"யம்மாடி.... ரூ.65,000 கோடியா....?" - ஆப்பிள் நிறுவனத்திற்கு வழங்குகிறது கூகுள்!

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆப்பிள் நிறுவனத்திற்கு கூகுள் செலுத்தும் ஆண்டு கட்டணம் இந்தாண்டு 9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 65,000 கோடியாகும். 

  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனின் பிரவுசராக சஃபாரி உள்ளது. ஐபோன் பயன்பாட்டாளர்கள் இணையத்தை சஃபாரி பிரவுசராக வழியே பயன்படுத்தி வருகின்றனர். இந்த பிரவுசரின் சர்ச் இன்ஜினாக தற்போது கூகுள் உள்ளது. இதற்காக கூகுள் நிறுவனம் பல்லாயிரம் கோடிகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது.

  ஐபோன் பயன்பாட்டாளர்களை அதிகளவில் கொண்டுள்ள கூகுள், அதனை தக்க வைப்பதற்காக தொடர்ந்து பல்லாயிரம் கோடிகளை வழங்கி வருகிறது. இந்தாண்டு இதற்காக கூகுள் நிறுவனம் 9 பில்லியன் டாலர்களை வழங்குகிறது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.65,000 கோடிகள்.

  இந்த தொகை அடுத்த ஆண்டு 12 பில்லியன் டாலர்களாக அதாவது சுமார் ரூ.87,000 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகளான லேரி பேஜ் மற்றும் செர்கிரே பிரின் ஆகியோர் 1995-இல் தொடங்கிய கூகுள், தற்போது உலகின் முன்னணி சர்ச் இன்ஜினாக திகழ்கிறது.

  ஆப்பிள் வாடிக்கையாளர்கள் கூகுள் சர்ச்ஜ் இன்ஜினை பயன்படுத்துவதால் அதில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளை கூகுள் நிறுவனம் லாபமாக பெறுவது குறிப்பிடத்தக்கது.
  Published by:SPDakshina Murthy
  First published: