டிஜிட்டல் பேமெண்ட்டில் களமிறங்கும் கூகுள்!

news18
Updated: September 4, 2018, 11:31 AM IST
டிஜிட்டல் பேமெண்ட்டில் களமிறங்கும் கூகுள்!
கூகுள் பே
news18
Updated: September 4, 2018, 11:31 AM IST
உலகின் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தப்படும் சர்ச் என்ஜினான கூகுள் தற்போது தன் பயனாளர்களுக்கு கடன் வழங்கும் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் கூகுள் மேப், நியூஸ் டிரண்ட், டிரைவ் என பல சேவைகளை, பயனாளர்களின் தேவையை அறிந்து கொடுத்துவருகிறது. இந்நிலையில் பணப் பரிவர்த்தனைக்கும் வங்கிகளுடன் இணைந்து கடன் வழங்கும் சேவையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இணைய உதவியுடன் பணப் பரிவர்த்தனை செய்யும் முறை பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் கூகுள் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் நான்கு முன்னணி வங்கிகளான ஹெச்.டி.எஃப்.சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா பேங்க் மற்றும் ஃபெடரல் வங்கி ஆகியவற்றுடன் இணைந்து ஒரு ட்ரில்லியன் டாலர் இலக்குடன் டிஜிட்டல் நிதி சேவை வழங்கும் திட்டத்தைக் கடந்த வாரம் தொடங்கியுள்ளது.கூகுள் நிறுவனம் கடந்த வருடம் செப்டம்பர் இறுதியில் அறிமுகப்படுத்திய கூகுள் டெஸ் என்ற செயலி ஏற்கெனவே சில அடிப்படை நிதி சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது இந்த கூகுள் டெஸ் செயலியை கூகுள் பே என்று பெயர் மாற்றம் செய்து, இந்த செயலி மூலமாக, சில வங்கிகளுடன் இணைந்து உடனடி கடன்களையும், இன்னபிற நிதி சார்ந்த சேவைகளையும் வழங்கவிருக்கிறது.

கூகுள் பே செயலியில் கேட்கும் சில ஆவணங்களை சமர்பித்தால் போதும், உங்கள் வங்கிக் கணக்கிற்கு வங்கியிலிருந்து கடன் நேரடியாக வழங்கப்படும். உங்களின் நண்பர்களும் கூகுள் பே ஆப்-பில் இணைந்திருந்தால் அவர்களின் வங்கிக் கணக்கிற்கும் பணம் அனுப்ப முடியும். கூகுள் பே மூலம் இணைய வழியாக பொருட்கள் வாங்கவும், மாதாந்திர பில்களையும் கட்டலாம்.

Loading...
ப்ளே ஸ்டோரில் கூகுள் ஆப்-பை  தரவிறக்கம் செய்து, பின் உங்கள் ஆப்க்கான பாஸ்வோர்ட் கொடுங்கள். உங்களின் வங்கிக் கணக்கை கூகுள் பே ஆப் - உடன் இணைத்து நிதி சார்ந்த  சேவையை பெறலாம்.
First published: September 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்