசடி, ஃபிஷிங் மற்றும் மால்வேர் ஆகியவை என்று நிறுவனம் சமீபத்தில் பகிர்ந்த தன்னுடைய வலைப்பூவில் தெரிவித்திருக்கிறது.

  பரிசு அட்டைகள் பற்றி அனைவரும் அனைவருமே அறிந்திருப்பீர்கள். ₹1000 மதிப்புள்ள கிஃப்ட் கார்டு உங்களுக்கு ₹300 க்கு கிடைக்கும் என்பது போன்ற மோசடி செய்திகள் உங்களுக்கு வரலாம். அதேபோல விடுமுறை காலத்தில் கிவ்-அவே மோசடிகளும் அதிகரித்து இருக்கின்றன. உதாரணமாக தங்களுக்கு தேவை இல்லாத பொருட்கள் அல்லது வாங்கி ஓரிரு முறை மட்டுமே பயன்படுத்திய பொருட்களை மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதாக அல்லது இலவசமாக கொடுப்பதாகவும் அதற்கு டெலிவரி கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்பது போன்ற மோசடிகள் அதிகரித்து இருக்கின்றன.

  Also Read : இனி செம ஈசி.. Paytmல் சூப்பர் அப்டேட்.! மற்ற UPI பயனர்களுக்கு பணம் அனுப்ப புது வசதி!

  இவ்வாறு செய்திகள் அனுப்பி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது இது ஒருபக்கம் இருக்கையில், மிகவும் பரிச்சயமான ஒரு நபரைப் போல அறிமுகப்படுத்திக் கொண்டு, தனக்காக ஒரு பரிசு அட்டை வாங்கி அனுப்ப வைக்கும் மோசடியும் நடந்து வருகின்றது.

  அதே போல, கிரெடிட் கார்டு எண்ணை பதிவு செய்தால், அதற்கு இலவச பரிசு என்று மோசடியும் அதிகரித்துள்ளது.

  பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது எந்த அளவுக்கு நல்ல விஷயமாக தெரிகிறதோ, அதே அளவுக்கு மிக மிக ஆபத்தானதும் கூட.

  டொனேஷன் செய்வது சம்பந்தப்பட்ட ஏமாற்று வேலை மற்றும் மோசடிகள் உங்களை மட்டுமல்லாமல், நீங்கள் உதவுவதாக நினைத்து ஏமாறும் தொண்டு நிறுவனத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நீங்கள் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுது, அதை நேரடியாக செய்யுங்கள்.

  இதற்கு அடுத்ததாக, அடையாளம் சம்மந்தப்பட்ட மோசடி மின்னஞ்சல்களைப் பெரும் பொழுது கவனமாக இருக்குமாறு கூகுள் தெரிவித்துள்ளது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் ப்ரோமோஷன் ஈமெயில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடக்கும் நிகழ்வுகள், உள்ளூரில் நடக்கக்கூடிய பெற்றோர் ஆசிரியர் பங்கேற்பு கூட்டம் ஆகியவை.

  பெரும்பாலானவர்கள் சப்ஸ்கிரிப்ஷன் ரிநீவல் என்று கூறப்படும் சந்தா புதுப்பிப்பில் ஏமாந்து விடுகிறார்கள். ஓடிடி தளம், மொபைல் ரீசார்ஜ், உள்ளிட்ட பலவிதமான சந்தா புதுப்பிப்புகள் கவர்ச்சிகரமான சலுகையில் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளலாம் என்பது போன்று உங்களுக்கு வரும் பெரும்பாலான விளம்பரங்கள் போலியானவை. அது மட்டும் நீங்கள் பணம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை உங்கள் மொபைல் அல்லது கணினியில் வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. இதன் மூலம் உங்களுடைய தரவுகள் அனைத்தும் திருடப்படலாம். குறைந்த விலையில் கிரிப்டோ முதலீடு என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

Published by:Vijay R
First published:

Tags: Google