முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / எனக்கே போட்டியா? உஷாரான கூகுள்.. ChatGPTக்கு இணையாக களமிறங்கும் கூகுளின் AI..!

எனக்கே போட்டியா? உஷாரான கூகுள்.. ChatGPTக்கு இணையாக களமிறங்கும் கூகுளின் AI..!

கூகுள் புதிய AI

கூகுள் புதிய AI

AI தொழில்நுட்பத்தில் ChatGPT இன் அறிமுகம் மிக பெரிய தொழில்நுட்ப வளர்ச்சியில் அடையாளமாக திகழ்கிறது. குறைந்த காலக்கட்டத்திலேயே அதிக அளவில் பயனர்களை பெற்றுள்ள ChatGPT போட்டியான கூகுள் நிறுவனம் விரைவில் புதிய AI தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமீப காலமாக AI தொழில்நுட்பம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. உலகில் இயங்கி வரும் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் செயற்கை நுண்ணறிவில் முதலீடு செய்கிறார்கள். திரைப்படங்களில், புத்தகங்களில் படித்தது எல்லாம் உண்மையாகும் அளவிற்கு செயற்கை நுண்ணறிவு பிரமாண்டமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் நிலைகளை கணித்து சொல்லும் அளவிற்கு அதனின் வளர்ச்சி இருக்கிறது. அசுர வளர்ச்சி அடையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் chatGPT களம் பெரியளவிலான வரவேற்பை பெற்றுள்ளது.

கூகுள் தேடலுக்கு போட்டியாக chatGPT களம் இறங்கியிருப்பது கூகுளை கொஞ்சம் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்று கூறலாம். தொழில்நுட்ப உலகில் ஜாம்பவானாக இருக்கும் கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தலத்தில் ஏற்கனவே ஏகப்பட்ட கருவிகளையும், தளங்களையும் அறிமுகம் செய்து வந்தது. இருப்பினும் சமீபத்தில் OpenAI இன் ChatGPT இணையதள உலகம் முழுவதிலும் கணிசமான யூசர்களையும் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது. கூகுளுக்கு போட்டியாக ChatGPT செயற்கை நுண்ணறிவு AI உலகில் மிகப்பெரிய போட்டியாக இருப்பதாக கருதப்பட்டு வரும் நிலையில், வரும் மே மாதம் கூகுளின் செயற்கை நுண்ணறிவு கருவி அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல், குறைந்த பட்சம் 20 கருவிகளையாவது கூகுள் அறிமுகம் செய்ய இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு மே மாதம் நடக்க இருக்கும் டெவலப்பர்களின் கருத்தரங்கில் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கருவிகள் வரிசை கட்டி நிற்கும் என்று எதிர்பார்க்கலாம்.

என்ன தகவல்களை வேண்டுமானாலும் கூகுள் தேடலில் பெற முடியும். ஆனால் கூகுள் தேடலில் நாம் தேடும் தகவல்களை விட அதற்கு சம்பந்தப்பட்ட இணை தகவல்களும் சேர்ந்து கிடைக்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவுயில் இயங்கும் chatGPTயைப் பொறுத்தவரை என்ன தேடுகிறோமோ துல்லியமாக அது சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கொடுப்பது என்பது மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. எனவே கடந்த சில மாதங்களாக தொழில்நுட்ப உலகில் தங்கள் தேவைப்படும் அனைத்து விஷயங்களையுமே துல்லியமாக மக்களை பெரிதாக கவர்ந்துள்ளது.

கூகுளின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, இதனை ‘கோட் ரெட்’ என்று கூறியுள்ளார். கூகுளின் தேடல் வணிகத்துக்கு, chatgpt மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த பெயர் வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இமேஜ் உருவாக்கம், வீடியோ எடிட்டிங், வீடியோ பேக்கிரவுண்ட் மாற்ற உதவும் அம்சங்கள் என்று எல்லாவற்றிலும் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது.

Also Read : பாட்டு எழுதி கொடுத்தால் மெட்டு தானாக வரும்... கூகுள் நிறுவனத்தின் டெக்ஸ்ட்-டு மியூசிக் டூல் இதோ!

இதே போல கருவிகள் மட்டுமல்லாமல், பிக்சல் போன்களுக்கு வால்பேப்பர் உருவாக்கும் கருவி, மற்றும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் வேறு சில அம்சங்களையும் கூகுள் வழங்க இருக்கிறது.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போலவே ஆண்ட்ராய்டு செயலிகளை உருவாக்கும் செயற்கை நுண்ணறிவையும் கூகுள் உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை ஆண்ட்ராய்டு செயலிகளை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம் என்பதற்கு உதவக்கூடிய செயற்கை நுண்ணறிவு கருவியை கூகுள் தளம் வெளியிட்டால் ஆண்ட்ராய்டு சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும். அது மட்டும் இல்லாமல் கூகுள் நிறுவனத்தின் தலைவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரையுமே சுந்தர் பிச்சை தற்போதைய தலைவர்களுடன் சந்தித்து செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் பற்றி விவாதித்து என்ன செய்யலாம் என்பதை பற்றி முடிவு செய்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

First published:

Tags: Artificial Intelligence, Google, Technology