ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

10,000 ஊழியர்களை நீக்க முடிவு.. பணிநீக்க ட்ரெண்டில் இணையும் கூகுள்.. ஷாக்கில் ஊழியர்கள்!

10,000 ஊழியர்களை நீக்க முடிவு.. பணிநீக்க ட்ரெண்டில் இணையும் கூகுள்.. ஷாக்கில் ஊழியர்கள்!

கூகுள்

கூகுள்

இந்த ஆண்டு  6% பணியாளர்கள் அதாவது சுமார் 10,000 பேரை செயல்திறன் குன்றியவர்கள் என்ற அடிப்படையில் அடையாளம் காண கூகுள் மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  ட்விட்டர், அமேசான். மெட்டா போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தற்போது தங்கள் பணியாளர்களை நீக்கி வரும் நிலையில் கூகுளும் தனது பணியாளர்களில் சிலரை படிப்படியாக குறைக்க முடிவு செய்துள்ளது.

  கூகுள் செயல்திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10,000 பணியாளர்களை படிப்படியாக பணிநீக்கம் செய்ய உள்ளது. ஹெட்ஜ் நிதியத்தின் அழுத்தம், சாதகமற்ற சந்தை சூழ்நிலைகள் மற்றும் செலவுகளைக் குறைக்க வேண்டியதன்  காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த செயல்திறன் மதிப்பீடுகளைப் பெறும் ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ஊக்கத்தொகைகள் மற்றும் பங்குகள் வழங்குவதைத் தடுக்க புதிய செயல்திறன் அமைப்பில் மதிப்பீடுகள் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. வழக்கமான ஆண்டுக்கு 2% பணியாளர்கள் நீக்கப்படுவார்கள். அதற்கு பதிலாக திறன் மிக்க பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்.

  இதையும் படிங்க: நிலவின் அழகே தனி... 6வது நாளில் சந்திரனுக்கு மிக அருகில் பறந்த நாசாவின் ஆர்ட்டெமிஸ்-1​​

  அதற்கு மாறாக, இந்த ஆண்டு  6% பணியாளர்கள் அதாவது சுமார் 10,000 பேரை செயல்திறன் குன்றியவர்கள் என்ற அடிப்படையில் அடையாளம் காண கூகுள் மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை வெளியில் இருந்து படிப்படியாக நீக்க உள்ளனர்.

  ஹெட்ஜ் ஃபண்ட் பில்லியனர் கிறிஸ்டோபர் ஹோன், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்கு அனுப்பிய செய்தியில் உலகில் உள்ள மற்ற வலைதள நிறுவனங்களைக் காட்டிலும் கூகுளில் தான் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்கள் உள்ளனர். சம்பளம் என்பதும் மிக அதிகம்.

  தற்போதைய வணிகச் சூழலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பொருளாதாரத்தையும் சமநிலையில் கவனித்துக்கொள்ள குறைவான நிபுணர்களைக் கொண்டு திறம்பட நிர்வகிக்க முடியும் என்று வலியுறுத்துனார்.யுஎஸ் செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் ஆல்பாபெட் ஊழியரின் சராசரி சம்பளம் சுமார் $295,884 (இந்திய மதிப்பில் சுமார் 2,41,77,732) ஆகும்.

  மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களுக்கு வழங்கிய சம்பளத்தை விட 70% அதிகம். அமெரிக்காவில் உள்ள 20 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய ஊதியத்தை விட ஆல்பாபெட் தனது ஊழியர்களுக்கு 153% அதிக ஊதியம் வழங்கியது

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Google