Home /News /technology /

இனி ஆன்ட்ராய்டு போன்களில் கால் ரெக்கார்டிங் செயலிகள் வேலை செய்யாது.. கூகுளின் அதிரடி!

இனி ஆன்ட்ராய்டு போன்களில் கால் ரெக்கார்டிங் செயலிகள் வேலை செய்யாது.. கூகுளின் அதிரடி!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Call recording | ஏற்கெனவே பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் கால் ரெக்கார்டிங் செயலிகளும் இன்று முதல் செயல்படாது.

    ஆன்ட்ராய்டு இயங்குதளம் மூலம் செயல்படும் ஸ்மார்ட் போன்களில், அழைப்புகளை பதிவு செய்யும் செயலியை, கூகுள் தடை செய்துள்ளது. 

    பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை மேம்படுத்தும் விதமாக கூகுள், அதன் Play Store கொள்கையில் மாற்றங்களை செய்துள்ளது.

    புதிய விதியின்படி, அழைப்புகளை பதிவு செய்யும் Call Recording செயலி, கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படுகிறது.

    இதனால், அழைப்புகளை பதிவு செய்யும் செயலியை, பதிவிறக்கி ஆன்ட்ராய்டு மொபைலில் பயன்படுத்த முடியாது.

    ஏற்கெனவே பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் கால் ரெக்கார்டிங் செயலிகளும் இன்று முதல் செயல்படாது.

    செல்போனில் கால் ரெக்கார்டிங் வசதி In-build ஆக இருந்தால் அந்த செயலிக்கு தடை இல்லை என்றும் கூகுள் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

    பயனர்கள் மத்தியில் பிரபலமான TRUE காலர் செயலி, அழைப்புகளை பதிவு செய்யும் வசதியை கொடுத்து வந்தது. இதன் மூலம் ஏராளமானோர் தமக்கு வரும் அழைப்புகளை பதிவு செய்து வந்தனர். இனி TRUE காலர் செயலியிலும், அழைப்புகளை பதிவு செய்யும் வசதி இல்லை.

    கால் ரெக்கார்டிங் செயலிகள் பயனாளர்களிடம் இருந்து பல வகையான தகவல்களை பெற்று, அதனை தவறாக பயன்படுத்துவதாக சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், கூகுள் புதியை கொள்கையை நடைமுறைப்படுத்தி உள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Android, Google, Google play Store

    அடுத்த செய்தி